இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.
நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி என்னும் கிராமத்தில் 1960களில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டபோது தலித் பிஞ்சுகள் கருகி சாம்பலாகியிருந்தன.
இந்த சம்பவம் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறது தலித்துகள் பற்றிய டி.என்.கோபாலன் வழங்கும் தொடரும் துயரம் என்னும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம்.
தேவேந்திரகுல வேளாளர் நிலை:
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
சில காலத்துக்கு முன் தென்மாவட்டங்களில் இடைநிலை சாதியினரான முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே மோதல்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன.
சாதிக் கொடுமை பற்றி விழிப்புணர்வு அடைந்த தலித் மக்கள் அந்தத் தளையிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிகளை எடுத்தபோது - பொதுவள ஆதாரங்களில் தமக்கும் பங்கு உண்டு என்று ஆதிக்க சாதியினரிடம் உரிமைகோரியபோது இந்த மோதல்கள் எழுந்தன.
1995ல் திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக பொலிசார் மோசமாக நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் பற்றியும், தென் மாவட்டங்களில் தற்சமயம் நிலைமை எப்படி மாறி வந்துள்ளது என்பது பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.
ஆதி திராவிடர் நிலை:
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1940களிலும், ஐம்பதுகளிலும், பலரும் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் நடந்த பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஆதிதிராவிடர் நிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிதருப்பதாகக் கருதப்படும் அங்கேயும் ஓரே அவலம்.
பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் தலித் பிரிவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மாநிலத்தின் மக்கட்தொகையில் 19 சதம் தலித்துகள் என்றால் ஆதிதிராவிடர்கள் அதில் 70 சதம் இருப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு பெற்ற சமூகமாக அது கருதப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1997ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள மேலவளவில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த அதன் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டனர். எட்டாண்டுகள் பின்னரும் அங்கே தலித்துகள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவே கூறுகின்றனர். மேல்சாதியினரோ பிரச்சினை எதுவுமே இல்லை, எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது என்றனர். வடமாவட்டங்களிலும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது.
பெரம்பலூர் பகுதியில் பருககல் கிராமத்தில் நாம் ஒரு தேனீர்கடையில் இரண்டுவித குவளைகளைப் பார்த்தோம். ஏன் அப்படி எனக் கேட்டபோது கடை உரிமையாளர் பதிலளிக்கமறுத்துவிட்டார். அங்கே இருந்த சில வன்னியர்கள் பாகுபாடு எதுவும் இல்லை என்றனர்.
அண்டைமாவட்டமான கடலூரிலோ சிறுத்த தொண்டமாதேவி என்ற கிராமத்தில் பாதுகாப்பற்ற சில ஆதிதிராவிடவீட்டுப் பெண்களை மேல்சாதியினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக செய்திகள் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தன. தலித் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின் அங்கே நிலைமை கட்டுக்குள் வந்தது.
வன்னியர்களின் பிரதிநிதியாக கருதப்படம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து தமிழ்பாதுகாப்பு இயக்கம் இப்போது நடத்திவருவதால் வடமாவட்டங்களில் பதட்டம் சற்று தணிந்திருப்பதாக கருதப்படுகிறது.
அருந்ததியரின் அவலம்:
கிராமப்புறங்களில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாது, ஜீவிப்பதற்கு முற்றிலுமாக நில உடைமையாளர்களை சார்ந்து நிற்கிறார்கள் அருந்ததியர். நகர்புறங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகளாகவும் , மற்றும் துப்புரவுப் பணியாளர்களாகவும் நாம் இவர்களை சந்திக்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் குருசாமி பல்கலைக்கழக வளாகத்திலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார்.
கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும்கூட கம்பம் நகர அருந்ததியர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் புகார் கூறினார். ஆனால் தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான Late. பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார். தேனிமாவட்டத்தில் ஒரு தலித் ஆர்வலர் அருந்ததியர் பின் தங்கியிருப்பதற்காகன காரணம் அவர்களே என்றார்.
துப்புரவுப்பணியாளர்களாகப் பணியாற்றும் ஆதி ஆந்திரர்கள் என்பவர்களும் அருந்ததியர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்கள் நிலை இன்னமும் பரிதாபத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.
சென்னையைச்சேர்ந்த தொழிற்சங்கத்தலைவர் புருஷோத்தமன் மலம் அள்ளும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்கிறார்.
மதமாற்றம் பலன் தருமா?
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது.
இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்றனர்.
பின்னர் கிறித்தவத்தில் நீதிகிடைக்காத தலித் மக்கள் இஸ்லாத்தை நாடத்துவங்கினர். இப்படியான மதமாற்றங்கள் தலித்துகளின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்ததா, அமையுமா என்பதை இந்தப் பகுதியில் ஆராய்கிறார் எமது டி.என். கோபாலன்.
பொருளாதாரம்:
சாதி இறுக்கங்களுக்கு அப்பால் தலித் மக்களின் பிந்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது வறுமையும் எழுத்தறிவின்மையுந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். இவர்களது உடமைகளும் மிகவும் குறைவானவையே.
இந்த நிலைகுறித்தும், இவற்றை சமூகம் எவ்வாறு கையாழுகிறது என்பது குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார் டி.என்.கோபாலன்.
அரசியல் அதிகாரத்தை நோக்கி:
தலித்துகளின் நிலை குறித்து ஆராயும் இந்தப்பெட்டகத்தின் ஏழாவது பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளில் தலித் இனத்தைச்சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய இடம் தரப்படுவதில்லை அவர்கள் வெறும் காட்சிப்பொருளாகத்தான் வைக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது.
தலித்துகள் அதிகார மையங்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
தமிழ்த் தேசியம் குறித்த அணுகுமுறையில் தலித் அமைப்புகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆனால் , விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த விஷயத்தில் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமல்ல தலித்துகளை உள்ளடக்கிய தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதே என்று கூறுகிறார்கள்.
தலித் கட்சிகள் தலித்துகளை அணி திரட்டுவது என்பது அரசியல் ரீதியானதாக இல்லாமல் தனிநபர்களைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை என்கிறார் அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml
|
Showing posts with label புதிய தமிழகம் கட்சி. Show all posts
Showing posts with label புதிய தமிழகம் கட்சி. Show all posts
Saturday, April 25, 2015
தமிழகத்தில் தேவேந்திரகுலவேளாளர்களின் நிலை
Thursday, September 11, 2014
Monday, May 26, 2014
புதிய தமிழகம் கோரிக்கை
நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. சார்க் நாடுகளின் தலைவர்கள் என்கிற முறையில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் மோடியை வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே ராஜபக்சே வருகையை கண்டித்து நேற்று சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ் உணர்வு கொண்ட எவரும் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொள்ளக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
''உலகம் முழுவதிலுமிருக்கும் தமிழர்கள் அனைவரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தற்போது மோடி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.'' என்றார்.
மேலும், மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர்.கிருஷ்ணசாமி, ''இதில் நான் எந்த வேற்றுமையையும் விதைக்க விரும்பவில்லை. ஆனால், ராஜபக்சேவின் வருகையை பொறுத்தவரையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
Thursday, January 30, 2014
புதிய தமிழகம் வெளிநடப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக, மமக, புதிய தமிழகம் வெளிநடப்பு
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.
இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளிநடப்புக்குப்பின் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தினம் தினம் அறிக்கையாக வெளியிடுவது போன்ற பல்வேறு ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளிநடப்புக்குப்பின் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தினம் தினம் அறிக்கையாக வெளியிடுவது போன்ற பல்வேறு ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Monday, January 27, 2014
தென்காசி தொகுதியில் தேர்தல் பணி - புதிய தமிழகம்
தென்காசி
பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் முன்பே தென்காசி தொகுதியில் தேர்தல் பணியை புதிய தமிழகம் கட்சியினர் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.
தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:–
நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.
எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்ட செயலர் அரவிந்தராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலர் பாஸ்கர் மதுரம், கிழக்கு மாவட்ட செயலர் சுப்பிரமணியன், மாநகர மாவட்ட செயலர் செல்லப்பா, இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலர் சந்திரன் நன்றி கூறினார்.
Saturday, February 16, 2013
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்
தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாகஅடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள்இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர்.காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடிமக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர்என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறுபெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடிமக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில்அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைபெறும் பொருட்டு சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார்.தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில்பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்றுஅட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்தசாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும்சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறானநடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்”என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனஅரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.
இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்றமுரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலினமக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரைதமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலினமக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்
அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநிலஅரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப்மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுதமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்தஅனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும்பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய சக்கிலியர் அல்லதுஅருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடியவகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவிபெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர்பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும்அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.
இதன் காரணமாக பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்றுஅழைக்கப்படக்கூடிய ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்தபிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசுகொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசுகொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.
இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர்மற்றும் ஆதிதிராவிடர்களு இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலினமக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டைஉடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
DKV
DKV
DKV







