ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11–ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் தர்மர், அன்வர், ராஜா எம்.பி., முருகன் எம். எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சதன் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசை வீரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பொன்துரைசாமி, பரமக்குடி நகர செயலாளர் சேது கருணாநிதி ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் திருமாவளவன், இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் அம்பேத்கார் சட்ட பாதுகாப்பு மையத்தின் தலைவர் வக்கீல் கந்தசாமி தலைமையில் வக்கீல்கள் பசுமலை, அருளானந்தம், ராம்கில்லடியன், கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்களை கண்காணிக்க சென்னை அண்ணாபல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 ஆளில்லா குட்டி விமானங்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படுகிறது.
முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி நகரில் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 5 மாவட்டங்ளில் இருந்து 10 மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பரமக்குடி நகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராமநாதபுரம், ராமேசுவரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் சிவகங்கை, இளையான்குடி, அண்டக்குடி, நயினார் கோவில் வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் செல்கிறது.
No comments:
Post a Comment