Saturday, February 16, 2013

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்





தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாகஅடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள்இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர்.காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடிமக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர்என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறுபெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடிமக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில்அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

 அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைபெறும் பொருட்டு  சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார்.தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில்பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்றுஅட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்தசாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும்சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறானநடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்”என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனஅரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.

இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்றமுரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலினமக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரைதமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலினமக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்




 அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநிலஅரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப்மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுதமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்தஅனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும்பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய  சக்கிலியர் அல்லதுஅருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடியவகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவிபெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர்பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும்அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.

இதன் காரணமாக  பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்றுஅழைக்கப்படக்கூடிய  ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்தபிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசுகொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசுகொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.

இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர்மற்றும் ஆதிதிராவிடர்களு இது  பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலினமக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டைஉடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.





No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget