Sunday, March 18, 2012

மள்ளர்கள் பள்ளராக ஏன் வீழ்ந்தனர்?

மள்ளர்கள் பள்ளராக ஏன் வீழ்ந்தனர்?ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பி அதற்கான விடையையும் வரலாற்று அறிஞர் கே.ஆர்.அனுமந்தன் பின்வருமாறு குறிப்பிடுவார்.

"தமிழ் மூவேந்தர் மன்னன் அரசு வீழ்ந்தது,மதுரையில்(விஜயநகரப் பேரரசின் பிரதிநிதி அரசான)நாயக்கர் ஆட்சி இருந்த காலத்தில்தான் இவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. மராத்தியர்களும், நாயக்கர்களும் தமிழர்கள் இல்லையாதலால்,அவர்கள் தங்கள் சொந்தக்கரத்தால் மட்டும் ஆட்சியை வேரூன்ற முடியவில்லை. இங்கிருந்த சில சமூகத்தாரை அணைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. சோழ மண்டலத்தில் வன்னியரும், பாண்டிய மண்டலத்தில் கள்ளர்களும் அவர்களுக்குத் துணை நின்றார்கள். இதன் மூலம் பல மானியங்களைப் பெற்றார்கள்."(அனுமந்தன் கே.ஆர்.தேவேந்தர்களை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டதே நாயக்கர் ஆட்சியின் பாளையப்பட்டுமுறை (ஆங்கில மூலம்)தமிழில்,பேராசிரியர் தங்கராஜ், பாட்டாளி முழக்கம், ஜூலை1993, பக்கம் 10)

"நாயக்கர் பாளையப்பட்டு முறை என்று ஒரு நிலமானியத் திட்டத்தை உருவாக்கினார்கள்.இதில் தங்களுக்கு வேண்டியவர்களை பாளையக்காரர்களாக நியமித்தார்கள். பெரும்பாலும் தெலுங்கர்களையும், ஒரு சில பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் முறையே மறவர்,கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் நியமித்தார்கள். பூர்வீகமாக நிலவுடைமையாளர்களாக இருந்த பள்ளர்கள் பாளையப்பட்டு முறை மூலம் நிலவுடைமை இழந்தார்கள்.

பலவந்தமாக நிலங்கள் பிடுங்கப்பட்டன.பறித்த நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமையாக்கினார்கள்.அடுத்து,மூவேந்தர்கள் பார்ப்பனர்களை குருக்களாக நியமிக்காததாலும், பார்ப்பனர்கள் மதமாகிய இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றாததாலும் ,நாயக்க மன்னர்களைத் தங்கள் கைக்குள் வைத்திருந்த பார்ப்பனப் புரோகிதர்கள் இவர்களைத்"தீண்டத்தகாதவர்கள்"என்று அறிவித்தார்கள்.

வட இந்தியாவில் சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட சமூகவிதிகளை இவர்களுக்குப் புகுத்தினார்கள்"(மேலே குறிப்பிட்ட நூல் பக்கம் 12)
மேலே கண்டவை முலம் மள்ளர்களை வீழ்த்திய இனங்களில் முறையே நாயக்கர்,வன்னியர்,மறவர்,கள்ளர் மற்றும் பார்ப்பனர்கள் ஆகியோரின் பங்கு தெளிவாகிறது.

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget