நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மள்ளர் சங்க மாநில தலைவர் வர்மன் மள்ளர் ,அமைப்பாளர் சிவ ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தெரிவித்ததாவது., மள்ளர் வம்சத்தினர் நேபாளம் முதல் குமரி வரை இந்தியா வை ஆண்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மள்ளரின் உட்பிரிவாக தேவேந்திர குலத் தினை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பபட்டு உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தமிழகஅரசிற்கு மனு அளித்தும அரசு செவிசாய்க்கா மல் உள்ளது.
நாடு தழுவிய அளவில் மீனவர்கள் மற்றும் உழவர்களின் நிலங்கள் வீட்டு மனை யாகி வருகிறது, மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு, மருதநிலங்களை காப்பாற்றி எங்கள் தமிழ் மக்களை முன்னேற்றத்திற்கு ஆவன செய்ய வேண்டும்
இலங்கை கட்சத்தீவினை இந்திய அரசு மீட்க வேண்டும் அதன் மூலம் தமிழக மீனவர்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மள்ளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
No comments:
Post a Comment