Saturday, March 3, 2012

மாவீரன் இம்மானுவேல் தேவெந்திரர்





தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.



அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார்.. அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார்.

இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிரூபித்தார். நாட்கள் உருண்டோட இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், தேர்தல் மூலம் ஏற்பட்ட பகையும் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி தரப்போவதை அவரும் அறியவில்லை, அவரை சார்ந்தவர்களும் அறியவில்லை.

1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் முக்கிய பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனு்ம் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கும், எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. அதன் விளைவாக 5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது.

பிரச்சனை உருவாகிறது. பணிக்கர் என்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10.9-57ல் சமாதானக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் ஒரு சாரருக்கு எதிராக அமையவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வாய்தகராறு ஏற்படுகிறது. அதிகாரிகள் சமரசத்தால் அம்மக்களிடையே உடன்படிக்கையில் அரை மனதோடு கையொழுத்து இடப்படுகிறது. யாரும் எதிர்பாராத கொடுமையாக, எதிர்காலத்தையே புரட்டி போடும்ஒரு சம்பவம் 11ம் தேதி அரங்கேறுகிறது. சமாதான கூட்டத்தினால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி விட்டு மாலையில் பரக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்ட விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்புகிறார்.

அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்புகிறது. விஷயம் காட்டு தீ போல பல்வேறு பகுதிகளில் பரவுகிறது.

12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33வது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஓழுங்க சீர்குலைந்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குரு பூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த குரு பூஜையின்போதுதான் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு நான்கு பேரின் உயிரிழப்பில் போய் முடிந்து விட்டது.




Immanuvel Devendrar (also called Immanuvel sekaran) was a freedom fighter and a social reformer. He also worked in the Indian army as 'Havaldar major'. He belongs to Devendra kula vellalar caste. He was murdered on 11 September 1957. His postal stamp was released by the government of India in 2010. His death anniversary day is attended by millions of people in Tamilnadu every year


Personal life

Immanuvel devendrar was born on 9th october 1924 to Mr.Vedhanayagam (School Teacher and founder of Devendra kula vellalar sangam,Mudukulathur) and Mrs.Gnanasoundhari Ammal in a village of Sellur, which is located in Mudukulathur Taluk in Ramanathapuram district,Tamil Nadu . He has four children, namely E.Mary Vasantha rani,E.papin vijaya rani,E sundari prabha rani, E.Jansi rani. Immanuvel sekaran knew 7 languages including Russian language.

Involvement in freedom struggle

At the age of 18 Immanuvel devendrar participated in the Quit India movement and he was imprisoned for three months by the British Government.


In Indian army

In 1945 he joined the Indian army as 'Havaldar major'. He worked in the Indian army until he returned to Paramakudi to become a youth congress leader.


Fight for social justice

He worked hard for the upliftment of the Scheduled caste people in Tamilnadu. During his work as a social reformer he was murdered following the 1957 riots.




இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 111957தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.


இராணுவத்தில் பணி

சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், உருது, இந்தி, ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.


குடும்ப வாழ்க்கை

1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.


ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம்

  • 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.


காங்கிரசில் இணைவு

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார்.


வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி

செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு குடிபெயர்ந்த போது இவரை கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.


கொலை செய்யப்படுதல்

1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்கத்தின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். 1959 ஜனவரியில் அவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்


முதுகுளத்தூர் கலவரம்

இச்சம்பவத்தால் ராமனாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திர சமூகத்துக்கும் தேவர் சமூகத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது.



















5 comments:

  1. Thayavu seithu Thiyaka Thalaivar arukil singam,puli,siruthai yellam serthu padam pottu avarai asinka paduthatheerkal...please..

    ReplyDelete
  2. Thiyaki IMMANUVEL SEKARN anaithu thalthapatta odukkapatta makkalukaga poradiya maperum thalaivarain vali nindru nadapom...

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget