Wednesday, September 11, 2013

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இன்று (9-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.

இதேபோல் நினைவு ஜோதி எடுத்து வரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget