ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.
இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது.
மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.
ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.
மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.
தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும், உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்.
No comments:
Post a Comment