உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது
கடன் கொடுக்காமல் மோசடி செய்திருக்கும் முதலாளிகள் சொந்த வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
• கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
• வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
• எலக்ட்ரோதெர்ம் இந்தியா - ரூ 2,211 கோடி
• ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
• ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
• எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
• சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
• இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
• ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
• ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
• வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி
இந்திய வங்கிகள் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்த 406 வாராக் கடன் கணக்குகளின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.
24 வங்கிகளில் உள்ள இந்த 406 வாராக் கடன் கணக்குகளின் மதிப்பு ரூ 70,300 கோடி. இந்த கணக்குகளோடு வெளியிடப்படாத பிற வாராக்கடன் கணக்குகளையும் சேர்த்தால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு செப்டம்பர் 2013-ல் ரூ 2.36 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மார்ச் 2008-ல் ரூ 39,030 கோடியாக இருந்தது.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 4.95 லட்சம் கோடி. 5 ஆண்டுகளில் வாராக் கடன்களின் மதிப்பு 1.97 லட்சம் கோடி மட்டுமே அதிகரித்தது என்றால் மீதி என்ன ஆனது? ஒன்று, வசூலிக்க முடியவில்லை என்று வங்கிகள் கை விட்டு விடுகின்றன அல்லது கடனாளிகளுக்கு புதிய கடன்களை கொடுத்து பழைய கடனை சரி செய்து கொள்கின்றன, வாராக் கடனாக இருந்தது இப்போது புது கடனாக மாறி விடுகிறது.
இவ்வாறு 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் வசூலிக்க முடியாததாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ 2.04 லட்சம் கோடி. புதுக் கடன் கொடுத்து திருப்பி வரக் கூடிய கடன்களாக மாற்றப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 3.25 லட்சம் கோடி.
No comments:
Post a Comment