Tuesday, October 2, 2012

மள்ளர் மலர்


கோவையிலிருந்து குருசாமிச் சித்தர் அவர்களால் வெளியிடப்பட்டு வருகிற திங்களிதழ். மள்ளர்களின் ஆற்றலை எடுத்துரைப்பதோடு, தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதையும் செய்து வருகிற இதழ். இந்த இதழில் தமிழர்களை உடைக்க முற்படும் கரவேலன்கள் யார் என்று கண்டு கொள்ளக் கருத்தோவியம் படைத்துள்ளது. மேலும் கடந்த கடந்த தமிழ்ச் செல்வங்கள் என்று தமிழின் பெருமையைக் காட்டும் கட்டுரையை வெளியிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி என்பதையும் நுட்பமாகக் காட்டுகிறது. இலக்கியக் காட்சிகள் வழியிலும். தொல்லியல் சான்றுகளின் வழியிலும் மள்ளர் வரலாற்று ஆவணமாக இந்த இதழ் தொடர்ந்து இயங்கி வருகிறது. 




இதழ் மள்ளர் இன மக்களின், கொடை, வீரம், திறன் பற்றிய பல்வேறு செய்திகளை - இலக்கியத்திலிருந்தும், நடக்கிற நிகழ்வுக் குறிப்புகளிலிருந்தும் திரட்டி, வரிசைப்படுத்தி வெளியிடுவது. மள்ளர் இன மக்களுக்கான விழிப்புணர்வூட்டுவது. இதழிலுள்ள செங்கோட்டுப் பள்ளு என்கிற இலக்கியத் தொடர் உயர்தரத்தது. இந்த இதழில் நீராவிப்பட்டி தேவேந்திரர் வரலாறு காட்டப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது 






தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தலைப்பிலிட்டு 11 ஆவது ஆண்டாக தேவேந்திரர்குல வேளாளர் மக்களை இணைத்து, அவர்களது சாதனைகள், சிறப்புகள் பற்றி வெளியிடுவது. இலக்கியத்திலும், சங்கப்பாடல்களிலும் மள்ளர் மக்களின் நிலையை ஆய்வுசெய்து எடுத்துக்காட்டி, பெருமையை, உழைப்பை நிலைநிறுத்துகிற இதழ். இந்த திங்களில் தமிழர்களின்(தேவேந்திரர், வன்னியர், பறையர்) வரலாற்றை மறைக்கும், திரிக்கும் தொல்லியல் துறையைச் சுட்டிக் குட்டியுள்ளது.











1 comment:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget