Friday, October 25, 2013

டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆய்வு


தாது மணல் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 நாள் அவகாசம் அளித்திருப்பது போதுமானதாக இல்லை. குக்கிராமங்களிலும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையின் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நாட்டின் கனிமவளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

தாது மணல் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு விசாரணையில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ எதிராகப் போராட புதிய தமிழகம் கட்சி தயங்காது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை நியமித்து அரசு விசாரணை நடத்துவது மட்டுமல்லாது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தாது மணல் குவாரிகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியைப் போன்ற ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து கடலோரக் கிராமங்களில் ஆய்வு செய்யவுள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தேர்தல் ஆதரவு: முடிவு அறிவிக்க தாமதம் ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக கிருஷ்ணசாமி கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் கூடுவதாக அறிவித்த கூட்டமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியது:

தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல புதிய தமிழகம். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்களைத் திரட்டி மாநாடு நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட சக்தியும் இல்லை. மக்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி பணியாற்றுகிறோம். ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அறிவிக்காமல் உள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.



டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தாது மணல் ஆலைகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர்களை சேர்க்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் கடந்த 6 மாதங்களாக முடங்கி காணப்படுகிறது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்.புதியதாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் தாது மணல் ஆலை முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் உண்மை நிலவரங்களை தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகள் குழுவுக்கு பதிலாக எம்.எல்.ஏக்கள் குழுவை சம்பவ இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒருமித்த கருத்துக்களை கொண்ட எம்.எல்.ஏக்கள் குழுவினருடன் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளேன். 

சட்டசபையில் பேச அனுமதி வழங்கினால் இப்பிரச்னை குறித்து பேசுவேன். இப்பிரச்னைக்காக மட்டும் கலெக்டரை மாற்றியுள்ளனர் என்று கூற முடியாது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். அரசு இப்பிரச்னையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நேரடியாக இதில் தலையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சேர்ப்பு, உயர் கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு, மது பிரச்னையால் பாதிப்பு குறித்து சமுதாய மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பதில்லை. 

ஏற்காடு இடைத்ததேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது இதுவரை முடிவு ஏதும் செய்யவில்லை. பார்லிமென்ட் தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாததால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் அரவிந் த ராஜா, செல்லப்பா, நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.


டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு


வெங்காய விலை பற்றி பேச அனுமதி மறுப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு


சட்டசபையில் வெள்ளிக்கிழமை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வெங்காய விலை உயர்வு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது குறித்து பேச சபையில் அனுமதி கேட்டேன். அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.




Tuesday, October 22, 2013

இம்மானுவேல் தேவெந்திரர்



கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம்

கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு

நாள்: 22-09-2013 ஞயிற்றுக்கிழமை


கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு கடந்த 22-09-2013 அன்று கோவில்கடவில் நடந்தது. இதில் நமது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததின் பேரில் கலந்துகொண்டோம். தலைவர் தமிழினவேந்தர் மாநட்டில் சிறப்புரையாற்றினார்.





கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் , கோவில் கடவு, காந்தலுர்,பெரடிபள்ளம், சுரக்குளம், மிசன் வயல், சாணல்மேடு,திண்டுகொம்பு, மூணார் என பல்வேறு மலை கிராமங்களில் பெரும்பாண்மையாக நமது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழ்கின்றனர். இதில் மூணார் தவிர மற்ற கிராம மக்கள் தேயிலை தோட்ட தோழிலாளர்கள் அல்ல.பெரும்பாண்மையாக விவசாயம் செய்து வருகின்றனர். தொழில் செய்து வருகின்றனர். நில உடைமையாளர்களாக உள்ளனர். அனைவரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொழிவாரி கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பாகவே குடியேறிய மக்கள். தற்போது இடுக்கி , தேவிகுளம், பீர்மேடு பொன்ற பகுதியில் வாழும் இம்மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச்சான்றிதழ் பெரும் பிரச்சனை. முல்லைப்பெரியாறு பிரச்சனைக்குப்பிறகு பெருமளவில் நம்மக்களை பாகுகுபடுத்திபார்க்கும் நிலை உள்ளது. இதற்காக விரைவில் திருவனந்தபுரத்தில் ஒரு பேரணி நடத்தி போராட வேண்டும் என்று அப்போராட்டத்தை அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநாட்டில் சிகப்பு பச்சை கொடியுடன் உணர்வோடு கலந்துகொண்ட நமது பெண்களின் எழுச்சிமிகு உணர்வு நம்மை வியக்கவைத்தது. தலைவருக்கு மக்கள்கொடுத்த வரவேற்பு பிரமிக்கவைத்தது. மறையூர்,காந்தலூரில், கோவில்கடவில் தலைவர் சமுதாயக் கொடிஏற்றி வைத்தர்.தலைவரின் வருகை அறிந்து சந்திக்க வந்த பெண்கள் கூட்டம் நம்மை பிரமிக்கவைத்தது. குடும்பம் குடும்பமாக மாநட்டில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாது தலைருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சி மிக்கது.தலைவருடன்தோழர் கண்மணிமாவீரன், துரைப்பாண்டியன்,குபெந்திரபாண்டியன்,கிங்தேவேந்திரன்,தேவப்பிரியன்,மதுரை ஆம்புலன்ஸ் முனியாண்டி உள்ளிட்ட பலர் உடன்சென்றிருந்தனர்.





தேவேந்திரகுல வேளாளர்









DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget