முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஊராட்சி அ.தி.மு.க. த லைவரைக் கணடித்து, கிராமத்தினர் இன்று(திங்கள்கிழமை)உண்ணாவிரதம் இருந்த னர். இதனால் பதற்றம் நிலவியதையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ம், பேரையூர் ஊராட்சி தலைவராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான் மனைவி, சவுந்தர வள்ளி என்பவர் தற்போது இரு்நது வருகிறார். ஆனால் ஓராண்டிற்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயம், சவுந்தர வள்ளி ளியைத் தோற்கடித்து, மேட்டுப்பட்டி வேல் முருகன்(தி.மு.க) என்பவர், பேரையூர் ஊராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்க்ப்பட்டார் என்பது குறிப்பிடத்ததக்கது ஆகும்.
ஆனால் கடந்த தடவை ஊராட்சி தலைவராகவும், தற்போது மாவட்ட ஊராட்சிகள் கவுன்சிலராகவும் உள்ள நிறைகுளத்தான் மகன் சதன் பிரபாகர் என்பவர், தனது நிர்வாகம் சமயம், போடப்படிருந்த ஒப்பந்த பணி ஒன்றில் தற்போதைய ஊராட்சி தலைவர் வேல் முருகன் முறைகேடு செய்துள்ளார் என்று ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை முடிவில் வேல் முருகன் வெற்றி பெற்றது செல்லாது என்றும், தேர்தலில் இவரிடம் தோற்ற்ப்போன சவுந்தவள்ளியை பேரையூர் ஊராட்சி தலைவ ராக பதவி ஏற்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டு. பரபரப்பு தீர்ப்பு கூறினார. இந்த தீர்ப பை எதிர்த்து, மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் வேல்முருகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த நிலையில் பேரையூர் ஊராட்சி நிர்வாக சீர்கேடுகள், கிராமங்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் புறக்கணிப்பு, ஊராட்சி தலைவராக சவுந்தர வள்ளி நீடிப்பது போன்றவற்றை கண்டிப்பதாகவும், ப்லவேறு கோரிக்கைகளை வலியுறுததியும் காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரதத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் துரைராஜ்(முன்னாள் தலைமை ஆசிரியர்) தேவேந்திர குள சமூக பிரமுகர்கள் மகாலிங்கம், சக்தி வேல், வழக்குரைஞர் ரவி(எ)சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ரூபி கேசவன் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் முத்து லட்சுமி ராஜகுமார்(வார்டு-1), ராணி பாஸ்கரன்(வார் டு -2), சுரேஷ்(வார்டு-3), பேச்சி ராஜன்(வார்டு-8), ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், தே.மு.தி.க. கிளை தலைவர் முருகேசன், தேவேந்திர குல வேளாளர் மற்றும் மகளிர் மன்றத்தினர் 100 பேர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தால் கமுதி, முதுகுளத்தூர், பேரையூர் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவில், முதுகுளத்தூர் ஏ.எஸ்.பி. விக்ரமன், காவல் ஆய்வாளர்கள் ஜேசு, குமரன், கண்ணதாசன், பிச்சையா, சார்பு ஆய்வாளர்கள் சபரிதாசன், தனகுமார், திலகவதி, கீதா, முத்துசசாமி, தங்க ராஜ், செந்தில்குமார் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment