Friday, September 12, 2014

"ஐ" படம்







பிரமாண்ட் இயக்குநர் ஷங்கர், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ், கதையின் வெளிச்சம் பி.சி.ஸ்ரீராம், அடிக்கடி தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடிகர் விக்ரம்... என மாபெரும் கூட்டணிகள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ஐ. தமிழ்சினிமாவை உலகதரத்திற்கு உயர்த்தியுள்ளார் ஷங்கர். இந்தப்படம் வெளிவந்த பிறகு இந்திய சினிமா ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்கு பின் என்ற பெயரை தரும் என தயாரிப்பாளர் அழுத்தமாக நம்புகிறார். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஐ படம் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் இதோ உங்களுக்காக...

* 100 வருட தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு, ஐட்டம் டான்ஸ், விரச காமெடி, கண்ணை உருத்தும் காட்சிகள் என இருந்த வந்த சினிமா, இது எல்லாவற்றையும் கடந்து ஐ பார்ப்பவர்களை உலக சினிமா தரத்திற்கு மிரள வைக்கும் என்கின்றனர் படக்குழுவினர். 

* சீனாவில் 50 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்தியுள்ளனர். சீனா மக்களுக்கே தெரியாத இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிச்சயம் அந்த இடங்கள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தருமாம்.

* படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள் உள்ளன. இந்த 5 சண்டைக்காட்சிகளும் உலகத்தரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. மிரள வைக்கும் இந்த சண்டைக்காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து ரசிக்கும் படி இருக்குமாம்.

* ஐ படத்தின் பாதியை பார்த்த அர்னால்டு ரசித்ததோடு ஆடியோ விழாவுக்கு வருவதாக சம்மதம் சொன்னார். அதுமட்டுமின்றி இந்தபடத்திற்கும், அர்னால்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுபடம் பார்க்கும் போது திரையில் தெரியுமாம்.

* என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்... என்ற கபிலன் எழுதிய பாடலில், எமியோடு விக்ரம் ஆடிய பாடலில் விக்ரம் பல வகையான விலங்கின் பரிமாணம் கொண்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். தன்னையே அடைடயாளம் காண முடியாத அளவுக்கு விக்ரம் தன்னை வருத்தி நடித்துள்ளார்.

* கபிலன் வைரமுத்துவின், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டால்... என்ற பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியையும், விருந்தையும் தருமாம்.

* ஐ படத்திற்காக விக்ரம், 3 வருட உழைப்பு கொடுத்து பலவித கெட்டப்புகளில், சாப்பிடாமல், தூங்காமல் நடித்துள்ளார். அதிலும் படத்தில் இளைஞனாகவும், உருவமாற்றமும், முகமாற்றமும் செய்து நடித்துள்ளார். இதற்கான மேக்கப்பிற்கு மட்டும் 8 மணிநேரம் செலவிடப்பட்டுள்ளது.

பிராமாண்ட ஐ படம் வெளியான பிறகு உலக சினிமாவே, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 

3 வருடமாக எடுக்கப்பட்ட ஐ படம் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியும் செய்யும் விதமாகவும், ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாகவும் இப்படம் வெளிவர வருகிறது. 

ரசிகர்ளே, காத்திருங்கள் இந்த தீபாவளியை ஐ படத்தோடு கொண்டாட...! -










No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget