இமானுவேல் சேகரன் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஆளில்லா உளவு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் 57வது நினைவு தினத்தையொட்டி, அவரது மகள் ஜான்சி ராணி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து போலீஸ் டி.ஐ.ஜி. சாரங்கன் கூறியது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறும் இவ் விழாவில் பங்கேற்க வருவோரைக் கண்காணிக்கும் வகையிலும், பதற்றமான இடங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3 ஆளில்லா உளவு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் 1 கி.மீ. உயரத்தில் பறந்து சென்று 100 கி.மீட்டர் சுற்றளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அப் பதிவுகள் அனுப்பப்படும். இதனால் எங்கேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனே கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன், யார் பிரச்னைக்கு உரியவர் என்பதும் பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment