Showing posts with label மாவீரர் பாலசுந்தரராசு. Show all posts
Showing posts with label மாவீரர் பாலசுந்தரராசு. Show all posts

Tuesday, October 2, 2012

தேவேந்திரகுல பெருந்தலைவர் மாவீரர் பாலசுந்தரராசு

தலைவர் என்று மதிப்போடு தேவேந்திரகுலப் பெருமக்களால் இன்றுவரை அழைக்கப் பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 4 -7 -1929  அன்று தெய்வேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தைத் தொடங்கினார் .1936 ஆம் ஆண்டில் சித்திரை முழு நிலவு நாளில் கோட்டூரில் இச்சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார் . 3 -8 -1936  அன்று தேவாரத்திலும் 29 -12 -1946  அன்று மதுரையிலும் தேவேந்திரகுல மக்களின் முன்னேற்றத்திற்க்காக மாநாடு நடத்தினார் .1938 ஆம் ஆண்டு மண்ணின் மக்களை அடிமை நிலைக்கு பதப்படுத்தும் அரிசன சேவா சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி ....1939 ஆம் ஆண்டில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் என்னும் பிராமணிய பித்தலாட்ட நாடக அரங்கேற்றத்திற்கு ஆதரவு மறுப்பு .....என்று தலைவர் பாலசுந்தரராசு அவர்களின் சமூக அரசியல் பயணம் தேவேந்திரகுல மக்களை முன்னேற்றப் பாதையை நோக்கி அணிதிரட்டியது 
.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக "சிவப்பும் " பயிர்த்தொழிலின் அடையாளமாக "பச்சையும் "என "சிவப்பு பச்சை "வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார் .அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது .

தேவேந்திரகுல மக்களின் உரிமைக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய தலைவர் மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 11 -05 -1951  அன்று இயற்கை எய்தினார்





DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget