Wednesday, May 16, 2012

ஆன்மீகம்! ஆன்மீகம்!!

ஆன்மீகம், ஆன்மீகம் என்று பேசுகிறார்களே. எழுதுகிறார்களே! நல்லொழுக்கம் வளர ஆன்மீகம் வளர வேண்டும் என்று கூறுவதை ஒரு வழமையாகக் கொள்கிறார்களே - அந்த ஆன்மீகத்தின் யோக் கியதை - குழாயடிச் சண்டையைவிட மிக மோசமாகப் போய் விடவில்லையா?

ஜெகத்குரு என்று சொல்லப்படும் காஞ்சி சங்கராச் சாரியார்களின் ஒழுக்கக்கேடு கூவம் நாற்றத்தைவிட அதிகமாகக் குடலைப் பிடுங்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற பார்ப்பன எழுத்தாளர் அம்மையார் சங்கரமடத்திற்கு வரச் சொல்லி என் கையைப் பிடித்து இழுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி என்று கூறினாரே என் எதிரிலேயே ஒரு பெண்ணிடம் பட்டப் பகலில் தவறான காரியத்தில் ஈடுபட்டார் என்று கூறினாரா இல்லையா?

காமக் - கோடியான அவர் சீரங்கத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் நாள்தோறும் கைப்பேசியில் மணிக் கணக்கில் பேசிய செய்தி எல்லாம் அம்பலத்துக்கு வந்திடவில்லையா?

அதே காஞ்சியில் தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர் மச்சேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் உடலுறவு கொண்டதும், அவற்றைக் கைப்பேசியில் படம் பிடித்ததும் எல்லாம் ஊரே சிரிக்கவில்லையா?  இப்பொழுது நித்யானந்தா எனும் வாலிப சாமியாரின் வக்கிரங்கள் வண்டி வண்டியாக வெளிச்சத்திற்கு வரவில்லையா? நடிகை ஒருவரோடு நடத்திய விவகாரங்கள் எல்லாம் சாங்கோ பாங்கோ மாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட வில்லையா?

பக்தர்களே ஒன்று திரண்டு நித்யானந்தாவின் ஆசிரமங்களை அடித்து நொறுக்க வில்லையா?

இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டின் உறைவிடத்திற்கு ஒரு மடத்தில் இளைய மடாதிபதியாகப் பட்டம் சூட்டப் படவில்லையா?

கொக்கு ஒட்டகத்தைப் பழித்தது போல நித்யானந்தாவை காஞ்சி ஜெயேந்திரர் நையாண்டி செய்யவில்லையா?

ஒவ்வொரு மடத்துக்குள்ளும் கேமிராவைப் பொருத்தினால் ஒவ்வொரு மடத்தின் வண்ட வாளங் களும் அம்பலத்திற்கு வரும் என்று நித்யானந்தா சொல்லுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?

இவையன்றி நாள்தோறும் பல்வேறு சாமியார் களின் சரச லீலைகள் கொத்துக் கொத்தாகக் குதித்தோடவில்லையா?

மகாபாரதத்தில் துரோபதை சொன்னதுபோல, ஆண் என்ற ஒருவன் இருக்கும் வரைக்கும், சந்து என்ற ஒன்று இருக்கும் வரைக்கும் எந்தப் பெண்ணும் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்று சொல்லவில்லையா?

ஒழுக்கத்தோடு வாழ்ந்து தான் தீர வேண்டும் என்று ஆன்மீகத்தில் எங்கே உறுதி செய்யப்பட்டுள்ளது? பஞ்சமா பாதகங்களுக்கும் கழுவாய்களைச் சுலபமாக வைத்துக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்று சொன்னால் ஒழுக்கமுடன் வாழ்பவன்தான் பைத்தியக்காரன் என்று நினைக்கக் கூடிய நிலைதானே ஏற்படும்? குறைந்த முதலீடு கொள்ளை லாபம் என்றால் அதனைத் தானே மக்கள் தேர்வு செய்வார்கள்?

குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை நிச்சயம் உண்டு; நிவர்த்திக்க இடம் இல்லை என்று எந்த மதமாவது அறுதியிட்டுக் கூறியதுண்டா?

சிறீரங்க ஜீயரின் கதை என்ன? 90 வயதை எட்டும் அந்த ஜீயர் கடத்தப்பட்டார் என்ற சேதி ஏடுகளில் இடம் பெறவில்லையா? நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு போடப்படவில்லையா? அவரது மருமகனே அவரைக் கடத்தி, மடத்தைக் கைப்பற்ற ஏற்பாடு என்று குற்றங் கூறப்படவில்லையா? கொல்கத்தா சென்று அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லையா?

இப்பொழுது அவர் மரணம் அடைந்த நிலையில் கொல்கத்தாவிலிருந்து அவர் உடலைக் கொண்டு வந்த நிலையில் மடத்துக்குள் அவரை சமாதி வைக்கக் கூடாது என்று மறியல் நடக்கவில்லையா? உடல் ஆம்புலன்சில் எத்தனை மணி நேரம் வீதியில் காத்துக் கிடந்தது - ஊரே சிரிக்கவில்லையா?

ஆன்மீகத்தின் ஒழுக்கத்துக்கும், நன்னடத்தைக் கும் இவை எல்லாம் நற்சான்றுகள் தானா?

இவ்வளவும் நடந்த பிறகும் எந்த ஊடகம் இவற்றைப் பற்றி மூச்சுவிடுகின்றது? ஆன்மீகத்துக்கு ஆபத்து என்றால் அது அவாளுக்கு,அக்ரகாரத்துக்கு ஆதிக்கத்துக்கு ஏற்பட்ட பிளவை நோயாயிற்றே!

கடவுள் செத்தால் பார்ப்பான் செத்தான் என்ற தந்தை பெரியாரின் ஆப்த மொழியை நினைவிற் கொள்ளுங்கள்!



No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget