Tuesday, October 2, 2012

The Royal Family



தேவேந்திர குலத்தவர் புராணம் அம்மக்களை சிவனின் வியர்வைத் துளியிலிருந்து உருவானோர் என்று கூறுகிறது.இது ஏன்? நியாயப்படி இவர்கள் தலைவன் இந்திரன் தானே?இந்திரன் மக்கள் எப்படி சிவனின் படைப்பாயினர்?

மருத நில மக்களாகிய தேவேந்திர குலத்தவர் அந் நிலத் தலைவன் இந்திரனின் மக்களாகத்தானே இருக்க வேண்டும்?

பின்னர் ஏன் இவர்கள் தங்கள் புராணத்தில் தாங்கள் சிவனின் வியர்வைத் துளியிலிருந்து உதித்தோர் எனக் கூற வேண்டும்?இவர்கள் புராணம் இவர்கள் இனத்தவரால்தான் உருவாக்கப்பட்டது.

தேவேந்திரனுக்கு மகனாக இருக்க வேண்டிய மருத நில மள்ளர்(பள்ளர்) ஏன் மாறுபட்டு தாங்கள் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் வளர்ப்பு மகனாக வந்தவர் எனக் கூற வேண்டும்? கி.பி. 1528- இல் எழுதப் பெற்ற தேவேந்திரர் குலச் செப்பேடு(பழனி செப்பேடு) தேவேந்திரர் சிறப்பைக் கூறுகிறது. அதில் தேவையானவைகளை மட்டும் பார்ப்போம்.
தேவேந்திரர்கள் பரமசிவனால் படைக்கப்பட்டோர், பார்வதி முலைப் பாலுண்டோர்,தேவேந்திரனுக்கும்,இந்திராணிக்கும் பிள்ளையாய் வளர்ந்தோர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறிஞ்சி நிலத்தவர் ஆதிக்கத்தினால்தான் மருத நில மக்கள் தங்கள் தோற்றத்தை சிவனோடு தொடர்பு படுத்திக்கொள்ள நேர்ந்தது.இந்திரனை தங்களை உருவாக்கியவன் என்று கூறாமல் உறவு முறை கொண்டவன் என்றும் கூறும் நிலை ஏற்பட்டது.
இன்று தற்செயலாக ஒரு நூலில் கண்ட செய்தியை அப்படியே தருகிறேன்.மள்ளர் வீழ்ச்சி என்ற தலைப்பில் கண்ட செய்தி:களப்பிரர் காலத்தில் ஒரு முன்னூறு ஆண்டுகள் தமிழர்கள் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்தாலும் மீண்டும் எழுந்து கடுங்கோன் மள்ளர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தனர்.
           ஆனால் 14-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையத் தொடங்கிய மள்ளர்கள் 16-ஆம் நூற்றாண்டில் அரசியல் ரீதியாக முழுமையாக வீழ்ச்சியடைந்தனர். இந்த வீழ்ச்சியின் இன்னொரு பரிமாணம் வேற்றுமொழி ஆட்சியாளர்கள் மள்ளர்களை பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக வீழ்த்தியது.இதில் தெலுங்கு நாயக்கர்கள் பெரும்பங்கு வகித்தினர்.இவர்களின் திட்டமிட்ட பள்ளேசல்கள் மள்ளர்களை சமூகரீதியாக ஒடுக்குவதற்கும்,பாளையப்பட்டுகள் பொருளாதரரீதியாக ஒடுக்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.கல்வி மறுக்கப்பட்டது.மள்ளர்களின் வரலாறு அழிக்கப்பட்டது,மறைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பெரிய கோயில்களும் மள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டது.இந்தக் கொடுமைகள் வெள்ளையர் ஆட்சியிலும் தொடர்ந்தது.
எனவே நான் கூறிய 17-ஆம் நூற்றாண்டு என்பது தவறாகிறது.14-ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே மள்ளர் பள்ளராக மாற்றப்பட்டது தொடங்கிவிட்டது என்றே தெரிகிறது.

தேவேந்திர குலத்தவர் வீழ்ச்சி 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.இவர்கள் நிலை மேலும் மோசமாகக் காரணம் மறவர்கள் இவர்கள் வாழ்ந்தப் பகுதிகளில் குடியேற்றப்பட்டதினாலும்தான்.நாயக்கர் ஆட்சி தமிழ் நாட்டின் பழைய நிலையை தலைகீழாக மாற்றியது.இது உண்மையே.

அப்போது பாண்டிய மன்னர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1480 ஆம் ஆண்டில் மன்னரானார்.

கி.பி. 1534 இல் ஆகவராம பாண்டியன் மன்னராகப் பொறுப்பேற்றார்.இவரது தந்தை சடையவர்மன் சீவல்லப பாண்டியன்.
இவர் காலத்தில்தான் பாளையக்கார முறை நாயக்க மன்னர்களால் அறிமுகப்படுதப்பட்டது.
அதன் பிறகு சடையவர்மன் பராக்கிரமன்,நெல்வேலி மாறன் (கி.பி. 1552 - 1564), அதிவீரராம பாண்டியர் முதலானோர் தொடர்ந்து தென்காசிப் பகுதியை ஆண்டனர்.

இவ்வாறு இருக்கையில் இந்தக் காலக் கட்டத்தில் தேவேந்திர இனத்தவர் இன்னல்களுக்குள்ளாயினர்.பாண்டியர் உன்மையில் தேவேந்திர குலத்தவர் என்றால் இத்தகைய அவலங்களை தமது ஆட்சிப் பகுதியில் அனுமதித்திருப்பார்களா?
பாண்டிய மன்னர்கள் இதனை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.குறைந்த பட்ச உதவிகளைக் கூடச் செய்யவில்லை. இவர்கள் தேவேந்திர குலத்தவர் இல்லை என்பதால்தானே?
மன்னராக ஒரு தேவேந்திர குலத்தவர் ஆட்சி செய்யும்போது அவர் இனத்தவர் மிகவும் மோசமான நிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டிருக்க முடியும்?
கி.பி 1518 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பள்ளர் இனத்தை பறையர் இனம் முதலான சில இனங்களோடு வரிசைப்படுத்தியுள்ளது.அப்போதும் பாண்டியர் ஆட்சி இருந்ததே?
ஒரு ஊர் அளவாவது பாண்டியர் செல்வாக்கு இல்லாமல் இருந்ததா?இல்லையே.எந்த பாண்டிய மன்னரும் துணிந்து பள்ளர் தமது இனம் என்பதை ஏன் கூறவில்லை?
ஒருபுறம் பள்ளர்கள் நிலை மோசமாக் இருந்தபோது அவ்வினத்தைச் சேர்ந்த பாண்டியர் எவ்வாறு ஆண்டிருக்க முடியும்?
மேலும் பாண்டியர்கள் வேளாளர்(பிள்ளை) இனத்தவரையே பெரிதும் ஆதரித்தனர். ஏன் பள்ளர்களை ஆதரிக்கவில்லை?
மறவர் இனத்தவரையும் பாண்டியர் சிறப்பித்தனர்.ஆனால் பள்ளர்களை அவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தமது இனத்தவர் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டும் பாண்டியர் சும்மா இருந்தனரா?அவ்வளவு கல்மனம் கொண்டோரா பாண்டியர்?

ஒரு இனம் அதனைச் சார்ந்த அரச மரபு முற்றிலும் அழிந்த பிறகே வீழ்ச்சியடையும். ஆனால் பாண்டியர் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே தாழ்வான நிலையை எப்படி அடையும்?
வரதுங்க ராம பாண்டியர் கி.பி. 1588 ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சி செய்தார். இவருக்குப் பிரகு கி.பி. 1613 ஆம் ஆண்டு முதல் வரகுனராம குலசெகர பாண்டியர் ஆட்சி செய்தார்.இவருக்குப் பின் வந்த அடிகள் பெருமால் எனும் வரகுணராம பாண்டியரே இறுதியாக ஆட்சி செய்தவர். மேற்கூறிய மன்னர்கள் ஆட்சிக்கு முன்னரே தேவேந்திர குலம் மிகவும் ஒடுக்கப்பட்டது.எனவே இப் பாண்டியர் தேவேந்திர குலத்தவர் என்று எவ்வாறு
கூற இயலும்?

மூவேந்தர் ஆட்சியில் பள்ளர் என்ற சாதி தமிழகத்தில் இல்லை.மள்ளர்கள் இருந்தார்கள்.இது உறுதி.நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் தமிழகத்தில் வந்தேறிகள் ஆட்சி நடந்திருக்கலாம் என்பது எனது கருத்து.
அடுத்து கோயில் கட்டிய தலைமை சிற்பி மல்லர் இனத்தைச் சார்ந்தவர் இல்லை என்கிறீர்கள்.குஞ்சரமல்லன் என்பவர் விஸ்வகர்மா இனத்தவர் என்கிறீர்கள்.அப்படி என்றால் சோழர் காலத்தில் விஸ்வகர்மா என்ற சாதி இருந்தது என்பது உங்கள் நிலை. இதன் உண்மை என்ன என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லவும்.ஏன் சிற்பிக்கு குஞ்சர'மல்லன்'என்ற பெயர்?.

அடுத்து மல்லர் என்ற சொல் பற்றியது.மல்லல் என்றால் 'வளம்'என சங்க இலக்கியத்தில் பொருள் கொண்டுள்ளனர்.தொல்காப்பியத்தில்'மல்லல் வளனே'(தொல்.சொல் அதி.8).மல்லல் வளத்தை குறிக்கும் போது மல்லன் என்பது வளமுடையவனை குறிக்கவேண்டும்.மருத நிலம் வளமானது.எனவே,மல்லன்,மல்லர் என்பது மருத நில மக்களைக் குறிக்கும்.

மல்லர் எனில் வலிமையுடையவன்,மற்போரில் தேர்ச்சி பெற்றவன் என்ற அர்த்தமும் உண்டு.எனவே,மல்லர் என்பதற்கு போர்வீரன் என்ற பொருள் கொள்ளவேண்டும்.வளமும்,வலிமையும் உடையவர் மல்லர்.தற்காலத்தில் பள்ளர் இன மக்கள் மட்டுமே மல்லாண்டர் சாமியை போரில் இறந்த மல்லர் நினைவாக கும்பிடுவதே அதன் காரணமாகத்தான்.எனவே மள்ளர் மற்றும் மல்லர் என்பது ஒன்றே.மல்லி என்பது பெண்பால்.மல்லர் குல பாடல் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன் பாருங்கள்.

திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மேலப்பழவூர் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.13/227)பழவூர்ச் சங்கரபடி மல்லன் கங்கன் கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.

மேல்கண்ட அதேஊரில் வாதமுலீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.5/680)நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன்.

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு(தெ.க.6/37)'ஆகோ மல்லகுல கால வாய்க்காலுக்கும் வடக்கு'என்று கூறுகிறது.மல்லர் என்பது ஒரு குலம் என்பது சுட்டப்படுகிறது.

மல்லன் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சிற்பத் தொழிலை வழி வழியாக செய்து வரும் இனத்தவர் இப்போது விசுவகர்ம இனத்தவராக அறியப்படுகிறார்.சோழர் காலத்திய கோயில்களை உருவாக்கியோர் இம்மரபினரே. இன்றைக்கும் இவர்கள் வழி வந்தோர் "ஸ்தபதிகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.

உழவர்களாகவும்,மருத நில வீரர்களாகவும் உள்ள மல்லர் எப்படி இத்தொழில் செய்திருக்க முடியும்? அக்காலத்தில் இது போன்று ஒரு குறிப்பிட்ட இனத்தவர் செய்யவேண்டிய தொழிலை அத்தொழிலோடு சம்பந்தப்படாத ஒரு இனத்தவர் செய்ய உரிமை இருந்ததா?

நீங்கள் காட்டிய கல்வெட்டுச் செய்திகளில் மல்லன் என்ற பெயரும் வருகிறது.சரி.ஆனால் எந்த வரலாற்று நூலிலும் இதனை ஒரு இனமாகக் குறிப்பிடவில்லையே?ஏன்?

வரலாற்றுத் துறை சோழரும்,பாண்டியரும் மள்ளர்(பள்ளர்) இனத்தவர் என்பதை உறுதி செய்யவில்லை.
குடும்பன் என்பது ஒரு குடும்பத்தின் தலைவன் ஆவான்.குடும்பம் என்பது தனி உடைமை ஏற்பட்டபின் உருவானது ஆகும்.தமிழகத்தில் குடும்ப அமைப்பு முதன்முதலில் மருத நில மக்களாகிய மள்ளரிடத்தில்தான் ஏற்பட்டது எனலாம்.இதன் காரணம் முதலில் மருத நில மக்களிடையே நாகரிகம் தோன்றியது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.தற்போதுள்ள தமிழ் அகராதிகளில் குடும்பன் என்பதற்கு பள்ளன் தலைவன் மற்றும் நிலம் அளப்பவன் என்று கண்டுள்ளது.எனவே குடும்பன்,குடும்பி,குடும்பினி என்பது மள்ளருக்குடையது என்பது தெளிவாகிறது.

மூவேந்தர் ஆட்சி தமிழக முழுவதும் பரவிய சமயத்தில் ஊராட்சி சம்பந்தப்பட்ட அலுவல்களை கவனிக்க ஏற்பட்ட ஊர்மன்றம்,ஊர்ச்சபை இவற்றின் தலைவர்களாக இருந்தது மள்ளர்களே.ஊர்ச்சபையின் தலைவராக இருந்து நிர்வாகம் செய்வது குடும்பு பார்த்தல் எனப்பட்டது. இதன் காரணமாகவும் மள்ளர்கள் குடும்பன்,குடும்பி என்று அழைக்கப்பட்டனர்.இதன் பெண்பால் குடும்பினி ஆகும்.

சோழகால கல்வெட்டுகளில் மள்ளர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.அவற்றில் சில;

1.தஞ்சாவூர் ராஜராஜீசுவரம் எனும் பெருவுடையார் கோயில் கல்வெட்டு(தெ.க.2/66 - ராஜராஜர் காலம்)நட்டுவம் செய்தவர் மல்லன் இரட்டையன்.கோவில் கட்டிய தலைமை சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜப் பெருந்தச்சன்.

2.தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீழூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு(தெ.க.7/877 -ராஜேந்திர சோழர் காலம்)விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர்.கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்.

3.தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாரு பஞ்சானதீசுவரர் கோயில் கல்வெட்டு(தெ.க.5/521) ராசராச சோழ மன்னரின் மனைவி ஒலோகமாதேவியார் சார்பாக நிர்வாகம் செய்தவர் அதிகாரிச்சி எருதன் குஞ்சரமல்லி.   [/QஊஓTஏ]

திரு.சித்தார்த், 

       முன்னர் ஒரு பதிவில் ஒரு கல்வெட்டில் உள்ள "பள்ளன்" என்ற சொல் இனத்தைக் குறிப்பதல்ல என்று கூறினீர்கள்.இதே போன்று நீங்கள் காட்டியுள்ள மூன்று கல்வெட்டு செய்திகளையும் அதே முறையில் ஏன் பார்க்கவில்லை?

கல்வெட்டு 1 : மருத நில மறவர் நட்டுவம் செய்தவர். தலைமைச் சிற்பி மள்ளர். விசுவகர்ம இனத்தவர் எனப்படுவோர் இருக்கிறார்களே அவர்கள் செய்த தொழில் என்ன?சிற்பக் கலை வல்லுநர்கள் மள்ளர்களா?அதுவும் தலைமைச் சிற்பி !!

கல்வெட்டு 2:திருக்கோவலூர் பகுதியில் விசித்திரமான ஒரு நிலை.கோதண்டன் கண்டன் என்பவர் மள்ளர்.அவர் சிற்றப்பா மல்லர்.

கல்வெட்டு 3:குஞ்சரமல்லி இனப் பெயரா?

இந்த மூன்று கல்வெட்டுகளில் மல்லன் என்பது இனப் பெயராக வந்தது என்று எவ்வாறு கூற முடியும்? முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்டவர் விசுவகர்ம இனத்தவர் என்பது தெளிவாக உள்ளது."கண்டன்","நாடாள்வான்" என்ற பட்டங்கள் மள்ளருக்குரியதா?உபகாரி மல்லன் என்பதை பெயராகவும் கொள்ளலாமே?

நடுநிலையான ஒரு கல்வெட்டாராய்ச்சியாளரை கேட்டுப் பாருங்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மல்லன் என்னும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கிறதா என்று.

மல்லன் என்ற சொல்லை எங்கு கண்டாலும் அதனை இனப் பெயராக எப்படிக் கொள்ள முடியும்?

லகரதிற்கும், ளகரத்திற்கும் வேறுபாடே இல்லையா?

இடைக்கால சோழர்கால கல்வெட்டுகளில் பள்ளர் என்ற வகுப்பு இடம் பெறவில்லை.ஆனால் அக்காலத்தில் பள்ளன் என்ற தனிப்பட்ட மனிதருடைய பெயராக வழங்கியதாக தெரிகிறது.இடையரில் இருவர் பள்ளன் என்ற பெயருடையவர் பள்ளன் கூத்தன்,பள்ளன் கிழான் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டாரத்தில் இருந்ததாக இராசராசசோழனின் கி.பி.1014 ஆம் ஆண்டுக்கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.இதை வைத்து தவறாக சோழர்காலத்தில் பள்ளன் என்ற இனம் இருந்ததாக முடிவு கொள்ள வேண்டாம்.
தேவேந்திர குலத்தவர் எந்த இனப் பெயரால் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றனர்?
மள்ளர் என்ற இனம் குறித்து ஏன் கல்வெட்டுக்களில் இல்லை?சோழர் காலச் சமுதாயத்திலோ,பாண்டியர் காலச் சமுதாயத்திலோ ஒரு சமூகமாக மள்ளர்கள் அல்லது மல்லர்கள் குறிப்பிடப்படவில்லை.
வெண்கொற்றங்குடை,வெள்ளையானை,தேர்,பதினாறுகால் பந்தல் மற்றும் பதினெட்டு மேள வாத்தியங்கள் பயன்படுத்த உரிமை தற்போது தேவேந்திர குலத்தார் என்ற மள்ளர் குலத்தாருக்கு பாண்டியன் உக்கிரப்பெருவழுதியால் வழங்கப்பட்டதாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு(ஏ ஆர் ஈ 432/1914) கூறுகிறது.

இதற்கிடையில் திருமலை நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் அப்பகுதியிலிருந்த பறையர் குலத்தார் அவை தங்களுக்குரிய உரிமை என்று சொல்ல இதுபற்றி பள்ளர் குலத்தார் மன்னனிடம் முறையிட்டனர்.நாயக்கர் மன்னர் பட்டயம் பார்த்து அது பள்ளர்க்குரிய உரிமை என்று தீர்ப்பளித்தார்.அதுபற்றிய செய்தி ராமநாதபுரம் மாவட்டம் சீவிலிப்புத்தூர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில்(ஏ ஆர் ஈ 588/1926) பொறிக்கப்பட்டுள்ளது.இந்த உரிமை பள்ளர் தவிர்த்து தற்போது தமிழகத்தில் பார்ப்பனர் உட்பட உயர்சாதி என்று பாராட்டப்படும் வகுப்புகள் ஒன்றிற்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்குடை உரிமை சான்றோர்க்கு மட்டுமே உரியது
இவ்விருதுகள் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியால் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியென்றால்

1.தேவேந்திர குலத்தவர் பாண்டியர் என எப்படி கூற இயலும்? பாண்டிய மரபினருக்கு இந்த உரிமைகள் கண்டிப்பாக இருந்திருத்தல் வேண்டும்.இவ்வுரிமைகளை மீண்டும் ஏன் தேவேந்திர குலத்தவர்க்கு வழங்கவேண்டும்?
முடி மன்னர்க்குரிய உரிமைகள் அம்மன்னர் சார்ந்த மரபினருக்கு ஏற்கனவே இருந்திருக்க வேண்டும்.ஆனால் உக்கிரப் பெருவழுதி இவ்வுரிமைகளை கொடுத்ததன் மூலம் தேவேந்திர குலத்தவர் பாண்டியர் மரபினர் அல்ல என்றல்லவா காட்டியிருக்கிறார்.

2.உக்கிரப்பெருவழுதிக்கு முன் ஆண்ட பாண்டிய மன்னர்கள் இல்லையா?அவர்கள் காலத்தில் இவ்வுரிமை தேவேந்திர மக்களுக்கு ஏன் இல்லை?மன்னர் மரபினர் ஏற்கனவே இது போன்ற உரிமைகளைக் கொண்டவர்கள்.மீண்டும் அவர்களுக்கே அவர்கள் உரிமை வழங்கிக்கொண்டனரா?

திருமலை நாயக்கர் காலத்தில் பறையருக்கும்,தேவேந்திர குலத்தினருக்கும் ஏற்பட்ட உரிமை தொடர்பான வழக்கில் இந்த உரிமைகள் தேவேந்திரருக்கு உரியது என்று தீர்ப்பளித்தார்.சரி.ஆனால் அத்தீர்ப்பு பறையருக்கும்,தேவேந்திர குலத்தவருக்கும் ஏற்பட்ட வழக்கிற்குத்தான். மற்ற இன மக்களுக்கு அவ்வுரிமைகள் கிடையாது என்று கூறினாரா?கண்டிப்பாக இல்லை.

மற்ற இனத்தவரும் இவ்வுரிமை பெற்றிருந்தமை குறித்து நான் முந்தைய பதிவில் கூறியிருந்தேன்.இது போன்ற உரிமைகளை யாரும் போலியாகப் பெற முடியாது.ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன உரிமைகள் உள்ளதோ அவ்வுரிமைகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தினர்.
 சோழர் மள்ளர் இனத்தவர் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா?விக்கிரம சோழன் மள்ளர் எனக் குறிப்பிடப்பட்டான் என்று கூறுகிறீர்கள் ஆனால் பள்ளர் இனத்தவரைக் குறிக்கும் ராஜ ராஜ சோழர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

பள்ளர் என்ற இனப்பெயர் சோழர் ஆட்சி தொடக்கநிலையிலேயே ஏற்பட்டுவிட்டதை கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.

இலக்கியங்களில் மட்டுமே மள்ளர் பற்றிக் கூறப்படுகிறது. அப்படி மள்ளர் என்றொரு இனத்தவர் தொடர்ந்து வாழ்ந்திருப்பார்களேயானால் மள்ளர் சமூகம் குறித்து கல்வெட்டுக்கள் இருக்கவேண்டுமே?இருக்கிறதா?

சோழர் கால சமுதாயங்கள் பற்றிக் குறிப்பிடும் நூல்களைப் பாருங்கள். மள்ளர் என்றொரு இனமே குறிப்பிடப்படவில்லை.

மள்ளர்கள் என்ற இனத்தவரைக் குறிப்பிடும் பல்லவர் காலத்து கல்வெட்டு உள்ளதா?
 பார்ப்பனர்களின் குடுமி அறுப்பு மற்றும் பூணூல் அறுப்பு போன்ற திராவிட இயக்கத்தினரின் செயல்கள் பன்முக அடையாள அழிப்பா இல்லையா?
ஆம் எனில், இவை ஒரு பாசிஸ நடவடிக்கையா இல்லையா?
இத்தகைய செயல்களுக்காக என்றைக்கேனும் ஒரேயொரு சந்தர்ப்பத்திலாவது, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையே இல்லையெனினும், குறிப்பாக இந்த நடவடிக்கையையேனும் பாசிஸ நடவடிக்கை என்று நீங்கள் குறிப்பிட்டதுண்டா?
இத்தகைய செயல்களைச் செய்ய வழிகாட்டி ஊக்குவித்த 'பெரியார்' ஒரு பாசிஸ்ட்டா, இல்லையா?
இது தமிழுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும், தேடினாலும் கிடைப்பதற்கரிய நிர்வாகி, தமிழுக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தன்னலமற்ற தலைவர் எழுதிய திருக்குறளுக்கான உரையில் இருந்து எடுத்தது.

1. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்

உரை: குணத்தில் கயயவராக இருப்பர், ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வர். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.

உரை: எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்திக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களை விட, எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்.

3. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டிச் செம்மாக்கும் கீழ்.

உரை: பண்பாடு இல்லாத கயவர்கள் தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

5. அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

உரை: தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ் மக்கள் தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

உரை: மறைக்கப் பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத் தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

7. ஈர்க்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

உரை: கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்குத் தமது எச்சில் கையைக் (கைகைக்?) கூட உதறமாட்டார்கள்.

8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்.

உரை: குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும். ஆனால், கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல் போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

உரை: ஒருவர் உடுப்பதையும், உண்பதையும் கண்டுகூட பொறாமைப் படுகிற கயவன், அவர் மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

10. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றுக்கால்
விற்றற் குரியர் விரைந்து.

உரை: ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

மக்களே, மேலே இருக்குற உரையைப் படிச்சு நான் (ரொம்பத்) தெளிஞ்சுட்டேன். உதரணமா, ***அச்சமே கீழ்கள தாசாரம்***...என்ற வரிகளில் கீழ் என்று குறிப்பிடப் படுவோர் யார்? அவர்களது ஆசாரம் (பழக்க வழக்கம்??) என்ன? கீழ் மற்றும் கயவர் என்று வரும் வார்த்தைகளின் ***உண்மையான*** அர்த்தம் (தான்) என்ன? எதற்காக இந்த பூசி மெழுகும் உரை எழுதப் பட்டது? யாராச்சும் வெளக்குங்களேன்.
இங்கு வைத்துள்ள குறள்களில் மற்றும் அதிகாரத் தலைப்பில், கயவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

*எல்லா சாதியிலும் கயவர்கள் உள்ளனர். இதோ அவர்களின் குண விஷேஷங்கள்* என்று திருவள்ளுவர் சொல்கிறாரா? அல்லது...

*ஒரு குறிப்பிட்ட சாதியிலுள்ள அனைத்து மக்களையும் நான் கயவர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன். அவர்கள் இயல்பே இப்படித்தான்* என்று திருவள்ளுவர் சொல்கிறாரா?
*கயவர்களை விற்கலாம்* என்று திருவள்ளுவர் சொல்கிறார். கயவர்கள் அடிமைகளா? எல்லா சாதியிலும், *விற்றற்குரிய* கயவர் இருந்தனரா?
வேளாளர் பற்றிய எண்ணற்ற ஆதாரங்களை மறுக்க எந்த துப்பும் கிடைக்காத நிலையில் ஒரு செப்பேட்டை எப்படியோ கண்டுபிடித்துவிட்டீர்கள்.

இதோ அடுத்த ஆதாரம்! இந்தப் பட்டியல் நீளும்... வேளாளர் பற்றிய எண்ணற்ற ஆதாரங்களின் பட்டியலில் அடுத்தது: ஒரு வேளாளரே எழுதியது:

"குருத்தணிச் சோழ மன்னன் தன் மகளை சேர மன்னனுக்குத் திருமணம் செய்வித்து சீதனமாக 48,000 வேளாளர் குடும்பங்களை கொங்கு நாட்டிற்கு அனுப்பிவைத்தான் என பெரிய குலத்துத் தலைவர்களான வேணாடுடையார் பட்டயம் கூறுகிறது.

'ரிஷிபகிரிச் சோழன் மகளை
சேரமான் பெருமாள்பாணிக் கிரகனம் பண்ணிக்கொண்ட
படியினாலே சோழ ராசாவின் மகள் தனக்கு
சீதனம் தன் தோப்பனாரைக்
கேட்டது என்னவென்றால் யெனக்கு
சிறிது வேளாளர் குடி வேணுமென்று கேட்க நற்பத்
தெண்ணாயிரம் குடி சேதனம் கொடுத்தபடியினாலே
சேரமான் பெருமாள் கொங்கு மண்டலத்துக்கு
கொங்கு வேளாளர் என்ற பேரும் கொடுத்து
கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்தார்
பேரில் யிருந்த யெண்ணாயிரம் குடியும் கொங்கு
மண்டலம் இருளுரைந்த காண்டாவனம் எல்லாம்
வெட்டி கிராமம் உண்டு பண்ணி

காங்கேயம் பல்லவராயக் கவுண்டர் வம்சா வழி குறிப்புகளும், காங்கேயம் மன்றாடியார் வம்சாவழி குறிப்புகளும் கொங்கு வேளாளர் குடியேற்றம் பற்றிய மேற்கண்ட செய்தியை உறுதி செய்கின்றன."

(காண்க: கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூக வரலாறு, நல். நடராசன், பல்லவி பதிப்பகம், சென்னை, மே 1999)

இப்படி சீதனப் 'பொருளாக' இருந்த வேளாளரை வேளிருடன் தொடர்பு படுத்த முடியுமா அல்லது வேளத்துடன் தொடர்பு படுத்த முடியுமா?

போந்தை- பனம்பூ மாலை சேரமன்னர் அணிவது
வேம்பு- வேப்பம்பூ பாண்டியர் அனிவது
ஆர்- ஆத்திபூ சோழர்க்கு அடையாளம்









3 comments:

  1. அனைத்தும் தவறான பதிவு பழனி செப்பேடு உண்மை ஆனால் வரலாறு இல்லை. பொய். முற்றிலும் பொய்.

    ReplyDelete
  2. இது குறிப்பாக என் பள்ளர் சமுதாயத்தை வீழ்த்த நினைக்க வேண்டும் தமிழகத்தில் மிக பெரிய கோவில்களில் முதல் மரியாதை வாங்கி கொண்டிருக்கும் சமுதாயம் ...நீங்கள் பள்ளரை வந்தேறி என்றால்..நாங்கள் இந்த உலகிற்கு நெல் நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள்... இன்றைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து என்னவென்று ஆராயுங்கள்... எங்களை வந்தேறிகள் என்று பதிவிடும் நீங்கள்தான் வந்தேறிகள்.

    ReplyDelete
  3. replica bags hermes replica gucci bags i3l74v0n51 replica bags nyc why not try here l3o27d2k50 replica louis vuitton replica bags london replica bags from korea Resources w5z40u7f65 replica nappy bags

    ReplyDelete

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget