Friday, October 25, 2013

டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தாது மணல் ஆலைகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர்களை சேர்க்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் கடந்த 6 மாதங்களாக முடங்கி காணப்படுகிறது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்.புதியதாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் தாது மணல் ஆலை முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் உண்மை நிலவரங்களை தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகள் குழுவுக்கு பதிலாக எம்.எல்.ஏக்கள் குழுவை சம்பவ இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒருமித்த கருத்துக்களை கொண்ட எம்.எல்.ஏக்கள் குழுவினருடன் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளேன். 

சட்டசபையில் பேச அனுமதி வழங்கினால் இப்பிரச்னை குறித்து பேசுவேன். இப்பிரச்னைக்காக மட்டும் கலெக்டரை மாற்றியுள்ளனர் என்று கூற முடியாது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். அரசு இப்பிரச்னையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நேரடியாக இதில் தலையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சேர்ப்பு, உயர் கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு, மது பிரச்னையால் பாதிப்பு குறித்து சமுதாய மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பதில்லை. 

ஏற்காடு இடைத்ததேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது இதுவரை முடிவு ஏதும் செய்யவில்லை. பார்லிமென்ட் தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாததால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் அரவிந் த ராஜா, செல்லப்பா, நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.


2 comments:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget