Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, September 17, 2013

எலுமிச்சை பழம் - மூலிகை மருந்து



எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. 

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. 




எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். 

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது. 

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 




எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும். 

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம். 

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும். 
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும். 

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும். 

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது. 

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது. 



ஓட்ஸ் சாப்பிடுங்கள்



ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.




ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. 





தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்.




Friday, May 18, 2012

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு (Prickly Heat)

தடுப்பது எப்படி?

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். 

 


தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம்.அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்;இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது.அப்படி முடியாவிட்டால் தண்ணீர்வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.


சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.



எப்போது மருத்துவரை அணுகுவது?


அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.






 

மாம்பழத்தின் மகிமை





சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்  இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை


மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.  மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது. மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது. விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.




விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்  விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்


குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன anti-oxidant எனப்படும் பொருட்கள்.  அனைத்து பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளில் இவை அதிகம் .


உணவை அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்தவோ வறுக்கவோ பொரிக்கவோ செய்யும்போது அதிலுள்ள anti-oxidant அழிந்து free radical உற்பத்தியாகின்றது. உடலின் பல நோயகளுக்கு (புற்றுநோய்,மாரடைப்பு ,இருதய வியாதி ,இரத்தக்குழாய் குறைபாடு ,நரம்பு மண்டலக் கோளாறு ) இந்த கலகக்காரணிகளே காரணம் (கலகக்காரணி என்றே சும்மா மொழிபெயர்த்துள்ளேன்)




மேலே சொன்ன நன்மைகள் மாம்பழத்தில் மட்டுமே கிடைக்கும் ; புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கைச்சாற்றில் அல்ல 





மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு  வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.




 முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.


இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா..

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்' என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது.


சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.


மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சம அளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!


நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!


பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருது-வாக்கும்.


மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்!


புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.


புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.


மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா? நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன், வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்' மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.


 






DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget