Tuesday, September 17, 2013

எலுமிச்சை பழம் - மூலிகை மருந்து



எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. 

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. 




எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். 

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது. 

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 




எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும். 

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம். 

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும். 
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும். 

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும். 

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது. 

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது. 



ஓட்ஸ் சாப்பிடுங்கள்



ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.




ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. 





தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்.




Thursday, September 12, 2013

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




 இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் செப்.11ம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், ஆகியோரும், அதிமுக சார்பில் அமைச்சர்கள் சுந்தரராஜ், செல்லூர் ராஜு, முதுகுளத்தூர் எம்எல்ஏ முருகன், ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மாலையில் லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலா ளர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம்பிரபு, பாஜ சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா, மதிமுக சார்பில் முன்னாள் எம்பிக்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர்.இமானுவேல்சேகர னின் மகள்கள் கீதா, பிரபா, பேத்தி சுபா அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட் டம், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.பரமக்குடியில் பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 





==========================================================================


பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரனின் 56-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் விவரம்:

இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் இளைஞர் மன்ற தலைவர் துரைகாந்த் மற்றும் அக் கிராம பொதுமக்கள் காலை 7.00 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் அழகர்சாமி, செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தி.மு.க. சார்பில் அக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், சுப.த. திவாகரன், உ.திசைவீரன், சேது.கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் ஏ.அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக மாவட்டச் செயலாளர் நென்மேனி என்.ஜெயராமன் தலைமையில், பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, மதுரை மாவட்டச் செயலாளர்கள் பூமிநாதன், வீர.தமிழ் செல்வம் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் தொல்.திருமாவளவன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் பாம்பூர் இருளன் ஆகியோர் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் ஏ. ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ஆர்.ராம்பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜெ.ஆலம், முகம்மது ரபீக், நகர் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்டத் தலைவர் கே.சண்முகராஜ், எஸ்.சி. பிரிவு மாநில இளைஞரணிச் செயலாளர் இளங்கண்ணன், வர்த்தக அணி நாகராஜன் ஆகியோர் அக் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நாசாத் திருவள்ளுவன் தலைமையிலும், மள்ளர் நாடு நிறுவனத் தலைவர் சுப.அண்ணாமலை, சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாவட்டத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி இமானுவேல் சேகரன் பேரவை நிறுவனத் தலைவர் பூ.சந்திரபோஸ் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், பல்வேறு நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள சமுதாய மக்கள் பால்குடம் எடுத்து வந்தும், முளைப்பாரியுடன் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.








Wednesday, September 11, 2013

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்





Today's Dina Thanthi


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இம்மானுவேல் சேகரன் 56- வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள்  மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சுந்தர்ராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக இம்மானுவேல் சேகரனின் சொந்த ஊரான பரமக்குடி செல்லூரில் உள்ள மக்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.








தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


தியாகி இமானுவேல் சேகரனின் 56–வது நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினை விடத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சதன் பிரபாகரன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சுப.தங்க வேலன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், பரமக்குடி நகர செயலாளர் சேதுகருணாநிதி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் இமானுவேல் சேகரன் பிறந்த பரமக்குடி செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் ஆகியோர் ஊர்வலமாக வந்து இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 7 உதவி சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

65 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகனங்கள் சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல் பரமக்குடி, மானாமதுரை, உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும், மதுரை ரெயில்வே சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கோட்ட பாதுகாப்பு ஆணையாளர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே கேட்டுகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் டவுனில் அரியலூர் எஸ்.பி. ஜியாவுல் ஹக், கடலூர் ஏ.டி.எஸ்.பி., அரியலூர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 3 பட்டாலியனை சேர்ந்த கம்பெனி போலீசார் 650 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விரோத செயல்களை தடுப்பதற்காக ஆளில்லா உளவு விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விமானத்துக்குள் அதிநவீன கம்ப்யூட்டர்கள் உள்ளதால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடை பெறும் நிகழ்வுகளை இது பதிவு செய்யும். இதன் மூலம் சோதனை சாவடிகள், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களின் வழித்தடங்கள், பிரச்சினைக்குரிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


Today's Dinamalar

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinamalar

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இமானுவேல்சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11–ந்தேதி) இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே வாகன அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.

இமானுவேல்சேகரன் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு வாகனமும் வாகன எண், உரிமையாளர் மற்றும் முகவரி ஆகியவை தணிக்கை செய்யப்படும்.

தவறான வாகன எண் அல்லது வாடகை வாகனத்தை சொந்த வாகனமாக பயன்படுத்துதல் மற்றும் முறையாக அனுமதி பெறப்படாத வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது சோதனை சாவடியிலேயே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஏற்பாடானது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்வதற்காக வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வாகனத்துடன் 3 வாகனங்கள் மட்டுமே உடன் வர அனுமதிக்கப்படும். மேலும் ஏதேனும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சம்பந்தப்பட்டவர்களிடமே சேத தொகையினை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

இமானுவேல்சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றில் வந்து கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் வருபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடியில் மட்டும் 9 இடங்களில் காமிரா அமைக்கப்பட்டுள்ளது. மணிநகர், பொன்னையாபுரம், சந்தைபேட்டை, வைகை நகர் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும். அதன் பின்னர் அவர்கள் நடந்து சென்று நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட் போன்ற இடங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ரெயில்வே டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கண்ணன், 6 இன்ஸ்பெக்டர்கள், 27 சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தாக்கா உத்தரவின் பேரில் மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையர் செல்வராஜ், 3 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்–இன்ஸ்பெக்டர்கள், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பரமக்குடி, கமுதக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயிலிலும் 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமநாதபுரம்–தூத்துக்குடி இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னிராஜபுரம், சேவல்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக 2 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது. (டி.என்.எஸ்)

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இன்று (9-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.

இதேபோல் நினைவு ஜோதி எடுத்து வரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகளை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்காணிக்கும் வகையில் போலீஸாரால் நவீன கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம் இயக்கப்படவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாமல் நவீன கேமரா பொருத்தப்பட்ட, 300 மீட்டர் உயரத்தில், 5 கி.மீ. சுற்றளவில் பறந்து சென்று வரக் கூடிய உளவு விமானம் போலீஸாரால் வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 6 பேர் கொண்ட குழுவினர் செப்டம்பர் 11-ம் தேதி காலை முதல் தொடர்ந்து அந்த உளவு விமானம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனுக்குடன் தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த உளவு விமானம் உதவியாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.











DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget