Thursday, March 28, 2013

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கான தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் : ஜான் பாண்டியன்



இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கான தமிழக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி அவரை போர்க் குற்றவாளியாக அறிவித்து கைது செய்யவேண்டும், தமிழர்களின் போராட்டத்தை அவமதிக்காமல் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் காதிகிராப்ட் அருகே அரை நிர்வாண போராட்டம் நடந்தது.

இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மேல்சட்டையை கழற்றி மத்திய அரசு மற்றும் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சண்முகசுதாகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு வாய்மூடி மவுனம் காத்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் போராட்டம் ஒன்றுபட்டு இல்லாமல் பிளவுபட்டு நிற்பதுதான்.

அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த பிரச்சினையில் ஓரணியில் திரள வேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கவேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கக் கூடாது. 7 கோடி தமிழர்களும் ஒன்று திரண்டு மாணவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தை காப்பாற்ற முடியும். ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள 21-ந் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் அனைத்து தமிழர்களின் சார்பிலும் பொது பந்த் நடத்தப்பட வேண்டும்.

இலங்கை தான் செய்த போர்க் குற்றங்களை மறைப்பதற்காக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதுவும் இந்திய அரசு சொல்லிக்கொடுத்து நடத்தப்படும் நாடகம் ஆகும். இதனை தமிழக மீனவர்களும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


ஜான் பாண்டியன் வாழ்த்து




அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் ஏ.நாராயணன்-லதா நாராயணன் தம்பதியரின் மகன் என்.கார்த்திக்கும், தூத்துக்குடி மாவட்டம் பேயன் விளையை சேர்ந்த கே.எம்.பரமேஸ்வரன் - பி.வசந்தி தம்பதியின் மகள் எம்.பி.சுகன்யாவுக்கும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. 

இதில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், நடிகர் விவேக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சவுந்தர்முருகன், தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஸ்டண்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம், மயிலை பெரியசாமி, தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.



முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து. இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் மணமக்களை வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:- 

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஆனந்தன், அமைச்சர்கள் ப.மோகன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பச்சைமால், சி.த.செல்லப்பாண்டியன், பி.செந்தூர்பாண்டி, ராமலிங்கம், பூனாட்சி, எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், பொன்ராஜா, குப்பன், மணிமாறன், செ.கு.தமிழர சன், தனியரசு, அரக்கோணம் ரவி, துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் சபாநாயகர் பி.செ.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், ராயபுரம் மனோ, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தேவாரம், டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், ரெயில்வே ஐ.ஜி.ஆறுமுகம், முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், ஜெயமுருகன், சமத்துவ மக்கள் கட்சி அவைத்தலைவர் செல்வராஜ், கருநாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்த ரேசன், மாநில நிர்வாகிகள் சண்முக சுந்தரம், ஐஸ்அவுஸ் தியாகு, ஜெயப்பிரகாஷ், எஸ்.ஆர்.ரத்தினம், எஸ்.வி.கணேசன், விவேகானந்தன், சுதாகர், ஆர்.கே.காளிதாஸ், சுந்தர், ஈஸ்வரன், வக்கீல் கண்ணன், எஸ்.தங்கமுத்து, கராத்தே ரவி, வார்டு பாஸ்கர், தங்கதுரை, வக்கீல் விநாயகமூர்த்தி, திருவொற்றியூர் காமாட்சி, கோயம்பேடு தொழில் அதிபர் எல்.சி.ராஜேந்திரன், முத்துராமன், பிரபாகரன், தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. பேரவை இணை செயலாளர் கந்தசாமி. திருமணத்துக்கு வந்தவர்களை எர்ணாவூர் நாராயணன்-லதா நாராயணன், வருண் குமார்-பாப்பாத்தி, பிரபு-சகிலா, உஷா, பரமேஸ்வரன்-வசந்தி மற்றும் நேர்முக உதவியாளர் ஐஸ்டின் ஆகியோர் வரவேற்றனர்.

அண்ணமார் வழிபாடு



வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு இன்றும் கைக்கொள்ளப்படும் நாட்டாரியல் மரபுகளில் ஒன்றாகும். அண்ணமார், வட இலங்கையில் பள்ளர் சாதிக்குரிய கடவுளாகவே கருதப்பட்டு வருகிறார்.

நீண்டகாலமாகவே இருந்து வருகின்ற இவ் வழிபாடு, வலுவான சமஸ்கிருதமயமாக்க அலைகளுக்கு மத்தியிலும், இன்றும் நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ் வழிபாடு நடைபெற்றுவரும் சில இடங்களிலுள்ள உள்ளூர்க் கதைகளும்,யாழ்ப்பாணத்துப் பழைய நூல்கள் சிலவும், இவ்வழிபாடு கடவுள் தன்மை பெற்ற முன்னோர் வணக்கத்திலிருந்து தோன்றியதாகக் காட்டுகின்றன. ஆனாலும். அண்ணமார் வழிபாட்டைப்புராணங்களுடன் தொடர்புபடுத்தும் கதைகளும் வழங்கி வருகின்றன.

அண்ணமார் வழிபாட்டுத் தோற்றம் பற்றிய கதைகள் வையா என்னும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம் என்னும் நூலில் உள்ள கதையொன்றில் அண்னமார் வழிபாடுபற்றிய கதையொன்று உள்ளது.

முற்காலத்தில் இலங்கையின் வன்னிப் பகுதியிலிருந்த இராட்சதருடன் போரிட வந்த 54 வன்னியர்கள் அப் போரில் இறந்தார்கள். அவர்களைத் தேடி, 60 பள்ளர் துணையுடன் வந்த அவர்களது மனைவியர், தங்கள் கணவன்மார்கள் இறந்ததைக் கேள்வியுற்றுத் தீயில் வீழ்ந்து இறந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த பள்ளரும் அவர்களுடன் தீயில் விழுந்தனர். அவ்வாறு இறந்த பள்ளர்கள் அண்ணமார் எனப்பட்டனர்.

இக் கதை ஒட்டு மொத்தமாக அறுபது போர்களை அண்ணமாராக்கியது. ஆனால், அண்ணமார் வழிபாடு நிலவும் பல்வேறிடங்களில், உள்ளூர்த் தொடர்புள்ள தனித்தனிக் கதைகள் அண்ணமார் வழிபாட்டுத் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. இணுவில் கிழக்கிலுள்ள அண்ணமார் தோற்றம் பற்றிய கதை இத்தகைய ஒன்றாகும்.

இணுவிலிலே வாழ்ந்த உடன்பிறந்தோரான இரு இளந்தாரிகள் (இளைஞர்) வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது தாய் அயலிலுள்ள கிணற்றில் குளிப்பது தடுக்கப்பட்டதனால், இவ்விளந்தாரிகள் இருவரும் இரவிரவாகக் கிணறு வெட்டித் துலாவும் அமைத்துத் தாய் குளிப்பதற்கு வசதி செய்தனராம். ஒருமுறை இவர்களது தந்தை ஒரு காரணத்துக்காக இவர்களைத் தண்டித்ததனால் கோபமுற்ற இருவரும் அருகிலிருந்த புளியமரத்தில் ஏறி வானத்தில் மறைந்தனர். இதனைக் கண்ட அவர்களுடைய குடிமைக் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளர் சாதி இளைஞன் ஒருவன் தானும் அருகிலுள்ள பனை மரத்தில் ஏறி மறைந்தான். இவ்வாறு பனையில் ஏறி மறைந்த இளைஞனே அண்ணமாராகப் பள்ளர் சாதியினரால் வழிபடப்படுகின்றான்.

அவன் ஏறியதாகக் கருதப்படும் பனையின் அடியிலேயே இந்த அண்ணமார் கோயில் அமைந்துள்ளது. இப்பனையின் அடிப்பகுதி இதைச் சுற்றி வளர்ந்த ஆலமரம் ஒன்றினால், இப்பொழுது மூடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே இளந்தாரி கோயிலும் புளிய மரமும் உள்ளன. இவ்வூரைச் சேர்ந்த சின்னத்தம்பிப் புலவர் என்பவரால் பாடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சவன்னத் தூதுஎன்னும் நூல், இந்த இளந்தாரி கோயிலை, இவ்வூரை ஆண்ட காலிங்கராயன், கைலாசநாதன் என்பவர்கள் பேரில் அமைந்ததாகக் கூறுகிறது.

உசாத்துணை நூல்கள்
• சண்முகலிங்கன், என். யாழ்ப்பாணத்தில் அண்னமார் வழிபாடு, இலங்கை - இந்திய மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004
• கந்தசாமி, . . , இணுவை சின்னத்தம்பிப் புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை, 1998.


அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையைமகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்". [1]
இக்கதை இன்று வழக்கொழிந்து வரும் நிலையில் இவரின் "அண்ணமார் கதை" நூலும், இயங்குபடமும் முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.


துணை நூல்கள்
•   Brenda E. Beck. 1982. The three twins: The telling of a South Indian folk epic. Bloomington, IN: Indiana University Press. ISBN: 0253360145.
•            
இவற்றையும் பார்க்க
•  பொன்னர் சங்கர் (திரைப்படம்)




நெல் நாகரிகம் – தமிழ் மூவேந்தர் பங்களிப்பு முனைவர் குருசாமி சித்தர்



- முனைவர் குருசாமி சித்தன், B.E.M.Sc (Engg.) Ph.D (Uconn-USA)

- தலைவர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்

‘உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம் (சுiஉந ஊரடவரசந)” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள் (ஊரடவரசயட ர்நசழ)” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் – திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு விசுவாவசு வரு~ம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து. தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு éமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு

16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .

18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .

- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803

துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

தமிழ் நில வகைகள் – தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை ஐந்து வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலை ஒட்ழய மணல் பரந்த நிலம் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.

உலக நாகரிகஙகள் – ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் ய+ப்ரட்டீஸ். டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமடிவளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.

தமிழர் நாகரிகம் – காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும்;. இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.

தொல்காப்பிய வேந்தன் – தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் – தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனானா (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.

பாண்டியன் வேந்தன் – பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.

வானுட்கும் வழ நீண்டமதில்
மல்லன் மூதூர் வய வேந்தெ.

- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ

- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.- (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்ழயன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது.

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய

- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.

சோழ வேந்தன் – சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.

மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்ப+ நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.

- புறநானூறு 35, வெள்ளைக் குழ நாகனார்
கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248 – கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.

சேர வேந்தன் – சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.

விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே

-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.

உழுபடையல்லது வேறு படையில்லை
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்.

(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,
குறுங்கோழிய+ர் கிழார் பாடியது.

(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் வி~;ணுவர்மன் குடும்;பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “வி~;ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.

இதன் பொருள் – வி~;ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.

வேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,

மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவெ தலை

- குறள் 1031

உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

- குறள் 1033

மருத நில மக்கள் மள்ளர், உழவர். களமர். கடைஞர். வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர். கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

- என்று திவாகர நிகண்டும்.

செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப

- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.

மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்

தொல்காப்பியம் என திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.

இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.

மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.

- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு

- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25

“குன்றுடைக் குலமள்ளர்” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்

- கம்பராமாயணம், வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21)

இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்ப+மியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.

தெய்வேந்திரர் வரலாறு:

சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈ~;வரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க

தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது

தெய்வேந்திரன் விருதுகள் :

ஈ~;வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகே~;பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் ப+சன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெ~;பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி ப+லோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெ;லலா வுலகும் யிறவியுள் ளளவும்
தௌ;ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய

கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி – பழனிப் பட்டயம், வரி 195 – 217

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.

தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.



மள்ளர் இலக்கிய கழகம்



திண்டுக்கல்லில் உள்ள காங்கிரஸ் எம்பி. என்.எஸ்.வி. சித்தனின் அலுவலகத்தை மள்ளர் இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது.



இலங்கைக்கு எதிரான போராட்டங்களின் தாக்கம் இப்போது காங்கிரஸ் வி.ஐ.பி.க்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. நேற்று புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.




சிவகங்கையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் எம்.பி.அலுவலகத்தை தாக்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இன்று காலையில் தேனியில் ஆரூண் எம்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். அடுத்ததாக இன்று மதியம் திண்டுக்கல் காங்கிரஸ் எம்.பி. சித்தனின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.


இன்று மதுரையில் பேரணி நடத்தி மாணவர்கள் வழி நெடுக இருந்த காங்கிரஸ் கொடி கம்பங்களை இறங்கி தீ வைத்துக் கொளுத்தி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் நேருஜிநகரில் சித்தன் அலுவலகம் இருக்கிறது. இன்று மதியம் மள்ளர் கழகத்தின் மாநில கொள்கைபரப்புச் செயளாலர் மோகன் தலைமையில் 18 பேர் இந்த‌ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தனை பதவி விலகக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். 18 பேரையும் போலீஸ் கைது செய்தது.



மள்ளர் நாடு செயற்குழு கூட்டம்



மள்ளர் நாடு செயற்குழு கூட்டம் நிறுவன தலைவர் சுப. அண்ணா மலை தலைமை யில் மதுரையில் நடந்தது. 

மாநில பொது செயலாளர் சோலை பழனிவேல்ராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன், மாநில துணை பொ ருளாளர் அழகர், மாவட்ட செயலாளர்கள் ராஜாராம், ராஜ்குமார் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்வேறு பிரிவுகளில் உள்ள தேவேந்திரர்களை ஒன்றிணைத்து 10 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஏப்.16ல் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரர் பிறந்த நாளில் பாஞ்சாலங்குறிச்சியில் பேரணி நடத்துவது, டெல்டா விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடி யாக வழங்க வேண்டுமென்றும், நடப்பா ண்டு மழையின்மையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களை வறட்சி பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், பரமக்குடியில் கடந்த 2011ல் செப்.11ல் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணையில் மார்ச் இறுதிக்குள் முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர்-உச்சநீதிமன்றங்களை அணுகி நீதி பெற வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலங்கையில் தனிஈழம் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கட்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் : இந்திய மள்ளர் சங்கம் கோரிக்கை



நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மள்ளர் சங்க மாநில தலைவர் வர்மன் மள்ளர் ,அமைப்பாளர்  சிவ ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தெரிவித்ததாவது., மள்ளர் வம்சத்தினர் நேபாளம் முதல் குமரி வரை இந்தியா வை ஆண்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. 

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மள்ளரின் உட்பிரிவாக தேவேந்திர குலத் தினை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பபட்டு உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தமிழகஅரசிற்கு மனு அளித்தும அரசு செவிசாய்க்கா மல் உள்ளது.

நாடு தழுவிய அளவில் மீனவர்கள் மற்றும் உழவர்களின் நிலங்கள் வீட்டு மனை யாகி வருகிறது,  மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு, மருதநிலங்களை காப்பாற்றி எங்கள் தமிழ் மக்களை முன்னேற்றத்திற்கு ஆவன செய்ய வேண்டும்  

இலங்கை கட்சத்தீவினை இந்திய அரசு மீட்க வேண்டும் அதன் மூலம் தமிழக  மீனவர்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மள்ளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.  



இலங்கை அரசுக்கு மள்ளர் நாடு கண்டனம்



பிரபாகரனின் மகன் 12வயது பாலசந்திரனை சுட்டு கொலை செய்த இலங்கை அரசுக்கு மள்ளர்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மள்ளர்நாடு மாநில பொருளாளர் தண்டாயுதபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயதான பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து ஈவுஇரக்கம் இன்றி சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதற்கு அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சேவை உலக நாடுகள் கண்டித்துள்ளன. அவர் போர் குற்றவாளியாக அறிவித்து சர்வேதச கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு இந்தியா தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். வரும் மார்ச் 2ம் தேதி ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை மீது போர் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என மள்ளர் நாடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறுஅவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நெல்லையில் மள்ளர் கருத்தரங்கம்



 மள்ளர் ஒற்றுமை முன்னேற்ற வரலாற்று கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. 

உலகம் முழுவதும் வாழும் மள்ளர்களை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர இந்திய மள்ளர் ஒற்றுமை முன்னேற்ற வரலாற்று கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. கருத்தரங்கிற்கு டாக்டர் ராமகுரு மள்ளர் தலைமை வகித்தார். இந்திய மள்ளர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பான்ஜி மள்ளர் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சிவ ஜெயப்பிரகாஷ் மள்ளர் வரவேற்றார். கடலியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு வெளிநாடுகளில் வாழும் மள்ளர்களைப் பற்றிய மள்ளர் வரலாற்று படத்தை திரையிட்டார்.

கருத்தரங்கில் மதுரை டாக்டர் கயிலை ராஜன் மள்ளர், தேசிய மீனவர் கூட்டமைப்பு துணை தலைவர் பான்ஜி ஆசா மள்ளியர், இன்ஜினியர் ஊர்காவலன் மள்ளர், சிவமணி மள்ளர், ரவி தேவேந்திரன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய மள்ளர் சங்கமம் தலைவர் வர்மன் மள்ளர் சிறப்புரை ஆற்றினார். டாக்டர் ராஜதுரை மள்ளர் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை இந்திய மள்ளர் சங்கமம் சிவ ஜெயப்பிரகாஷ் செய்திருந்தார்.



2012-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த சம்பவங்கள்



ங்கக் கடலில் உருவான 'தானே’ புயல், ஓர் அதிகாலை தமிழகக் கரையைக் கடந்தபோது, அது ஒரு பேரழிவின் துவக்கப் புள்ளி என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'தானே’ தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. தலைமுறை... தலைமுறையாக நட்டு வளர்த்த பலாவையும் முந்திரியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தது 'தானே’. வீடுகள், வெறும் கற்குவியல்களாகின. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூறையாடப்பட்டது. போக்குவரத்து தடைபட்டு, மின்சாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், அன்றாட உணவுக்கே வழியின்றி நரக வேதனையில் தவித்தனர் கடலூர் பகுதி மக்கள். வாசகர்களின் அருளும் பொருளும் கொண்டு 'தானே துயர் துடைப்பு அணி’ உருவாக்கி, கடலூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது விகடன். 
 
முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள உரிமை என்பது சட்டப்பூர்வமானது. அதையும் தாண்டி 'அணை வலுவிழந்துவிட்டது... உடையப்போகிறது’ என்று கேரளா கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த விஷமப் பிரசாரம் இந்த ஆண்டு உச்சத்துக்குப் போனது. விளைவு... தமிழக-கேரள எல்லையோரம் பதற்றப் பிரதேசமானது. பறிபோகும் தங்களின் தண்ணீர் உரிமையை நிலைநாட்ட ஆர்த்தெழுந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள், ஒவ்வொரு நாளும் தன்னெழுச்சியாகத் திரண்டு கம்பம், குமுளி வழியே கேரள எல்லையை நோக்கிப் படையெடுத்தனர். மூன்று அப்பாவித் தமிழர்கள் முல்லைப் பெரியாறுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். நீதிபதி ஆனந்த் கமிட்டி தலைமையிலான ஐவர் குழுவும், அவர்கள் நியமித்த நிபுணர் குழுவும்... அணையின் உறுதியை உத்தரவாதம் செய்தும், கேரள அரசின் அழிச்சாட்டியம் தொடர்கிறது.
தூத்துக்குடியில் மருத்துவர் சேதுராமலட்சுமியின்  தனியார் மருத்துவமனையில் தன் மனைவியைப் பிரசவத்துக்காகச் சேர்த்தார் மகேஷ். கடைசி நேரத்தில் 'சிக்கலான கேஸ்’ என்று சொல்லி மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் சேதுராமலட்சுமி. ஆனால், செல்லும் வழியிலேயே மகேஷின் மனைவியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட, மருத்துவ மனையில் வைத்தே சேதுராமலட்சுமியை வெட்டிக் கொலை செய்தார் மகேஷ். மகேஷ் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டாலும், 'தங்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் இல்லை’ என்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் நோயின் வேதனையுடன் பரிதவித்தனர்.
200 ஆண்டுகள் பழமையான சென்னை எழிலகம் கட்டடம் தீ விபத்தில் களை இழந்தது. பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டடத்தில், நள்ளிரவு ஏற்பட்ட தீ, தீயணைப்புப் படையினர் வருவதற்குள் மளமளவெனப் பரவியது. சென்னை தீயணைப்புக் கோட்ட அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் ஆறு பேர் கொண்ட மீட்புக் குழுவினர் எரியும் கட்டடத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழ, முன்னணித் தீயணைப்பாளர் அன்பழகன் இடிபாடுகளில் சிக்கி இறந்துபோனார். ப்ரியா ரவிச்சந்திரன் உடையில் பற்றிய தீ, முடியைப் பொசுக்கி, முக சருமத்தையும் பாதித்தது. பாரம்பரியப் பெருமைகொண்ட கட்டடங் களைப் பரமாரிப்பதன் அவசியத்தை உணர்த்திய விபத்து இது.
கிட்டத்தட்ட தேர்தல் என்பதே ஒரு 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ போல மாறிவிட்ட நிலையில், இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகிவிட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றதும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும்கூட ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால், அடுத்து வந்த புதுக்கோட்டை  இடைத்தேர்தலை தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தது மெகா ஆச்சர்யம். 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் கார்த்திக் தொண்டைமான் வெற்றிபெற, தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் டெபாசிட்டைத் தக்கவைத்து 'வரலாறு’ படைத்தார்.
ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் வெடித்த பிரச்னைதான் இந்த வருடத் தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் காட்சி. தங்களின் புதிய சம்பள விகிதத்தைத் தாங்களே நிர்ணயித்தார்கள் ஃபெப்சி தொழிலாளர்கள். 'மூன்று மடங்கு, நான்கு மடங்கு அதிகம். அந்த அளவு தர முடியாது’ எனத் தயாரிப்பாளர் தரப்பு மறுக்க... படப்பிடிப்புகள் ரத்தாயின. இயக்குநர் அமீர் தொழிலாளர்களுக்கும், சேரன் தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவு அளித்தனர். ஒரு தீர்மானமான முடிவை எட்டாமலேயே அடங்கியது பிரச்னை!
சென்னை, பெருங்குடி வங்கியில் நடந்த பட்டப்பகல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, வேளச்சேரி சந்து வீடு ஒன்றில் வசித்த ஐந்து வட மாநில இளைஞர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது போலீஸ். அந்த ஐந்து இளைஞர்களையும் உயிருடன் பிடிக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் ஏன் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் அனைவரையுமே திருடர்கள் போலச் சித்திரித்து, ''அனைவரும் காவல் நிலையத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்'' என்றது போலீஸ். சொற்பக் கூலிக்காகப் பிழைக்க வந்தவர்களை சந்தேகக் கண்கள் மொய்த்தன; மொய்க்கின்றன.
2006 சட்டமன்றத் தேர்தலின்போது திண்டிவனத்தில் அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் வீட்டில் மர்மக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் முருகானந்தம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட 21 பேர் மீது சி.வி.சண்முகம் புகார் கொடுத்தார். சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கில், ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டபோது, எந்த நேரமும் தைலாபுரம் தோட்டத்துக்குள்ளும் சி.பி.ஐ. நுழையலாம் என்று பா.ம.க பதறியது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் பிடித்த விசாரணை ஏனோ மீண்டும் முடங்கிவிட்டது.
சிகலா, வேதா இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட, அ.தி.மு.க-வில் மடமடவெனக் காட்சிகள் மாறின. ஒரு நிலமோசடி வழக்கில் ராவணன் கைதுசெய்யப்பட, கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சியவரின் ஆதிக்கம் நிறைவடைந்தது. தொடர்ந்து அரங்கேறியது சசிகலாவின் தம்பி திவாகரன் கைது. ம.நடராசனின் கைதுதான் ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். சசிகலா மீண்டும் ஜெ-வுடன் இணைய, தொடர்ந்து சில மாதங்களிலேயே கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்தாலும் தோட்டத்துக்குள் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போது சசி மட்டுமே ஜெ-வுக்கு ஒரே துணை.
வைர விழாக் கொண்டாட்ட சமயம், இத்தனை ஆண்டுகளில் அரங்கேறாத பல சம்பவங்களை தமிழக சட்டமன்றம் சந்தித்தது. அ.தி.மு.க.   எம்.எல்.ஏ-க்களை நோக்கி நாக்கைத் துருத்தியபடி ஆவேசம் காட்டியதால் விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மறுபுறம், தடாலடி மந்திரிசபை மாற்றங்களுக்கு இடையே தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகரையே மாற்றிய பெருமையைத் தேடிக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. 
ணல் கடத்தல் மாஃபியாக்கள் ஓர் இளைஞனை லாரி ஏற்றிக் கொலை செய்த கொடூரத்தை தமிழகம் இந்த ஆண்டு சந்தித்தது. திசையன்விளை அருகே உள்ள நம்பியாற்றில் அதிகாலை 3 மணிக்கு ஒரு லாரியில் மணல் அள்ளப்படுவதைப் பார்த்த மிட்டாதார்குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர், சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார். ஆனால், மணல் திருடர்கள் திடீரென்று லாரியைக் கிளப்பி சதீஷ் மீது ஏற்றினார்கள். உடல் நசுங்கி ரத்தம் பீறிட்டு அங்கேயே இறந்துபோனான் அந்த 21 வயது இளைஞன். அ.தி.மு.க-வின் நாங்குனேரி ஒன்றிய கவுன்சிலர் டென்சிங் என்பவருக்குச் சொந்தமான அந்த லாரியை ஓட்டியது அவரது தம்பி கிங்ஸ்டன். மறுகால்குறிச்சி கிராமத்தில் மணல் கடத்தலைத் தட்டிக்கேட்ட வானுமாமலை என்ற இளைஞரைச் சுட்டுக் கொலை செய்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.
'இக்கட்டான சூழலில் ஒரு ராஜதந்திரி எப்படிச் செயல்பட வேண்டும்?’ என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில், 'ஆ.ராசா’! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் வெளியே வர... மனு மேல் மனுவாகப் போட்டுக்கொண்டே இருக்க... அப்போதெல்லாம் மௌனகுருவாக அமைதிகாத்தார் ராசா. கடைசி ஆளாக, நீதிமன்றக் கதவைத் தட்டி ஒரே மனுவில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ராசாவின் விடுதலையைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் தி.மு.க.வினர்.
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களைக் காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கிளம்பிய விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஏகத்துக்கும் குட்டு வாங்கியது தமிழக அரசு. 'அந்தப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படவில்லை!’ என்று அரசுத் தரப்பு வாதிட, 'பின் ஏன் அரசு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது?’ என்று கேள்வி எழுப்பி கிடுக்கிப்பிடி போட்டது உயர் நீதிமன்றம்! 
சென்னையைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை 9-ம் வகுப்பு மாணவன் முஹம்மது இஸ்மாயில் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரத்தையும் தமிழகம் எதிர்கொண்டது. இஸ்மாயிலின் ரிப்போர்ட் கார்டில், 'சரியாகப் படிக்கவில்லை’ என்று உமா மூன்று முறை ரிப்போர்ட் எழுத, ஆத்திரம் அடைந்த இஸ்மாயில் 20 ரூபாய்க்குக் கத்தி வாங்கி, உமா மகேஸ்வரியை வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்தான். உமா மகேஸ்வரியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய அவரது மகள் சங்கீதா, ''அம்மா, எங்களைவிட இந்தப் பள்ளியின் மாணவர்களைத்தான் அதிகம் நேசித்தார். நீங்களும் உங்கள் ஆசிரியர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று உணர்ச்சிவசப்படாமல் பொறுப்புடன் பேசியபோது, கூடியிருந்தவர்களின் கண்கள் கசிந்தன.
ஞ்சி-நித்தி வீடியோ, ஆர்த்திராவ் அதிரடிகள் எனத் தாறுமாறான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கி அதிரடி செய்தார் அருணகிரிநாதர். நித்தியானந்தா ஆதீனத்தில் உள்ள பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டுத் தன் ஆட்களை உலவவிட்டார். 'நித்தியானந்தா ஆதீனத்தின் வாரிசாகும் தகுதி இல்லாதவர்’ என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்ல, ஆதீனம் தன் கைவிட்டுப் போய்விடக்கூடிய சூழலில் சுதாரித்த அருணகிரி, நித்தியை மடத்தைவிட்டு வெளியேற்றிவர், இப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத்துக்குத் தம்பிரான் பட்டம் சூட்டியிருக்கிறார்.
டைசி நிமிடம் வரை பரபரப்பாக நடந்து முடிந்த 'டெசோ’ மாநாட்டால் யாருக்கு லாபம் என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. ''மாநாட்டில், தனித் தமிழீழம் கோரிக்கைக்காக இலங்கையில் வாக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம்'' என்றார் கருணாநிதி. ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பிறகு, ''தமிழீழத் தீர்மானம் எல்லாம் கிடையாது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடுதான்'' என்றார். கடைசி நாளில் தமிழக அரசு மாநாட்டுக்கு அனுமதி மறுக்க, தி.மு.க-வின் நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தினார்கள். அத்தனை பில்ட்-அப் கிளப்பிய மாநாட்டின் மேடையில் முக்கிய தமிழறிஞர்கள் யாரையும் காணவில்லை. இந்த சர்ச்சைகள், டெசோ மாநாட்டுத் தீர்மான நகலை ஐ.நா. சென்று ஸ்டாலின் வழங்கியது வரை தொடர்ந்தது.
தி.மு.க-வின் பெருந்தலைகள் அத்தனை பேரையும் நில அபகரிப்பு வழக்குகளில், அரசு உள்ளே தூக்கிப்போட, தமிழகம் முழுக்கச் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பை எதிர்பார்க்காத தமிழக அரசு, கைது செய்த அனைவரையும் சில மணி நேரத்திலேயே விடுவித்தது. தி.மு.க-வின் தளகர்த்தர்களில் முக்கியமானவரான வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் குன்றி இறந்துபோனதற்கு, அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் கைது நடவடிக்கைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டும் அளவுக்கு வீரியமாக அரங்கேறின கைது சம்பவங்கள்.
மிழ்நாட்டின் இன்னொரு 'வாக்கிங் கொலை’க்கு இரையானார் ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியில் செல்வாக்கு மிகுந்தவருமான ராமஜெயத்தை  மர்மக் கும்பல் ஒன்று கடத்தி சயனைடு கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலையில் பிசினஸ், முன்பகை எனப் பல வகைகளில் விசாரித்தபோதிலும் இன்னமும் போலீஸ் குற்றவாளியை நெருங்கவில்லை. 'உண்மையிலேயே கண்டுபிடிக்க முடியவில்லையா? கண்டுபிடிக்க விரும்பவில்லையா?’ என்பதே இப்போது மிஞ்சியுள்ள சந்தேகம்.
மிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் 'சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றினார் ஜெயலலிதா. முன்னர் கருணாநிதி மாற்றியதற்குச் சொன்ன காரணம், ''மறைமலை அடிகளார் தை முதல் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என்று அறிவித்ததன் அடிப்படையில் நான் மாற்றம் செய்தேன்'' என்பது. ஆனால் சிம்பிளாக, ''தமிழர்களின் பாரம்பரியப் பழக்கம்'' என்று மட்டும் காரணம் சொல்லி, மீண்டும் மாற்றினார் ஜெ. ஜனவரி 1-ம் தேதியையே  புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிட்ட தமிழர்களை, இந்தச் சர்ச்சைகள் அதிகம் பாதிக்கவில்லை.
சென்னை சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. தொடர்ந்து, வெவ்வேறு விபத்துகளில் இறந்த மாணவிகள் ஜெயலட்சுமி, சுஜிதா, தீபிகா ஆகியோரின் மரணங்கள் மக்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கின. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து கேள்விகளை எழுப்பி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, புதிய சட்டங்களை உருவாக்கி, அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பள்ளிப் பேருந்துகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு வகுக்க, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, வேலைநிறுத்தம் என்று செயல்பட்டது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் புத்தகங்களில், அம்பேத்கர் தொடர்பான கார்ட்டூன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான கிண்டல், நாடார் சமூகத்தைப் பற்றிய தவறான வரலாறு, 'அசைவ உணவு சாப்பிடுபவர்கள் குற்றச் செயல்புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என்ற விஷமக் கருத்து என பல பாடப் பகுதிகள் சர்ச்சை கிளப்பி நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தன!
ந்த ஆண்டு தமிழகத்தை இருள் இன்னும் கடுமையாகச் சூழ்ந்தது. சென்னை நீங்கலாக தமிழகம் முழுக்க சராசரியாக 16 மணி நேரம் மின்வெட்டில் தவித்தது. 60 ஆண்டு கால வளர்ச்சியைக் கண்ணெதிரே பறிகொடுத்தது தமிழகச் சிறுதொழில் துறை. இவற்றுக்குக் காரணம், பெரு நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் கட்டுப்பாடற்ற மின் விநியோகம்தான் என்று எல்லோரும் குற்றம்சாட்ட, தமிழக அரசோ,  மேலும் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏழு பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
சிரியர்களுக்கான தகுதியை நிரூபிக்கும் தேர்வு ஜூலையில் நடந்தபோது, 6.7 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுதேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர், அதாவது, சுமார் 3 சதவிகிதத்தினரே தேர்ச்சி அடைந்து பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிரவைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் பழனி என்கிற பழனிச்சாமி துப்பாக்கியால் சுடப்பட்டும் தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்டும் கொல்லப்பட்ட வழக்கில், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, தா.பாண்டியன் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது!
கோடு போட்டு, கொடி நட்டு, எல்லை பிரிக்காத கடலில் மீன் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பிடிப்பான் மீனவன். வனங்களில் வேட்டையாடும் காட்டுப் பழங்குடி போல, மீனவன் கடல் பழங்குடி. ஆனால், 'எல்லை தாண்டியதாக’ச் சொல்லி, குறைந்தது மாதம் இரு முறையேனும் மீனவத் தமிழன், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறான். படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்து வீசுவது, பிடித்த மீன்களைத் திருடிச் செல்வது என்று ராணுவச் சீருடையில் ரௌடித்தனம் செய்கிறது இலங்கைக் கடற்படை. பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ 'நமக்கென்ன?’ என்று ஒதுங்கி நிற்கிறது!
மரசம் அற்ற சமகால மக்கள் போராட்டத்தின் முன்மாதிரியை இந்தியாவுக்கு உணர்த்தியது கூடங்குளம். அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இந்த ஆண்டு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. 144 தடை உத்தரவை அணு உலையைச் சுற்றி பல கி.மீ. தூரத்துக்கு நீட்டித்தது போலீஸ். அணு உலை முற்றுகை என அறிவித்து, இடிந்தகரை மக்கள் கடற்கரை வழியே பேரணியாக வர... போலீஸ் வெறிப் பாய்ச்சலுடன் மக்களை அடித்து நொறுக்கியது. மணப்பாட்டில் மீனவர் அந்தோணி ஜான் காவல் துறைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். தாழப் பறந்த விமானத்தின் கொடூர சத்தம் சகாயம் பிரான்சிஸின் உயிரைப் பறித்தது.  போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் முதல், தேசத் துரோக வழக்கு வரை பாய்ந்தன. எதையும் கண்டுகொள்ளாமல், ''இன்னும் ஒரு வருடத்துக்குள் கூடங்குளம் செயல்படத் துவங்கும்'' என்றது அணு உலை நிர்வாகம். கனன்றுகொண்டு இருக்கிறார்கள் இடிந்தகரை மக்கள்.
ர்நாடக அரசியல்வாதிகள் காவிரி நீரை தமிழகத்துக்குத் தரவிடாமல் முடக்கி 'அரசியல்’ செய்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிட்டன. குறுவையும் இல்லை, சம்பாவும் இல்லை. கூரத்தங்குடி ராஜாங்கம் வாடிய பயிர் கண்டு வாடி, பூச்சி மருந்து குடித்து உயிரைவிட்டார். உச்ச நீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, ஒரே ஒரு நாள் மட்டும் 10,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டு, மீண்டும் ஷட்டரை சாத்திக்கொண்டார் கர்நாடக முதல்வர் ஷட்டர். பாசன நீர் போய் இப்போது குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கி நிற்கிறது டெல்டா!
துரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் அனுப்பிய கடிதம்தான், தமிழகத்தின் பிரமாண்டக் கொள்ளை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தானியங்கி பறக்கும் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் பி.ஆர்.பி. குவாரி உண்மையிலேயே 'ஊரை அடித்து உலையில் போட்டு’ குளிர் காய்ந்த கதை வெளிவந்தது. பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட, தலைமறைவான துரை தயாநிதி பிறகு, ஜாமீன் பெற்று சரணடந்தார்.
மோசடி வரலாற்றில் இந்த ஆண்டு தமிழக மக்களைக் 'கொத்தியது’ ஈமு கோழி! 'ஈமுவின் ஒரு முட்டையே ஆயிரம் ரூபாய்!’ என்றெல்லாம் சொல்லி, ஆசை வார்த்தை காட்டியவர்கள் அப்பாவிகளிடம் சுருட்டியது சுமார் 500 கோடிக்கும் மேல். இந்த மோசடித் தொழிலில் முன்னணி வகித்தது சுசி ஈமு கோழிப் பண்ணை. அந்தக் கோழிப் பண்ணை அதிபர் குருசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இதனிடையே பண்ணையாளர்கள் போலீஸுக்குப் பயந்து ஓட, பராமரிக்க ஆள் இல்லாமல் கோழிகள் செத்து விழுந்ததும் அவற்றுக்குத் தீனி அளிக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியதும் தனித் துயரங்கள்!
சிவகாசி மீண்டும் ஒரு பெருந்துயரைச் சந்தித்தது. ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்து 39 உயிர்களைப் பறித்தது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய விபத்தான இது, ஏகப்பட்ட விதிமீறல்களையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. வழக்கம்போல அரசாங்க சால்ஜாப்புகள், சில நாட்களுக்குப் பரபர ரெய்டுகள், வெளிவந்த அதிகாரிகளின் ஊழல் பின்னணிகள் எனப் படபடத்தன காட்சிகள். இந்த அதிர்வேட்டுகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகாசியில் மட்டும் 1,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகின. 
தாம்பரம் இந்திய விமானப் படை முகாமில் பயிற்சி பெற வந்தார்கள் சிங்களப் படையினர்.  அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரதமருக்குக் கண்டனக் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. திருப்பி அனுப்பப்பட்டார்கள் அவர்கள். இதே பாணியில் சில மாதங்களுக்குப் பிறகு, தமிழகம் வந்த இலங்கை கால்பந்து வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்!
20 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் போராட்டத்துக்கு நீதி கிடைத்தது. போலீஸாரைத் தாக்கியதாகவும், வனத் துறை அதிகாரிகளைத் தாக்கிக் கொல்ல முயன்றதாகவும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 98 பெண்கள் உட்பட 105 பேர் மீது பதியப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, 'வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று 105 பேர் மீதான குற்றச்சாட்டையும் ரத்துசெய்து உத்தரவிட்டார். வாச்சாத்தி மக்களுக்கு அது சுதந்திர சுவாசம்.
மிழக அரசு மருத்துவமனைகள் ஏழை 'எலி’யவர்களுக்கான மருத்துவமனையாகப் பல்லிளித்தன. சென்னை கஸ்தூரிபாய்  அரசு மகப்பேறு மருத்துவமனையில், மலர் என்ற பெண்மணிக்குப் பிறந்த பெண் குழந்தை இறக்க, மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தைப் பெருச்சாளி கடித்துக் குதறியதைக் கண்டு, உறவினர்கள் அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் தமிழகமெங்கும் பரவியது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட எலி வேட்டையில் 16 நாய்கள், நான்கைந்து பூனைகளும் சிக்க... தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகள் பரபரத்தன!
ரு சினிமா டிரெய்லர் மூலமே உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களைக் கொதிப்படையவைத்தது அமெரிக்கா. அங்கு தயாரான 'தி இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்று உலக முஸ்லிம்கள் கனல் கக்கியது, சென்னையிலும் பலமாகத் தகித்தது. சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முஸ்லிம்கள் ஊர்வலமாகச் சென்றபோது நடந்த போராட்டத்தில், கல்வீச்சு நடந்தது. போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 1,000 பேர் வரை கைது செய்யப்பட்டார்கள். தூதரகத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பல வாரங்களுக்குத் தொடர்ந்த போக்குவரத்து மாற்றம், பல மாதங்களுக்குத் தொடரும் போலீஸ் பாதுகாப்பு என பரபரத்துக்கிடக்கிறது சென்னை அண்ணா சாலை.
'நடுக் கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா?’ பாடலைக் கேப்டனுக்கு டெடிகேட் பண்ணவைத்தது ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். தே.மு.தி.க.எம்.எல்.ஏ-க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, தங்கள் 'தொகுதிப் பிரச்னைகள்’ தொடர்பாக மனு கொடுக்க, திண்டாடித் தவித்துப்போனார் கேப்டன். அந்தப் பதற்றப் பரபரப்பு சமயம், இதுதொடர்பாக விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபரை நாக்கைக் கடித்து, முஷ்டி முறுக்கி, விரல் சொடுக்கி விஜயகாந்த் திட்டியது அனல் கனல் ஹைலைட் ஆனது.
கொள்ளை நோயாக உருவெடுத்தது டெங்கு. திருமணம் முடித்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சலுக்குத் தன் கணவனைப் பறிகொடுத்த துயரம் தாங்க முடியாமல், தன்னைத் தீயிட்டுக்கொண்ட மஞ்சுளாவின் வாழ்க்கை டெங்கு தாக்குதலுக்கு ஒரு சோறு பதம். நிலைமையின் தீவிரம் உறைக்க, டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஒதுக்கியது, கிராமங்களில் விழிப்பு உணர்வு முகாம் நடத்தியது என கடைசி நேரத்தில் சுதாரித்தது தமிழக அரசு!
தேவர் குரு பூஜை சமயம் பரமக்குடி பதற்றப் பிரதேசம் ஆவதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. அஞ்சலி செலுத்த வந்தவர்களிடையே எழுந்த வம்புதும்புப் பேச்சு பதற்றப் பொறி பற்றவைக்க, கல்வீச்சுத் தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு என ரணகளமானது ஏரியா. வன்முறைச் சம்பவங்களால் உயிர்ப் பலிகள் ஏற்பட, பல வாரங்களாகக் கொதிகலனாகக் கொதித்துக்கொண்டே இருந்தது தென் தமிழகம். அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பேருந்து களை இயக்கும் அளவுக்குக் கலவரமானது நிலவரம்.
ந்த ஆண்டும் வெள்ளத்துரை மீது படிந்தது என்கவுன்டர் ரத்தக் கறை. திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கத்தியால் சாரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாகச் சிலர் கைதுசெய்யப்பட, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரன்டெண்டாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டது, சில அறிகுறிகளை உணர்த்தியது. எதிர்பார்த்தது போலவே அரங்கேறியது என்கவுன்டர் வதம். எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலையில் சம்பந்தப்பட்ட பாரதி, பிரபு ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தப்பிச் சென்று, 'எதேச்சையான’ வாகனச் சோதனையில் பிடிபட்டு, போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச... வேறு வழியின்றி அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாகச் சொல்லியது போலீஸ்.
சென்னை பெருங்குடியில் காலை நேர அவசரத்தில் பேருந்துப் படிக்கட்டில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார் நால்வரும் லாரி மோதிப் பலியாகினர். தமிழகத்தில் ஓடும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் கதவுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட, படியில் தொங்கிச் சென்ற மாணவர்களைக் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு. பேருந்து வசதிகளை அதிகப்படுத்தாமல், 'படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்ற கடும் உத்தரவைப் பிறப்பித்தது அரசு.
திருப்பூரில் 'பாசி போரெக்ஸ்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திய கதிரவன், 48 ஆயிரம் பேரின் சுமார் 1,600 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஐ.ஜி. பிரமோத்குமார் சொல்லியபடி  பாசி நிதி நிறுவன நிர்வாகிகளைக் கடத்தி வைத்துகொண்டு 3 கோடி ரூபாய் பேரம் பேசியது தெரியவர... தமிழக போலீஸ் தலை குனிந்தது. பிரமோத்குமார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா வளைவை இடிக்கும் பணி பெரும் அரசியலில் சிக்கியது. வளைவின் உறுதி காரணமாக அதை இடிக்க முடியாமல் இயந்திரங்கள் சுணங்க, வழக்கம்போல், தி.மு.க - அ.தி.மு.க. லாவணி தொடங்க, 'வளைவை இடிப்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை!’ என்று தெரிவித்த ஜெ, அதைச் சீரமைக்கவும் உத்தரவிட்டார்! 
'' 'விஸ்வரூபம்’ படத்தைத் தியேட்டரில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னர் டி.டி.ஹெச்-ல் நேரடியாக ஒளிபரப்பப்போகிறேன்'' என்று கமல் அறிவிக்க, அரண்டு மிரண்டு கமலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் தியேட்டர் அதிபர்களும் கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்களும். ''பொருளின் விற்பனையை நிர்ணயிக்கும் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே உண்டு'' என்று கமல் மல்லுக்கட்ட, ''திருட்டு டி.வி.டி-யை ஒழித்து, பெரும்பகுதி வருமானம் அளிக்கும் முயற்சி'' என்று தயாரிப்பாளர்கள் தரப்பும் ஆதரவு தெரிவிக்க, ''கமல் 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் காண்பித்தால், நாங்கள் அதை தெருத் தெருவாக அகன்ற திரையில் காண்பிப்போம்'' என்று முஷ்டி முறுக்குகிறார்கள் கேபிள் டி.வி. சங்கத்தினர். அந்த நாளுக்காக நகம் கடித்துக் காத்திருக்கிறது தமிழ்நாடு.
சும்மாவே அதிரும் ரஜினி பிறந்த நாள், கடந்த 12.12.12 அன்று இந்திய சென்சேஷன் ஆனது. சேனல்களில் ரஜினி சிறப்புத் திரைப்படங்கள், பட்டிதொட்டிஎங்கும் ஃப்ளெக்ஸ்கள், எஃப்.எம்-களில் ரஜினி பாடல்கள் என்று மொத்தத் தமிழ்நாடுமே கொண்டாடித் தீர்த்துவிட்டது. ஆச்சர்யமாக ரசிகர்கள், மீடியா மக்களைச் சந்தித்தார் ரஜினி. அதைவிட ஆச்சர்யமாக மாலை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, ''சிகரெட் பிடிக்காதீங்க. சந்தோஷமான குடும்பம் சொர்க்கத்துக்குச் சமம். ஏழையா ஆனாலும் கோழையா இருக்க மாட்டேன்!'' என்றெல்லாம் அறிவித்துவிட்டு இறுதியில், ''அரசியலுக்கு வர்றேன்னு பொய் சொல்லப் பிடிக்கலை. நான் எப்பவும் அரசியல்ல இருந்ததே இல்லை. எனக்கு அரசியல் வேணாம்!'' என்று பல வருட 'ரேப்பர் ஸ்டோரி’களுக்கு 'கதம் கதம்’ சொன்னார்.
மிழகத்தைத் தாக்கிய 'நீலம்’ புயலால் சென்னையில், தரை தட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்கள் 6 பேர் கடலில் இருந்து தப்ப முயன்றபோது பரிதாபமாக இறந்துவிட்டனர். விசாரணையில், அந்தக் கப்பலின் பதிவே காலாவதி ஆகிவிட்டது, ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக்கூடக் கப்பல் நிறுவனம் பூர்த்திசெய்யவில்லை என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியவந்தன. இது ஒருபுறம் இருக்க, மெரினா பீச்சையே இடமாற்றம் செய்துவிட்டதுபோல குபீர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது கப்பல் தரை தட்டிய பட்டினப்பாக்கம் ஏரியா. 12 நாட்கள் போராட்டத்துக்குப் பின் கப்பல் கரையில் இருந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட, பிரதீபா காவேரியை ரொம்பவே மிஸ் செய்தார்கள் சென்னைவாசிகள்.
ம்.ஜி.ஆர். சமாதியில் றெக்கை கட்டிப் பறந்தது இரட்டை இலைக் குதிரை. அரசாங்கச் செலவில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சமாதியின் நுழைவாயிலில் ஒரு குதிரையை நிறுத்தியது தமிழக அரசு. அதன் முதுகில் பட்டொளி வீசிப் பறந்தது அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை. தி.மு.க. நீதிமன்றத்தை நாட, 'அது இரட்டை இலை அல்ல. பறக்கும் குதிரையின் சிறகுகள்!’ என்று அரசுத் தரப்பு வக்கீல்கள் பகீர் விளக்கம் கொடுக்க, 'உங்களுக்கு பயாலஜி தெரியுமா?’ என  உஷ்ணமானார் நீதிபதி.
'சாதி எல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று கேட்பவர்கள் முகத்தில் அறையாக விழுந்தது தர்மபுரிக் கலவரம். தர்மபுரி அருகே உள்ள நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லங்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவைக் காதலித்தார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் குடும்ப எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டனர். ஊர்க்காரர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் திவ்யாவின் தந்தை நாகராஜன். இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாத இரவொன்றில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் பகுதிகளிலும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தையே அதிரவைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 142 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம். 'தர்மபுரி சம்பவத்துக்கு பா.ம.க-தான் காரணம்!’ என்று தொல்.திருமாவளவன் நேரடியாகவே குற்றம்சாட்ட, பா.ம.க - சிறுத்தைகள் உறவில் விரிசல் விழுந்தது.
ந்த ஆண்டு வைகோவின் சேம்ஸைடு கோல்... நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க-வின் பிரசாரப் பீரங்கி இப்போது போயஸ் தோட்ட ஊதுகுழல். பல மாதங்களாகவே சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையிலான பனிப் போரால், ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவுவார் சம்பத் என்று ஹேஷ்யங்கள் வட்டமடித்தன. ஆனால், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அடித்த சம்பத், ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வின் துணை கொ.ப.செ-வாகி இன்னோவா கார் வென்றார். இந்தப் பக்கம் ஊமைக் காய வலியை வெளிக்காட்டிக்கொள்ளாத வைகோ, 'நெக்ஸ்ட் இலக்கு... பூரண மதுவிலக்கு!’ என்று நடைப் பயணம் கிளம்பிவிட்டார்.
ஜெயலலிதா சகலர் மீதும் வழக்குத் தொடுக்க, அவரது அமைச்சர்கள் மீது வருட இறுதியில் குவிந்தன வழக்குகள். பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் உறவினர் தனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை அழித்துவிட்டதாக காத்தசாமிப்பாளையம் பால்சாமி புகார் அளிக்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரைச் சேர்ந்த கோகுல் என்பவரைக் கடத்தி, அவரது நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. முத்தாய்ப்பாக, நிதி அமைச்சரும் அமைச்சரவையின் நம்பர் டூ-வுமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, தலித் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வலைவீசித் தேடப்பட்டார்!
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிறைவேற்றிவிட, தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி,  கமுக்கமாக வந்தேவிட்டது வால்மார்ட். வணிகர் சங்கங்களின் தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா என அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்களது எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்தனர். இந்து மக்கள் கட்சியியோ, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தடை செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும், அசராத வால்மார்ட் பிரதிநிதிகள், '32 சதவிகிதம் விலை குறைவாகத் தருகிறோம், டோர் டெலிவரி, இலவச உறுப்பினர் வசதி’ என ஆசைகாட்டி சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களைத் தனது வலையில் வீழ்த்திவிட்டனர்.
21.12.12-ல் உலகம் அழிந்துவிடும் என்ற 'மாயன் காலண்டர்’ பரபரப்புக்குத் தமிழகமும் தப்பவில்லை. பரபர கவுன்ட்-டவுன் வைத்து டிசம்பர் 21-ஐ எதிர்பார்த்தான் தமிழன். 'ஃபேஸ்புக், ட்விட்டர்களில், 'அழியும்னு நான் சொல்லலை... அழிஞ்சா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்’, 'அங்கிள்... அன்னைக்கு எனக்கு சோஷியல் சயின்ஸ் எக்ஸாம். உலகம் அழிஞ்சா நல்லதுதானே’ என்று காமெடி களை கட்டியது. டிசம்பர் 20-ம் தேதி இரவு டாஸ்மாக் வழக்கத்தைவிடக் களை கட்ட, 'உயிர் தமிழுக்கு... உடல் மாயண்ணனுக்கு’ என்று சலம்பித் தள்ளினான் தமிழன். ஆனால், டிசம்பர் 21-வழக்கம்போல விடிய, 'அதான் மிந்தியே சொன்னோம்ல... அதெல்லாம் உட்டாலக்கடி!’ என்று வழிந்தான் தங்கத் தமிழன்!



DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget