Friday, September 12, 2014

"ஐ" பட ஆடியோ விழா





செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் ஐ பட ஆடியோ விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். தனது சென்னை வருகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்ட் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இது பற்றி ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகையில், கலிபோர்னியா மாகாண கவர்னராகவும் இருக்கும் அர்னால்ட், தமிழக முதல்வர் முதல்வர் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க வேண்டும் என கூறி உள்ளார். இதற்காக அர்னால்ட்டின் அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். அத்துடன் ரஜினி சாரையும் அவர் சந்திக்க உள்ளார். ரஜினி சாரும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதால் இரண்டு பெரிய ஸ்டார்களை இந்த விழாவில் மேடை ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

ஐ பட ஆடியோ விழா சராசரி ஆடியோ விழாக்களைப் போன்று இல்லாமல், ஒரு கலை நிகழ்ச்சி போன்று நடத்தப்பட உள்ளதாக கூறி உள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு இப்படத்தில் திரைக்கு பின் இருந்து பணியாற்றிய நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும், படத்தின் பேஷன் டிசைனர் நடத்தும் பேஷன் ஷோவும் நடத்தப்பட உள்ளது என கூறுபவர், இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதா மற்றொரு ஆச்சர்யமும் நடக்க உள்ளதாக சஸ்பென்ஸ் வைக்கிறார்.










No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget