Showing posts with label Dr. K. Krishnasamy MLA. Show all posts
Showing posts with label Dr. K. Krishnasamy MLA. Show all posts

Monday, May 26, 2014

புதிய தமிழகம் கோரிக்கை


நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.  சார்க் நாடுகளின் தலைவர்கள் என்கிற முறையில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் மோடியை வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே ராஜபக்சே வருகையை கண்டித்து நேற்று சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ் உணர்வு கொண்ட எவரும் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொள்ளக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-





''உலகம் முழுவதிலுமிருக்கும் தமிழர்கள் அனைவரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தற்போது மோடி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.'' என்றார்.

மேலும், மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர்.கிருஷ்ணசாமி, ''இதில் நான் எந்த வேற்றுமையையும் விதைக்க விரும்பவில்லை. ஆனால், ராஜபக்சேவின் வருகையை பொறுத்தவரையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.


Thursday, January 30, 2014

புதிய தமிழகம் வெளிநடப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக, மமக, புதிய தமிழகம் வெளிநடப்பு
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. 

இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 





புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளிநடப்புக்குப்பின் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தினம் தினம் அறிக்கையாக வெளியிடுவது போன்ற பல்வேறு ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.


இவ்வாறு அவர் கூறினார்.




Monday, January 27, 2014

தென்காசி தொகுதியில் தேர்தல் பணி - புதிய தமிழகம்

தென்காசி

பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் முன்பே தென்காசி தொகுதியில் தேர்தல் பணியை புதிய தமிழகம் கட்சியினர் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.

தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:–

நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.

எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட செயலர் அரவிந்தராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலர் பாஸ்கர் மதுரம், கிழக்கு மாவட்ட செயலர் சுப்பிரமணியன், மாநகர மாவட்ட செயலர் செல்லப்பா, இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலர் சந்திரன் நன்றி கூறினார்.





Friday, October 25, 2013

டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆய்வு


தாது மணல் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 நாள் அவகாசம் அளித்திருப்பது போதுமானதாக இல்லை. குக்கிராமங்களிலும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையின் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நாட்டின் கனிமவளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

தாது மணல் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு விசாரணையில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ எதிராகப் போராட புதிய தமிழகம் கட்சி தயங்காது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை நியமித்து அரசு விசாரணை நடத்துவது மட்டுமல்லாது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தாது மணல் குவாரிகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியைப் போன்ற ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து கடலோரக் கிராமங்களில் ஆய்வு செய்யவுள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தேர்தல் ஆதரவு: முடிவு அறிவிக்க தாமதம் ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக கிருஷ்ணசாமி கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் கூடுவதாக அறிவித்த கூட்டமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியது:

தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல புதிய தமிழகம். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்களைத் திரட்டி மாநாடு நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட சக்தியும் இல்லை. மக்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி பணியாற்றுகிறோம். ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அறிவிக்காமல் உள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.



டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தாது மணல் ஆலைகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர்களை சேர்க்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் கடந்த 6 மாதங்களாக முடங்கி காணப்படுகிறது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்.புதியதாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் தாது மணல் ஆலை முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் உண்மை நிலவரங்களை தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகள் குழுவுக்கு பதிலாக எம்.எல்.ஏக்கள் குழுவை சம்பவ இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒருமித்த கருத்துக்களை கொண்ட எம்.எல்.ஏக்கள் குழுவினருடன் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளேன். 

சட்டசபையில் பேச அனுமதி வழங்கினால் இப்பிரச்னை குறித்து பேசுவேன். இப்பிரச்னைக்காக மட்டும் கலெக்டரை மாற்றியுள்ளனர் என்று கூற முடியாது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். அரசு இப்பிரச்னையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நேரடியாக இதில் தலையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சேர்ப்பு, உயர் கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு, மது பிரச்னையால் பாதிப்பு குறித்து சமுதாய மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பதில்லை. 

ஏற்காடு இடைத்ததேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது இதுவரை முடிவு ஏதும் செய்யவில்லை. பார்லிமென்ட் தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாததால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் அரவிந் த ராஜா, செல்லப்பா, நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.


டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு


வெங்காய விலை பற்றி பேச அனுமதி மறுப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு


சட்டசபையில் வெள்ளிக்கிழமை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வெங்காய விலை உயர்வு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது குறித்து பேச சபையில் அனுமதி கேட்டேன். அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.




Thursday, May 24, 2012

டாக்டர் கிருஷ்ணசாமி & திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும்


பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 


 

மத்திய அரசு நேற்று முதல் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7.50 உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதிய தமிழகம்கட்சி சார்பில் வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வல்லநாடு அரசு உயர்நிலைபள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட எனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை டெண்டர் விட்டும் இதுவரை காண்டிராக்டர்கள் யாரும் கட்டிட பணியை எடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு குறைவாக லாபம் கிடைப்பதினால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மானிய விலையில் காண்டிராக்டர்களுக்கு மணல், கம்பி உள்பட கட்டிட பொருட்கள் வழங்க வேண்டும்.

இது குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆழப்படுத்த 3 அடி வரை மட்டுமே மண் அள்ள வேண்டும். ஆனால் சமூக விரோதிகள் சிலர் 15 அடி வரை மண் அள்ளுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே குளங்களில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி தருவைகுளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Thursday, May 17, 2012

Dr. K. Krishnasamy MLA & திரு.உமாசங்கர் IAS



ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிருஷ்ணசாமி வேண்டுகோள்





புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஜாதி பின்னணி என்னவென்று தெரியாமல் உள்ளனர். இது போன்றவர்கள் கணக்கெடுப்பதால், உண்மை பிரதிபலிக்கப்படாது, கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிரச்னைகளும், சர்ச்சைகளுமே எழும். திறன்பெற்றவர்கள் மற்றும் சமூகத்தை புரிந்து கொண்டவர்களை மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஈடுபடுத்த வேண்டும்.  பட்டியல் இனத்தில் பள்ளர், பறையர், சக்கலியர் உள்ளனர். பள்ளர் தேவேந்திர குலவேளாளர் என்றும், பறையர் ஆதிதிராவிடர் என்றும், சக்கலியர் அருந்ததியர் என்றும் அடையாளப்படுத்த வேண்டும்.















Thursday, March 8, 2012

"மக்கள் தலைவர்" Dr. K. Krishnasamy MLA

Dr. K. Krishnasamy MLA


• Party : Puthiya Thanilagan ( PT )
• Symbol : Television
• Age : 58
• Gender : Male
• Education Status : Medicine
• Address : Old No.22, New No.399, Pothigai Illam, Thirumoorthy nagar, Kuniamuthur PO,Coimbatore
• District : Coimbatore
• Father's Name : Karuppusamy






Dr.K.Krishnasamy has pursed MBBS in Madurai Kamarajar University which he completed in the year 1980. He also did master degree in Medicine MD in Bharathiyar University completed in the year 1986.






























DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget