Tuesday, April 24, 2012

பசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்ட சுபாஷ் பண்ணையார் எங்கே?


சென்னையில், மாநகர காவல்துறை ஆணையராக விஜயக்குமார் பதவியில் இருந்தபோது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டவர் வெங்கடேஷ் பண்ணையார். இவரது தம்பிதான் சுபாஷ் பண்ணையார்.

பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியனுக்கும் இடையே நீண்ட காலமாகவே பகை உள்ளது.இவர்களின் முன்பகை காரணமாக இரு தரப்பிலும் பல தலைகள் விழுந்துள்ளன.

சுபாஷ் பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணிய நாடார், தந்தை அசுபதி ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு எப்போதும்வென்றான் அருகே பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தொடர்பாக எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.

இது தவிர ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் கடந்த 10ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய ஆறுமுகசாமி, அருளானந்தன் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாடிகொம்பு போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்ததில் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உத்தரவின் பேரில் பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுபாஷ் பண்ணையார், ஆறுமுகச்சாமி, அருளானந்தம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட நிர்மலா, கோழி அருள் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நிர்மலா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ் பண்ணையார், கோழி அருள் உள்பட 9 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய திண்டுக்கல் டிஎஸ்பி சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோகன், தெய்வம், சுப்பிரமணியன், சிவகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சரணடைந்துள்ள அருளானந்தன், சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரையை அடுத்துள்ள முள்ளக்காடை சேர்ந்தவர். அருளானந்தன் மீது தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

இன்னொருவரான ஆறுமுகச்சாமி, 2007ல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மீன் வேனை கடத்தியது தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர். 2008ம் ஆண்டு சுரண்டை அருகே குருங்காவனம் நாட்டாமை பெரியசாமியை கொலை செய்த வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இவர் மீது பாவூர்சத்திரம், சுரண்டை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே சுபாஷ் பண்ணையார், கோழி அருள் உள்பட சிலர் கேரளா மற்றும் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் நேறறு முன்தினம் அங்கு சென்று அவர்களை தேடி வருகின்றனர்.

சுபாஷ் பண்ணையார் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்ததால், குஜராத், கொல்கத்தா, மும்பை, ஆந்திரா போன்ற பகுதிகளூக்கு தமிழக தனிப்படை போலீசார் விரைந்து சென்று தேடி வந்தனர். பழிக்கு பழிக்கு வாங்கும் முயற்சியாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களும் 3 தனிப்படைகளாக பிரிந்து தேடி வந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று (23.03.2012) காலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சுபாஷ்பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவல் மிகவும் நம்பகமான இடத்தில் இருந்து வந்தது.


போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாரா? பசுபதிபாண்டியன் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்டாரா? என்ற கேள்வி மட்டும் எழுந்தது.

சுபாஷ் பண்ணையாருக்கு மும்பையில் தொழில் விரோதிகள் இருப்பதாகவும், அவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் தகவல் வந்தது.


இதையடுத்து நக்கீரன் இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி காட்டூத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் நிலவியது.


இந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள சுபாஷ் பண்ணையார் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அப்போது செல்பொன் சுவிட் ஆஃப் செய்யப் பட்டிருந்திருக்கிறது.

உண்மையில் சம்பவம் நடந்துவிட்டதா? அல்லது அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிக்கொண்டு வரும் சுபாஷ், தற்போதும் வேறு நம்பரை மாற்றிவிட்டாரா? என குழப்பத்தில் இருந்தனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

சுபாஷ் பண்ணையாரை போலீசார் ரகசிய இடத்தில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வந்தது.

தற்போதைய நிலவரப்படி, சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும், அவரிடமே பேசி உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

==============================================================================

சில மாதங்களாகவே தென் மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஜாதிய அமைப்பு நிர்வாகிகள் கூறி வந்த தகவல், ‘நெல்லையில் விரைவில் ஒரு என்கவுன்டர் உண்டு’. அதுகோழிஅருள்தான் என்றனர். ஆனால், அவனை போலீஸார் அமுக்கிப் பிடித்து விட்டனர். அவன் கொடுத்த தகவலின் பேரில், ராக்கெட் ராஜா மீது குறி வைத்துள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

யார் இந்தக்கோழிஅருள்?

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சேர்ந்த தேவராஜ்-பூபதி தம்பதியரின் மகன் தான், ‘கோழிஅருள். அவனுடைய அண்ணன் பெருமாள்-புரம் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். அந்தப்பகுதியில், ஏற்கெனவே அருள் என்பவன் சிறிய தாதாவாக உலா வர, இவனை வித்தியாசப்படுத்திக் காட்ட,‘கோழிஅருள் என்று அவனது சகாக்கள் கூப்பிட ஆரம்பித்தனர். பெருமாள்புரம் பகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பெஞ்சமின் என்பவர், தாதா இமேஜில் வளரத் தொடங்கினார். இவர் ஜான் பாண்டியனுக்கு நெருக்க-மானவர். ‘கோழிஅருள், ராக்கெட் ராஜா, சிங் நாடார் போன்றவர்-களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பெஞ்சமின் போட்டுத் தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மூவரும் முழு தாதா இமேஜிற்குள் வந்தனர்.

நாசரேத் கபிலன், கராத்தே செல்வின் போன்றோரின் பாசறையில் முக்கியப் பங்கு வகித்தான்கோழிஅருள். காலப்போக்கில் வெங்கடேச பண்ணையாரின் அணியில் இடம் கிடைத்தது. வெங்கடேச பண்ணையாரின் மறைவிற்குப் பிறகு சுபாஷ் பண்ணையார் (வெங்கடேச பண்ணையாரின் ஒன்றுவிட்ட சகோதரர்) அணியில் இடம் பிடித்தான். பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியானான். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான். ஜாமீனில் வெளியே வந்ததும் அப்படியே தலைமறைவானான். அவ்வப்போது பலரை மிரட்டிப் பணம் வசூலிப்பதுதான் அருளுக்கு வேலை.

அருளுக்கு எதிராகப் பலரும் போலீஸிற்கு போக பயந்த நிலையில், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வியின் தீவிர ஆதரவாளருமாகிய வக்கீல் பிரபுவை, கப்பம் கேட்டு மிரட்டியதுமே அவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் அருளை தீவிரமாகத் தேடத் தொடங்கியது போலீஸ். என்கவுன்-டரில் போடப்படுவான் அருள் என்ற பரபரப்புக் கிளம்பியது. ஆனாலும் பயமின்றி, பெருமாள்புரத்தில் அருள் சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் அருளின் மற்றொரு தம்பி குட்டி என்பவனை வேறொரு வழக்கில் போலீஸார் தேடி வந்தனர். அவனுக்கு விரித்த வலையில், ‘கோழிஅருள் சிக்கினான். அருளை கஸ்டடியில் எடுத்து போலீஸார் விசாரித்ததில், அவன் கூறிய தகவலின் அடிப்படையில், திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி என்ற கிராமத்தில் உள்ள ராக்கெட் ராஜாவின் வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர்.

அங்கு ஒரு பம்ப் ஆக்ஷன் ரைபிள், (இதன் குண்டு, ஒரு பேட்டரி செல் சைஸ் இருக்குமாம். சுட்டால் சேதாரம் அதிகம்) .கே.47 துப்பாக்கிக்கு உரிய காலி தோட்டாக்கள் 4 மற்றும் 59-ரவுண்டு தோட்டாக்கள், ஒரு கோடாரி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். அங்கிருந்த ராக்கெட் ராஜா அண்ணன் கண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மார்ச் 23-ம் தேதி கராத்தே செல்வினின் பிறந்த நாள் விழா வருகிறது. அதனையொட்டி வேறு சில சமுதாய வி..பி.க்களுக்கு நாள் குறிக்க திட்டமிட்டிருப்பதாக, ‘கோழிஅருள் கூற, ராக்கெட் ராஜாவையும் தீவிரமாகத் தேடத் தொடங்கி யுள்ளது போலீஸ்.

யார் இந்த ராக்கெட் ராஜா?

ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. அவருடைய தந்தை. ஜெகதீசன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ஏழு சகோதரர்கள். நான்கு சகோதரிகள். இரு சகோதரர்கள் வழக்கறிஞர்கள். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கராத்தே செல்வினை கொலை செய்த கட்டத்துரையை கொலை செய்த வழக்கிலும், முக்கியக் குற்றவாளி ராக்கெட் ராஜா. அந்த வழக்கிலும் விடுதலையானார். வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கியவர். அப்புறம் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து இயங்கினார். மூன்று வருடங்களுக்கு முன்புநாடார் மக்கள் சாதி இயக்கம்என்ற ஓர் அமைப்பை, கராத்தே செல்வின் நினைவு நாளன்று, வள்ளியூரில் மிகப் பெரிய கூட்டம் கூட்டி, தொடங்கி வைத்தார். மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய சினிமா ஃபைனான்ஸியர் (சேட்) மகளைக் காதலித்து மணம் முடித்தவர். அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். வருடம் தோறும் வெங்கடேச பண்ணையார் நினைவு நாளன்று தவறாமல் மூலக்கரை வந்து அஞ்சலி செலுத்துகிறார்.

ராக்கெட் ராஜா மீது இருந்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டன. இந்த நேரத்தில், கராத்தே செல்வின் நினைவு நாளில் ஒரு தலை உருளும் என்றுகோழிஅருள் கூறியிருப்பது, போலீஸாருக்குப் பெரும் சந்தேகத்தைக் கிளப்பி-யுள்ளது. ‘கோழிஅருளின் வாக்குமூலத்தை வைத்து, ராக்கெட் ராஜாவை வளைக்க போலீஸார் திட்டுமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, நெல்லை சரக டி..ஜி. கண்ணப்பனிடம் பேசினோம். “அருளின் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். ‘கோழிஅருள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜாவைத் தேடி வருகிறோம், விரைவில் கைது செய்வோம். மற்றபடி யாரையும் என்கவுன்டர் செய்யும் எண்ணம் ஏதுமில்லைஎன்று கூறினார்.

கோழிஅருளின் தந்தை தேவராஜோ, “போலீஸார் சிலரின் தூண்டுதலின் பெயரில், எனது மகனை என் கவுன்டரில் போட்டுத் தள்ள போவதாகக் கூறு கின்றனர். அதனைத் தடுக்க நீதிபதிகளுக்கும், கலெக்டருக்கும் தந்தி கொடுத்துள்ளேன்என்று கூறினார்.

சமீப நாட்களாகவேகோழிஅருளுக்கும், ராக்கெட் ராஜாவுக்கும் உறவு சரியில்லை. இதனைப் பயன்படுத்திகோழிஅருள் மூலமாக ராக்கெட் ராஜாவை மாட்டி விட சதி நடக்கிறது என்கின்றனர் சிலர். ‘கோழிஅருள், ராக்கெட் ராஜா இருவருமே ராதிகா செல்வியின் எதிர் முகாமில் இருப்பதால், இருவர் கைதிலும் ராதிகா செல்வி ஆர்வம் காட்டுவதாகவும் ஒரு தகவல் உண்டு!



2 comments:

  1. hey dont post wrong info. see today's "dhinathanthi 4/12/13" newspaper subash pannaiyar is still alive.

    ReplyDelete
  2. replica bags china replica hermes handbags h4v63e7u79 replica bags lv replica bags delhi Resources g9l90a2h94 replica bags online shopping india replica bags online uae learn the facts here now l3r92a2f79 replica bags online shopping india

    ReplyDelete

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget