தேநீர்க் கடையில் சாதி ரீதியாக இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படுகின்றன
என்கிற புகார் ஆண்டாண்டு காலமாகவே ஆய்வு மூலமாகவும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்துகிற கிராமத்தின் தகவல்கள் கண்டறியப்பட்டும் வந்துள்ளன. இதைக் கடந்து தேநீர்க் கடைகளில் பயன்படுத்தப்படுகிற இரட்டைக் குவளை முறையின் வடிவங்கள், தன்மைகள், வகைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் கடைபிடிக்கப்படுகின்ற
பிற பாகுபாடுகள் உள்ளிட்ட நிலைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு இரட்டைக் குவளை முறை பற்றிய ஆய்வினை விரிவாக நடத்த வேண்டுமென்று திட்டமிட்டது.
ஆய்வின் எல்லைகள்
மே 2012 மாதத்தில் மதுரை மாவட்டத்தில் சுமார் 30 கேள்விகள் அடங்கிய ஆய்வுப்படிவம் மூலம் தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை என்கிற ஆய்வு நடத்தப்பட்டது. திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய 7 தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளிக்குடி, திருமங்கலம், செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட 13 ஒன்றியங்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. எமது குழுவினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இவ்வாய்வினை நடத்தியதில், 149 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தைரியமாக இரட்டைக் குவளை முறை பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இரட்டைக் குவளை முறையின் வகைகள்
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 149 கிராமங்களில் உள்ள 463 தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வருகிறது. 149 கிராமங்களில் 131 கிராமங்களில் தலித்துகளுக்கு தனிக் குவளையும், சாதி இந்துக்களுக்கு தனிக் குவளையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே விதமான குவளை ஆனால் தலித்துகளுக்கு கொடுக்கப்படுகின்ற குவளை தனியாகவும், சாதி இந்துக்களுக்கு கொடுக்கப்படுகிற குவளை தனியாகவும் வைக்கப்படுகிற கிராமங்களின் எண்ணிக்கை 12. ஒரே விதமான குவளை இருந்தாலும் அக்குவளையில் பெயிண்டால் முத்திரை பதிக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்படுகின்ற கிராமங்களின் எண்ணிக்கை 14. இதுமட்டுமல்லாமல் 8 கிராமங்களில் ஒரே விதமான குவளை பயன்படுத்தப்பட்டாலும் அக்குவளையின் தரம் மாறுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தலித்துகளுக்கு பிளாஸ்டிக் குவளையும், சாதி
இந்துக்களுக்கு சில்வர் மற்றும் கண்ணாடி குவளையும் 124 (83 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகளுக்கு கண்ணாடி குவளை,
சாதி
இந்துக்களுக்கு சில்வர் குவளை
10 (6.7 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகளுக்கு சில்வர் குவளை,
சாதி
இந்துக்களுக்கு கண்ணாடி குவளை
6 (4 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு
கிராமத்தில் சாதி
இந்துக்களுக்கு சில்வர் மற்றும் கண்ணாடி குவளையும், தலித்துகளுக்கு அலுமினிய குவளையும் கொடுக்கப்படுகின்றன.
தேநீர்க் கடைகளில் கடைபிடிக்கப்படும் - இதர தீண்டாமை கொடுமைகள்
தேநீர்க் கடையில் தேநீர்
அருந்திய பிறகு
குவளையை தலித்துகளே சுத்தம் செய்து
வைக்கக்கூடிய கடைகளின் எண்ணிக்கை 9. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 149 கிராமங்களில் 67 (45 சதவீதம்) கடைகளில் தலித்துகளுக்கு தனி
இருக்கைகளும், சாதி
இந்துக்களுக்கு தனி
இருக்கைகளும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 135 (91 சதவீதம்) கிராமங்களில் தேநீர்க் கடையில் சாதி
இந்துக்கள் அமர்ந்து கொண்டும், தலித்துகள் நின்று
கொண்டும் தேநீர்
அருந்துகிற நிலை
உள்ளன.
தேநீர்க் கடையில் தலித்துகள் சுதந்திரமாக சென்று
தேநீர்
அருந்த
முடியாத நிலையில் 136 (91 சதவீதம்) கிராமங்களைச் சேர்ந்த தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 42 (28 சதவீதம்) கிராமங்களில் சாதி
இந்துக்களுக்கு தரமான
தேனீரும், தலித்துகளுக்கு தரமற்ற
தேனீரும் வழங்கக்கூடிய நிலை
உள்ளன.
ஆய்வில் 83 சதவீத
தேநீர்க் கடைகளில் தலித்துகளுக்கு தூக்கிப்போடுகிற பிளாஸ்டிக் குவளை
பயன்படுத்தப்பட்டாலும் மற்றவர்களுக்கு அக்கடைகளில் கழுவி
வைக்கக்கூடிய குவளை
பயன்படுத்தப்படுகின்றன. ஒரு
விதத்தில் இது
பார்ப்பதற்கு இரட்டைக் குவளை
பயன்படுத்தாத நிலை
போன்று
தோன்றினாலும் சாதி
இந்துக்கள் பயன்படுத்திய குவளையை கழுவினாலும் தலித்துகள் பயன்படுத்திய குவளையை கழுவக்கூடாது என்கிற
நிலைப்பாடு இருப்பது கண்டறிய முடிகிறது. ஆகவே
பிளாஸ்டிக் குவளையின் மூலமாக
இரட்டைக் குவளை
முறை
நவீனத்
தீண்டாமையாக வளர்ந்துள்ளது.
இரட்டைக் குவளை
முறை
பயன்படுத்துவது குற்றம் என்கிற
எச்சரிக்கை சாதி
இந்துக்களிடையே ஏற்பட்டிருந்தாலும் அந்த
குற்றத்தை மறைப்பதற்காகதான் பிளாஸ்டிக் குவளை
பயன்படுத்துகிற நிலை
உள்ளது.
ஆயினும் சாதி
இந்துக்களான தேநீர்க் கடையின் உரிமையாளர்கள் மனநிலையில் எவ்வித
மாற்றமும் ஏற்படவில்லை என்பதை
எமது
அமைப்பு சிவில்
சமூகம்
சார்பாக அரசிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இரட்டைக் குவளை முறையின் சில கொடூர முகங்கள்
1. மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம்,
கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மருதங்குடி கிராமத்தில் உள்ள
தேநீர்க் கடை
ஒன்றில் தலித்
மக்கள்
செல்லும்போது தங்கள்
காலணியை கடையிலிருந்து சுமார்
20 அடி
தொலைவில் உள்ள
ஒரு
இடத்தில் கழட்டி
விட்டுச் செல்கிற நிலை
உள்ளது.
2. உசிலம்பட்டி வட்டம்,
செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் தலித்துகள் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்துச் சென்று
தேநீர்
வாங்குகிற நிலை
உள்ளது.
அப்பாத்திரத்தைக் கூட
தேநீர்க் கடை
உரிமையாளர்கள் கையால்
தொடமாட்டார்கள்.
3. உசிலம்பட்டி வட்டம்,
கோவிலாங்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட செல்லம்பட்டி கிராமத்தில் உள்ள
தேநீர்க் கடையில் இரண்டு
விதமான
இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இங்கு
தலித்துகளுக்கு தனி
குவளையும் சாதி
இந்துக்களுக்கு தனி
குவளையும் கொடுக்கப்பட்டாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படுகிற குவளையில் பெயிண்ட் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
4. செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பசுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் எமது
குழுவினரிடத்தில், “அண்மையில் இறப்புச் செய்தி
சொல்வதற்காக அருகாமையில் உள்ள
கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது தேநீர்க் கடையில் தலித்துகளுக்கு பயன்படுத்தப்படும் குவளை
தேநீர்க் கடையில் சொருகி
வைக்கப்பட்டிருந்தது. அவற்றில்தான் எனக்கு
தேநீர்
கொடுத்தார்கள். தேநீர்
குடித்த பிறகு
அக்குவளையை நானே
கழுவி
வைத்தேன்” என்று
கூறினார்.
5. செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம் கிராமத்தில் தேநீர்க் கடையில் இரண்டு
விதமான
இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகள் தேநீர்க் கடை
நடத்தக்கூடாது என்று
ஊர்கட்டுப்பாடும் இக்கிராமத்தில் உள்ளது.
6. திருமங்கலம் ஒன்றியம், சாத்தன்குடி கிராமத்தில் தலித்துகள் தரையில் அமர்ந்துதான் தேநீர்
குடிக்கின்றனர். இக்கடைகளில் தலித்துகளுக்கு சில்வர் குவளையும், சாதி
இந்துக்களுக்கு கண்ணாடி குவளையும் பயன்படுத்தப்படுகின்றன.
7. கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஓவரி
கிராமத்தில் தலித்துகள் தேநீர்க் கடைக்கு செல்லும்போது செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்கிற
தடை
விதிக்கப்பட்டுள்ளது.
8. டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வி.சத்திரப்பட்டி
கிராமத்தில் உள்ள
தேநீர்க் கடையில் இரண்டு
விதமான
குவளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்குள்ள தேநீர்க் கடை
இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்து தேநீர்
குடிக்க முடியாது.
தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படும் கிராமங்களின் விபரங்கள்
மதுரை வடக்கு – தெற்கு தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
மதுரை வடக்கு
|
மதுரை மேற்கு
|
சிறுவாலை
|
2.
|
மதுரை வடக்கு
|
மதுரை மேற்கு
|
வயலூர்
|
3.
|
மதுரை வடக்கு
|
மதுரை மேற்கு
|
மஞ்சம்பட்டி
|
4.
|
மதுரை வடக்கு
|
மதுரை மேற்கு
|
தோடனேரி
|
5.
|
மதுரை வடக்கு
|
மதுரை கிழக்கு
|
மீனாட்சிபுரம் காலனி
|
6.
|
மதுரை தெற்கு
|
திருப்பரங்குன்றம்
|
தென்பழஞ்சி
|
7.
|
மதுரை தெற்கு
|
திருப்பரங்குன்றம்
|
கீழக்குயில்குடி
|
8.
|
மதுரை தெற்கு
|
திருப்பரங்குன்றம்
|
மேலகுயில்குடி
|
மேலூர் தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
மேலூர்
|
மேலூர்
|
தென்னம்மநல்லூர்
|
2.
|
மேலூர்
|
மேலூர்
|
கள்ளம்பட்டி
|
3.
|
மேலூர்
|
மேலூர்
|
எம்.மலம்பட்டி
|
4.
|
மேலூர்
|
மேலூர்
|
அரிட்டாபட்டி
|
5.
|
மேலூர்
|
மேலூர்
|
வெள்ளிரிபட்டி
|
6.
|
மேலூர்
|
மேலூர்
|
முனியாண்டிபட்டி
|
7.
|
மேலூர்
|
மேலூர்
|
முசுண்டகிரிபட்டி
|
8.
|
மேலூர்
|
மேலூர்
|
கிடாரிபட்டி
|
9.
|
மேலூர்
|
மேலூர்
|
ஏ.வெள்ளாளபட்டி
|
10.
|
மேலூர்
|
கொட்டாம்பட்டி
|
அம்பலகாரன்பட்டி
|
உசிலம்பட்டி தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
தும்மக்குண்டு
|
2.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
முண்டுவேலம்பட்டி
|
3.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பிள்ளநேரி
|
4.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
சங்கம்பட்டி
|
5.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
வலங்ககுளம்
|
6.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
காந்திநகர் - செல்லம்பட்டி
|
7.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
செல்லம்பட்டி
|
8.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ஐயன்கோவில்பட்டி
|
9.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பசுகாரம்பட்டி
|
10.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
சடச்சிபட்டி
|
11.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பெரியகுறவக்குடி
|
12.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கரையான்பட்டி
|
13.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பாப்பாபட்டி
|
14.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
வாலாந்தூர்
|
15.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
குப்பனம்பட்டி
|
16.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
உச்சபட்டி
|
17.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
நாகலாபுரம்
|
18.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ஆரியபட்டி
|
19.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பொட்டுலுபட்டி
|
20.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கோவிலாங்குளம்
|
21.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
அய்யம்பட்டி
|
22.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
நாட்டாமங்கலம்
|
23.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ஜெயராஜ்நகர்
|
24.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கரிசல்பட்டி (மூர்த்தி நகர்
காலனி)
|
25.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பாலூத்துபட்டி
|
26.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கோட்டையூர்
|
27.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
நத்தம்பட்டி - ஜனதா
காலனி
|
28.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கட்டத்தேவன்பட்டி
|
29.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
நல்லபெருமாள்பட்டி
|
30.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ஈச்சம்பட்டி
|
31.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
விக்கிரமங்கலம்
|
32.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ராமசாமிபுரம்
|
33.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
சொக்கத்தேவன்பட்டி
|
34.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
சக்கலியங்குளம்
|
35.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
வடக்கம்பட்டி
|
36.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கே.ஜே.காலனி
|
37.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கஸ்பமுதலைக்குளம்
|
38.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
ஜோதிமாணிக்கம்
|
39.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கொடிக்குளம்
|
40.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பூதிப்புரம்
|
41.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
முத்தையன்பட்டி
|
42.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
நடுமுதலைக்குளம்
|
43.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
எம்.கீழப்பட்டி
|
44.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கண்ணணூர்
|
45.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
கருவேப்பிள்ளை
|
46.
|
உசிலம்பட்டி
|
செல்லம்பட்டி
|
பன்னியான்
|
47.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
உ.புதுக்கோட்டை
|
48.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
பசும்பொன் நகர்
|
49.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
கவனம்பட்டி
|
50.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
நடுப்பட்டி காலனி
|
51.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
கீரிப்பட்டி
|
52.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
வடுகப்பட்டி
|
53.
|
உசிலம்பட்டி
|
உசிலம்பட்டி
|
கொங்கபட்டி
|
திருமங்கலம் தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
விடத்தகுளம்
|
2.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
ப.அம்மாபட்டி
|
3.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
சொக்கநாதன்பட்டி
|
4.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
அ.கொக்குளம்
|
5.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கள்ளபட்டி
|
6.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
சின்னவாகைகுளம்
|
7.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
பெரியவாகைகுளம்
|
8.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கே.பாறைப்பட்டி
|
9.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
வடிவேல்கரை
|
10.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
மாவிலிபட்டி
|
11.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கரடிக்கல்
|
12.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கே.ஆலம்பட்டி
|
13.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கண்டகுளம்
|
14.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
சாத்தன்குடி
|
15.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
கீழவநேரி
|
16.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
பன்னிக்குண்டு
|
17.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
ராயபாளையம்
|
18.
|
திருமங்கலம்
|
திருமங்கலம்
|
எஸ்.வலையபட்டி
|
19.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
தும்பகுளம்
|
20.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
டி.
அரசபட்டி
|
21.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
வேப்பன்குளம்
|
22.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
பேய்க்குளம்
|
23.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
மையூட்டான்பட்டி
|
24.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
வில்லூர்
|
25.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
டி.கருப்பையாபுரம்
|
26.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
மேலப்பட்டி
|
27.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
க.சென்னம்பட்டி
|
28.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
மருதங்குடி
|
29.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
க.வெள்ளாக்குளம்
|
30.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
ஓடைப்பட்டி
|
31.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
வலையங்குளம்
|
32.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
மொச்சிகுளம்
|
33.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
மரவப்பட்டி
|
34.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
சித்தூர்
|
35.
|
திருமங்கலம்
|
கள்ளிக்குடி
|
ஓவரி
காலனி
|
36.
|
திருமங்கலம்
|
திருப்பரங்குன்றம்
|
வடபழஞ்சி
|
வாடிப்பட்டி தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
எஸ்.பெருமாள்பட்டி
|
2.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
மேலக்கால்
|
3.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
கட்டகுளம்
|
4.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
கச்சைகட்டி
|
5.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
ஜெமினிபட்டி
|
6.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
கீழமட்டையான்
|
7.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
காடுபட்டி
|
8.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
கச்சிராயிருப்பு
|
9.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
திருமால்நத்தம்
|
10.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
நெடுங்குளம்
|
11.
|
வாடிப்பட்டி
|
வாடிப்பட்டி
|
அயன்
குருவித்துறை
|
12.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
பெரிய இலந்தைக்குளம்
|
13.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
மேட்டுராஜன்பட்டி
|
14.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
கீழசின்னாம்பட்டி
|
15.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
மறவயப்பட்டி
|
16.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
டி.நாராயணபுரம்
|
17.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
ராஜாக்காள்பட்டி
|
18.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
மாணிக்கம்பட்டி
|
19.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
தெத்தூர்
|
20.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
சத்திரவெள்ளாளபட்டி
|
21.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
எருமபட்டி
|
22.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
எர்ரம்பட்டி
|
23.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
தாதகவுண்டன்பட்டி
|
24.
|
வாடிப்பட்டி
|
அலங்காநல்லூர்
|
டி.கொளஞ்சிப்பட்டி
|
பேரையூர் தாலுகா
வ.எண்
|
தாலுகா
|
ஒன்றியம்
|
கிராமம்
|
1.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
ப.முத்துங்கபுரம்
|
2.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
புளியம்பட்டி
|
3.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
குருவப்பநாயக்கன்பட்டி
|
4.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கொல்லவீரன்பட்டி
|
5.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
என்.முத்துலிங்கபுரம்
|
6.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
முத்துப்பாண்டிபட்டி
|
7.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
வி.ரெட்ரப்பட்டி
|
8.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கோடனேரி
|
9.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கொட்டாணிபட்டி
|
10.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கண்டயதேவன்பட்டி
|
11.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
சத்திரப்பட்டி
|
12.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
வையூர்
|
13.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கரைக்கேணி
|
14.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
எஸ்.சுப்புலாபுரம்
|
15.
|
பேரையூர்
|
டி.கல்லுப்பட்டி
|
கெஞ்சும்பட்டி
|
16.
|
பேரையூர்
|
சேடபட்டி
|
குடிசேரி
|
17.
|
பேரையூர்
|
சேடபட்டி
|
கோட்டைப்பட்டி
|
18.
|
பேரையூர்
|
செல்லம்பட்டி
|
பெருங்காயநல்லூர்
|
கோவை
மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக்குவளைமுறை நடைமுறையில் உள்ள
தீண்டாமைக்கிராமங்கள் சிலவற்றின் பட்டியலை பல்லடம் ஒன்றிய
பெரியார் திராவிடர்கழகப் பொறுப்பாளர் தோழர்
விஜயன்
அவர்கள் தயாரித்துள்ளார். அதை
அப்படியே வெளியிடுகிறோம். இது
முதற்கட்ட ஆய்வில் கிடைத்த முதல்
பட்டியல். இப்பட்டியல் இன்னும் நீளும்
என்பதை
வேதனையுடன் அறிவிக்கிறோம்.
1.சதீஸ் டீஸ்டால்
மல்லேகவுண்டம்பாளையம்
பல்லடம் வட்டம் - திருப்பூர் மாவட்டம்
2.செட்டியார் டீக்கடை
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
3. 3 கடைகள்
த.கிருஷ்ணாபுரம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
4.கவுண்டர் டீஸ்டால் & உணவகம்
சின்னப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
5.கவுண்டர் டீக்கடை
சாலைப்புதூர்
குடிமங்கலம் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்
6. 2 டீக்கடைகள்
மூங்கில்தொழுவு பிரிவு
மடத்துக்குளம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
7.ஊர் டீக்கடை
செஞ்சேரிப்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
8.பாலு உணவகம்
கரடி வாவி
பல்லடம் வட்டம் - திருப்பூர் மாவட்டம்
9.ஊர் டீக்கடை
குள்ளம்பாளையம்
பல்லடம் வட்டம் - திருப்பூர் மாவட்டம்
10.பழனிச்சாமி டீக்கடை
வெங்கிட்டாபுரம்
பல்லடம் வட்டம் - திருப்பூர் மாவட்டம்
11.3 டீக்கடைகள்
மாதப்பூர்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
12.அய்யிறு டீக்கடை
தாயம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம் -
திருப்பூர் மாவட்டம்
13.பள்ளிக்கூட பக்க டீக்கடை
சேமலைகவுண்டம்பாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
14.3 டீக்கடைகள்
வலுப்புரம்மன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
15.டீக்கடை
கண்டியன்கோவில்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
16.நாகராஜ் டீக்கடை
பள்ளிக்கூடம் அருகில்
நல்லூர்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்
17.ஊர் டீக்கடை
வல்லகுண்டாபுரம்
உடுமலை ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
18.மெடிக்கல்ஸ் பக்க டீக்கடை
வா.அய்யம்பாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
19.ஊர் டீக்கடை
நாகம்மாபுதூர்
அன்னூர் ஒன்றியம் - கோவை மாவட்டம்
20. டீக்கடைகள்
தொங்குட்டிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
21.அம்மன் டீ காபி நிலையம்
நால்ரோடு
பொல்லிகாளிபாளையம்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
22.ஸ்ரீசக்தி டீஸ்டால், டிபன் சென்ட்டர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
23.ஜே.பி.ஆர். டீ ஸ்டால்
மாதேஸ்வரா நகர்
கணபதி பாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
24.வெள்ளிங்கிரி டீக்கடை
காளிவேலம்பட்டி
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
25.பஸ்ஸ்டாப் டீக்கடை
கரடிவாவிபுதூர்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
26.வஞ்சியம்மன் உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
27.கோவில் டீக்கடை, உணவகம்
செம்மிபாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
28.பஸ்ஸ்டாப் டீக்கடை
காடாம்படி
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
29.டீக்கடைகள்
செங்கத்துறை
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
30. ஊர் டீக்கடை
அப்பநாயக்கன்பட்டிபுதூர்
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
31.பஸ்ஸ்டாப் டீக்கடை
சித்தநாயக்கன்பாளையம்
சுல்தான்பேட்டை ஒன்றியம்
கோவை மாவட்டம்
32.ஊர் டீக்கடை, உணவுவிடுதி
நல்லகட்டிபாளையம்
புதுவம்பள்ளி பஞ்சாயத்து
சூலூர் வட்டம் - கோவை மாவட்டம்
33.ஊர் டீக்கடை
நல்லூர்பாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
34.ஊர் டீக்கடை
மலையப்பாளையம்
பல்லடம் ஒன்றியம் - திருப்பூர் மாவட்டம்
35.ஊர் டீக்கடை
கேத்தனூர்
பொங்கலூர் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
36.மாணிக்கராஜ் டீக்கடை
இச்சிபட்டி
பல்லடம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
37.கலைவாணி டீக்கடை
இச்சிபட்டி
பல்லடம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
38.பஸ்ஸ்டாப் டீக்கடை
பெத்தாம்பூச்சிபாளையம்
பல்லடம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
39.ஊர் டீக்கடை
அனுப்பட்டி
பல்லடம் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்
40.கவுண்டர் டீக்கடை
கல்லம்பாளையம்
பல்லடம் நகராட்சி
திருப்பூர் மாவட்டம்
இரட்டைக் குவளை முறைக்கு எதிரான நடவடிக்கைகள்
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 149 கிராமங்களில் இரட்டைக் குவளை
முறைக்கு எதிராக
11 கிராமங்களில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 8 புகார்கள் மீது
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆய்வு
நடத்தப்படாத பல
கிராமங்களிலும் இரட்டைக் குவளை
முறைகள் பயன்படுத்தப்படுகிற போக்கு
இருக்கலாம். இரட்டைக் குவளை
முறைக்கு எதிராக
கடும்
நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று கடந்த
ஏப்ரல்
2011 மாதத்தில் உச்சநீதிமன்றம் தம்முடைய கருத்தினை வலுவாகத் தெரிவித்திருந்தது. ஆனாலும் பல
கிராமங்களில் தேநீர்க் கடையில் கூட
தலித்துகளுக்கும் சாதி
இந்துக்களுக்கும் ஒரே
விதமான
குவளை
பயன்படுத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
சில
வருடங்களுக்கு முன்பு
சமத்துவ தேநீர்
விருந்து என்கிற
திட்டம் தமிழக
அரசால்
இரட்டைக் குவளை
முறையை
ஒழிப்பதற்காக கொண்டு
வரப்பட்டாலும் அத்திட்டம் பெயரளவில் சுருங்கிப் போய்விட்டது. தீண்டாமை ஒழிப்பு என்பது
சடங்குத் தனமான
ஒழிப்பல்ல. நம்முடைய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய மாபெரும் நடவடிக்கை.
சாதிய
வேர்களின் கூறுகளாகத்தான் இதுபோன்ற பாகுபாட்டின் வடிவங்களைக் கூறலாம். ஆகவே
தமிழக
அரசு
தேநீர்க் கடையில் பயன்படுத்தப்படுகிற இரட்டைக் குவளை
முறைக்கு எதிராக
கடும்
நடவடிக்கை எடுக்க
தீவிர
முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் கீழ்கண்ட பரிந்துரைகளை எமது
எவிடன்ஸ் அமைப்பு தமிழக
அரசிற்கு முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
• தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை
முறை
பயன்படுத்துகிற உரிமையாளர்கள் மீது
தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
1989 மற்றும் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்
1955 ஆகியவற்றின் கீழ்
வழக்கு
பதிவு
செய்து
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
• தேநீர்க் கடைகளில் உள்ள
இரட்டைக் குவளை
முறைகளை கண்காணிப்பதற்கு கிராம
நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அடங்கிய குழுவோடு அப்பகுதி காவல்நிலையமும் இணைந்து செயலாற்ற தமிழக
அரசு
சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
• இரட்டைக் குவளை
முறை
பயன்படுத்துகிற தேநீர்க் கடை
உரிமையாளர்களுக்கு ரூ.5
இலட்சம் வரை
அபராதம் விதிக்க அரசு
சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
• தேநீர்க் கடைகளை
கண்காணிப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க
சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• தேநீர்க் கடை
மட்டுமல்ல உணவு
விடுதி,
சலூன்,
நியாய
விலைக்
கடை,
பல்பொருள் அங்காடி என்று
பல்வேறு கடைகளில் கடைபிடிக்கப்படுகிற தீண்டாமைக்கு எதிராக
சிறப்பு அரசு
உத்தரவு வெளியிடப்பட வேண்டும்.
• ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
வன்கொடுமைக்கு எதிரான
கண்காணிப்பு குழு
கூட்டங்களில் இரட்டைக் குவளை
முறை
நிலைகள் குறித்த விவாதத்தினை நடத்த
தமிழக
அரசு
உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment