தி.மு.க. ஆட்சியில் 1967-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை மின்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பி.ராமன். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வில் இணைந்தார். பின்னர் அரசியலை விட்டு முழுவதுமாக ஒதுங்கி இருந்த ஓ.பி.ராமன் திண்டுக்கல் அருகே சில்வார்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
ஓ.பி.ராமன் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் பிறந்த ஓ.பி. ராமன். பி.ஏ.பி.எல் படித்தவர். 1960-ம் ஆண்டு திண்டுக்கல், வேடசந்தூர் கோர்ட்டுகளில் வக்கீலாக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட அரசியல் ஈடுபாட்டின் காரணமாக தி.மு.க.வில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார். இவரது கட்சி பணியை பாராட்டி 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் கக்கனை தோற்கடித்து ஓ.பி.ராமன் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தி.மு.க. ஆட்சியில் 1967 முதல் 1976-ம் ஆண்டு வரை மின்சாரம், வனத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மகள் உள்ளார்.
No comments:
Post a Comment