பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகளை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்காணிக்கும் வகையில் போலீஸாரால் நவீன கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம் இயக்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாமல் நவீன கேமரா பொருத்தப்பட்ட, 300 மீட்டர் உயரத்தில், 5 கி.மீ. சுற்றளவில் பறந்து சென்று வரக் கூடிய உளவு விமானம் போலீஸாரால் வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 6 பேர் கொண்ட குழுவினர் செப்டம்பர் 11-ம் தேதி காலை முதல் தொடர்ந்து அந்த உளவு விமானம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனுக்குடன் தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த உளவு விமானம் உதவியாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment