Monday, May 21, 2012

ராஜபக்சே - திமிர் பேச்சு

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என  அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இலங்கையில் விடு தலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டன. அங்கு இந்தியாவின் நிதி உதவி யுடன் போருக்கு பிந் தைய மறுவாழ்வுப்பணி கள் நடைபெறுகின்றன. சிங்களர்களைப்போல தமிழர்களும் சம மதிப் புடனும், அந்தஸ்துட னும் வாழ ஏற்ற வகை யில், தமிழர்கள் வாழுகிற பகுதிகளிலிருந்து ராணு வத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா, அமெ ரிக்கா, அய்க்கிய நாடு கள் சபை வலியுறுத்தி வருகின்றன. ராஜபக்சே யால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக்குழுவும் இந்த பரிந்துரையை செய்துள்ளது.

சமீபத்தில் வாஷிங் டனில் தன்னை சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எம். பெரீசிடம், இலங்கை யில் தமிழர் பகுதிகளி லிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், மனித உரிமையை பாது காக்க இன்னும் கூடுத லான நடவடிக்கை எடுக்கவேண்டும் என் றும் அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.


வெ(ற்)றி விழாவில் ராஜபச்சே

இந்த நிலையில், இலங் கையில் விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியை கொண் டாட கொழும்பில் அரசு விழா எடுத் தது. இந்த விழாவில் ராஜபக்சே பேசியபோது கூறியதா வது: இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டது. ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடு களில் செயல்படுவோர், வேறு வழிகள் மூலமாக, இலங்கையில் அமைதி யின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு சிலர் கோரிக்கை விடுக்கின் றனர் என்பதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணு வத்தினரை திரும்ப பெற முடியாது. ராணுவ முகாம்களை அகற்ற முடியாது. ராணுவ முகாம் களை அகற்றுவதன் மூலம், நாட்டின் பாது காப்புக்கு ஆபத்தான சூழல் ஏற்படும். தமி ழர்கள் வசிக்கும் பகுதி களில், நிர்வாக பணி களில் ராணுவம் தலையி டுவதாக கூறுவது சரியல்ல.

ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுபவர் கள், போர் முடிவடைந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழர் கள் வசிக்கும் பகுதிகளில் எந்தளவுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என் பதை பார்க்க வேண்டும்.

எங்களின் பிரச்சி னையை, நாங்களே தீர்த்துக் கொள்ள விரும் புகிறோம். எங்களுக்கு உள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க முடி யாது. போரில் நடந்த உரிமை மீறல் பிரச் சினைகள் பற்றி விசா ரிப்பதற்காக அமைக்கப் பட்ட குழு அளித்த பரிந்துரைகளை, செயல்படுத்தி வருகி றோம். இவ்வாறு ராஜபக்சே பேசினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை அகற்ற வேண்டும் என, ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராஜபக்சேயின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியை சந்தித்துப் பேசிய பின் னர் செய்தியாளர்களி டம்  கூறுகையில், "போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப் படும். ஏற்கெனவே இது குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை துவங்கியுள்ளது. இதில் ஒரு முடிவுக்கு வருவ தற்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget