Thursday, June 28, 2012

சிந்தியுங்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்களே



See the following picture. 

 Nadar women in past


This is how Nadars were treated in past. The Nadar women were not allowed to wear blouse in front of other higher caste people. It means they were not allowed to cover their breast in public. See how cruel the upper caste people in olden days. This situation is much worse than compared to other low caste people. But today see how things changed. Now nobody will say a word or treat bad the Nadars. Because they are now very strong in economy. As of now the most wealthy caste in Tamil Nadu is Nadar Caste. They have improved them from past situations. Now even the present day Nadars will never know the past and they don't want the past. Nobody will say they were low caste in past.

திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் பனையேரி நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்.

அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது.
செருப்புப் போடக் கூடாது.
தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது.
மாடி வைத்து வீடு கட்டக் கூடாது.
பசுக்களை வளர்க்கலாம். ஆனால்…, அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை.
பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது.
ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக,
அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.

நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.

அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன.

இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பனையேரி நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். ஆனால் நாடான் என்ற பட்டங்களுக்குரிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லை. ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தது.

பனையேரி நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய போது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது.

தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேரி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான

உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள்.

நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போரட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.

இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) “பனையேரி நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.

ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, பனையேரி நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் பனையேரி நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. இப்படி பனையேரி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்தார்கள்.

Extract from a Nadar Community Forum



But see us, we are simply wasting time in speaking about past and wasting our precious time. See what we are in present. We should fight / Struggle hard to improve us. SO please stop takling about past, work for present and future. To improve our caste economy it will take years of struggle. We have no time, every caste improving very fast. We should do so much hardwork to improve our economy.

Let us all unite and improve. The first step for improvement is UNITY. And in my onion we should come out of this SC tag.

Take example of Nadars even though they were not much improved in economy and status compared to today before 40 years, they belived their unity and hardwork and they became BC. Today see nobody will say they were low caste and their ladies were not allowed to wear blouse in past.

So it is right time to shed our SC tag, bring us to MBC or BC. See in next two decades nobody will know we were low caste and even our children will not know we were low caste.

Just believe in Unity and Hardwork. We will urely rise high.


The below are list of Institutions, organisations, business by Nadar community. See how they improved them.
    Tamilnad Merchantile Bank
    South India Shipping Corporation
    Hindustan Computers Limited
    N I I T
    The Daily Thandhi Newspaper
    The Dinakaran Newspaper
    V G P Group of Companies
    M G M Group of Companies
    The Standard Fireworks, Sivakasi, Tamil Nadu, India
    The Kaleeswari Fireworks, Sivakasi, Tamil Nadu, India
    Ayyan Fireworks (formerly National Fireworks), Sivakasi, Tamil Nadu, India
    Arasan Group of Industries, Sivakasi, Tamil Nadu, India
    Sivakasi Institute of Printing Technology, Sivakasi, Tamil Nadu, India
    Hotel Saravana Bhavan, Madras, Tamil Nadu, India
    Idayam Gingely Oil
    V V D Group of Companies
    A D Jawahar Hospitals, Madurai, Tamil Nadu, India
    A V M Jewellers, Tuticorin, Tamil Nadu, India
    Ram Softs India P Ltd, Sivakasi, Tamil Nadu, India
    Srinath Fine Arts, Sivakasi, Tamil Nadu, India
    MY SHOPPE Self Service Supermarket, Sivakasi, Tamil Nadu, India
    Srinath Travles, Sivakasi, Tamil Nadu, India
    Sankareswari Process, Sivakasi, Tamil Nadu, India
    Shanti Stores (Grocery Shop), Sivakasi, Tamil Nadu, India
    Ashok Calendars, Sivakasi, Tami Nadu, India
    Coronation Fire works, Sivakasi, Tamil Nadu, India
    Srinivas Fine Arts, Sivakasi, Tamil Nadu, India
    Safire Printographs, Sivakasi, Tamil Nadu, India
    K.C. Sankaralinga Nadar Higher Secondary School, Madras, Tamil Nadu, India
    Sri Sivasubraminya Nadar College of Engineering, Madras, Tamil Nadu, India
    MSP Solai Nadar Memorial Higher Secondary School, Dindigul, Tamil Nadu, India
    M.N.U. Jayaraj Nadar Higher Secondary School, Madurai, Tamil Nadu, India
    Nadar Higher Secondary School, South Gate, Madurai, Tamil Nadu, India
    Sivakasi Nadars Mat.Hr.Sec School, Madurai, Tamil Nadu, India
    Virdhunagar Hindu Nadar Higher Secondary School, Madurai, Tamil Nadu, India
    Virudhunagar Manickam Nadar Janaki Ammal High School, Madurai, Tamil Nadu, India
    Karapettai Nadar Boys Higher Secondary School, Tuticorin, Tamil Nadu, India
    Karapettai Nadar Girls Higher Secondary School, Tuticorin, Tamil Nadu, India
    Virudhunagar Nadar Kamarajar Matriculation High School, Tuticorin, Tamil Nadu, India
    Kamaraj College, Tuticorin, Tamil Nadu, India
    A.M.M. Sinnamani Nadar Middle School, Tuticorin, Tamil Nadu, India
    A.M.M. Sinnamani Nadar High School, Tuticorin, Tamil Nadu, India
    Nadar Middle School, Kovilpatti, Tamil Nadu, India
    Nadar Higher Secondary School, Kovilpatti, Tamil Nadu, India
    Kamaraj Matriculation Higher Secondary School, Kovilpatti, Tamil Nadu, India
    South Street Hindu Nadar Higher Secondary School, Muhavoor, Tamil Nadu, India
    Nadar Higher Secondary School, Rajapalayam, Tamil Nadu, India
    A.V.M.Marimuthu Nadar Higher Secondary School, Vilampatti, Sivakasi, Tamil Nadu, India
    Ayya Nadar Janaki Ammal Collage (Autonomous), Sivakasi, Tamil Nadu, India
    Ayya Nadar Janaki Ammal Womens Polytechnic, Sivakasi, Tamil Nadu, India
    MEPCO Schlenk Engineering College, Sivakasi, Tamil Nadu, India
    MEPCO Schlenk Dental College, Sivakasi, Tamil Nadu, India
    Sivakasi Hindu Nadar Victoria Higher Secondary School, Sivakasi, Tamil Nadu, India
    Sivakasi Hindu Nadar Victoria Matriculation School, Sivakasi, Tamil Nadu, India
    Sivakasi Hindu Nadar Girls higher Secondary School, Sivakasi, Tamil Nadu, India
    Arasan Ganesan Polytechnic, Sivakasi, Tamil Nadu, India
    Standard Fireworks Rajarathinam College for Women, Sivakasi, Tamil Nadu, India
    K.S.S. Periakaruppa Nadar, K.S.S. Palaniappa Nadar Sivakasi Jaycees Junior School, Sivakasi, Tamil Nadu, India
    K.P.A.T. Dharmaraj Nadar, Rojapputhayammal Sivakasi Jaycees Matriculation School, Sivakasi, Tamil Nadu, India
    Thangamani Theatre, Sivakasi, Tamil Nadu, India
    Palani Andavar Theatre, Sivakasi, Tamil Nadu, India
    Nadar Saraswathi Girls Higher Secondary School, Theni, Tamil Nadu, India
    Nadar Saraswathi Higher Secondary Schools, Theni, Tamil Nadu, India
    Theni Nadar School, Theni, Tamil Nadu, India
    V.H.N.S.N. College, Virudhunagar, Tamil Nadu, India
    Kamaraj Engineering College, Virudhunagar, Tamil Nadu, India
    V. V. V. College, Virudhunagar, Tamil Nadu, India
    Vellaichamy Nadar Polytechnic, Virudhunagar, Tamil Nadu, India
    .
    K.V.S. Higher Secondary School, Virudhunagar, Tamil Nadu, India
    K.V.S. Sulakkarai, Virudhunagar, Tamil Nadu, India
    Kshatriya Vidya Sala Matriculation Higher Secondary School, Virudhunagar, Tamil Nadu, India
    K.V.K. Sathriya Vidhyasala for Girls, Virudhunagar, Tamil Nadu, India
    K.V.K. Sathriya Vidhyasala for Boys, Virudhunagar, Tamil Nadu, India
    P.S.Chidambara Nadar Senior English School, Virudhunagar, Tamil Nadu, India
    S. H. N. Edward Higher Secondary School, Sattur, Tamil Nadu, India
    PKN (Pandiyakula Kshatriya Nadar)Boys Higher Secondary Schoool, Thirumangalam (Madurai District), Tamil Nadu, India
    PKN Girls Higher Secondary School, Thirumangalam (Madurai District), Tamil Nadu, India
    PKN Matriculation School, Thirumangalam (Madurai District), Tamil Nadu, India
    PKN Arts and Science College, Thirumangalam (Madurai District), Tamil Nadu, India
    TPKN School Pasumalai, Madurai, Tamil Nadu, India
    S. Vellaichaami Nadar College, Nagamalaipudukkotai, Madurai, Tamil Nadu, India
    Jeyaraj Annapackiam College of Nursing, Madurai, Tamil Nadu, India
    Indian Foods Pvt Limited, Madurai, Tamil Nadu, India
    Nadar Mahajan Sangam Kamaraja Polytecic, Pazhavilai, Nagercoil, Tamil Nadu, India
    Nadar Higher Secondary School, Bodianyakanur, Tamil Nadu, India
    Scism Matriculation Higher Secondary School, Bodianyakanur, Tamil Nadu, India
    Sri Duraiappa Matriculation School, Bodianyakanur, Tamil Nadu, India
    Jothi Matriculation School, Bodianyakanur, Tamil Nadu, India
    Nadar Parasakthi Milk Society, Bodianyakanur, Tamil Nadu, India
    Pathrakaliamman Milk Society, Bodianyakanur, Tamil Nadu, India
    Duraiappa Chemicals, Bodianyakanur, Tamil Nadu, India
    Bodi Christian Nadar Uravinmurai, Bodianyakanur, Tamil Nadu, India
    Cambridge Matric School, Sangili Nadar, Udumalpet, Tamil Nadu, India
    Nadar Middle School, (PuliYuran), Aruppukottai, Tamil Nadu, India
    Nadar Matriculation School, Kilakarai, Tamil Nadu, India
    WBA Soundarapandi Nadar HS School, Ayanavaram, Tamil Nadu, India
    MK. V. Kandasamy Nadar Matric School, Tenkasi, Tamil Nadu, India
    T.N.P.M. Nadar Higher Secondary School, Thalavai Puram, Tamil Nadu, India
    Nadar Higher Secondary School, Porayar, Tamil Nadu, India
    Kamuthi Nadar School, Kamuthi, Tamil Nadu, India
    TVA.Nallalagu Nadar Higher Secondary School, Perilovanpatti, a village in Vilathikulam Taluk, Tamil Nadu, India
    Thiruthangal Nadar College, Washermenpet, Madras, Tamil Nadu, India
    Virudhunagar Nadar Mansion, (BOARDING & LODGING), Chennai, Tamil Nadu, India
    M/s.R.S.V.Nadar & Co,Tuticorin, Tamil Nadu, India
    Tirunelveli Dakshinamara Nadar Sangam College, T. Kallikulam 627113, Tamil Nadu, India
    Nadar Mahajana Sangam Sermathai Vasan College for Women,Samanatham, Madurai - 625 009, Tamil Nadu, India
    Thiruthangal Nadar College for Women, Selavayal, Tondiarpet Taluk, Chennai, Tamil Nadu, India
    S.S. Duraisamy Nadar Mariammal College, Kovilpatti - 628 501, Tamil Nadu, India
    Nadar Saraswathi College of Arts and Science, Vadupudupatti, Theni - 625 531, Tamil Nadu, India
    Kamaraj Polytechnic, Pazhavilai & Post Kanyakumari Dist, Tamil Nadu, India
    INDIAN Food Park, Virudhunagar, Tamil Nadu, India. Promoters. V.P.S. Ayyamperumal Nadar & Sons
    Nadar Mahajana Sangam Sermathai Vasan College for Women Samanatham, Avaniapuram Byepass, Madurai - 625 009, Tamil Nadu, India
    Madurai Sivakasi Nadar Pioneer Meenakshi College of women, Poovanthi-630611, Madurai, Tamil Nadu, India
    Anna Ngr. K.K.Ngr. Nadar Uravinmurai Matriculation School,-65, Annanagar, Madurai-20, Tamil Nadu, India
    Ayyanadar Jeyalakshmi Ammal English Medium School,-119/1, Kamarajar salai, -Teppakulam,-Madurai-9, Tamil Nadu, India
    Nadar Uravinmurai Thirugnanam Middle School,-East Sandaipettai, Madurai, Tamil Nadu, India
    Nadar High School, South Gate, Madurai, Tamil Nadu, India
    Palayampatti Nadars Uravinmurai Higher Sec. School,-VII HB Colony,- M.Anuppanady,-Madurai, Tamil Nadu, India
    Pallayappa Nadar Uravinmurai APT Durairaj Higher Secondary School- No.42, Chinthamani road,--Madurai-1, Tamil Nadu, India
    Sivakasi Nadar Matriculation Higher Secondary School,-26, STC Road, -Ellis Nagar,- Madurai-10, Tamil Nadu, India
    Virudhunagar Hindu Nadar Higher Secondary School,-19, Attumanthai Pottal 7th street,-Munisalai-Madurai-9, Tamil Nadu, India
    Virudunagar Hindu Nadar Hr. Sec. School,-Old Kuvarpalayam Road,-- Madurai-9, Tamil Nadu, India
    Nadar Sarawathy Hr. Sec. School,-Usilampatti, Tamil Nadu, India
    Kamarajar Matriculation School.-Nadar New street,--Sholavandan, Tamil Nadu, India
    V.A.P. Nadars Accountancy College,-114 & 115, East masi street--Madurai, Tamil Nadu, India
    VAP Nadars College Of Commerce,-114 East Veli Street,--Madurai-1, Tamil Nadu, India
    Idhayam Rajendran Residential School, Nedungulam Main Road, Samanatham P.O., Madurai-625 009, Tamil Nadu, India



Let us unity and work hard to improve us.

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?


முதல் உணவு தாய்ப்பால் தான் :
குழந்தையின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்


எப்போது புட்டிப் பால் :
தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய? தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப்பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே, வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி. ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.

வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்க முடியாத துரதிஷ்டமான நிலை ஏற்படக் கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம் போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக் கிறது. இது போன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.
குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப் பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடை வில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.


திட உணவு
குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண் ணீரை அளிக்கலாம். 

ஐந்தாவது மாதம் :
ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை - சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.
குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடி யவை களும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள் களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது. பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குகக் கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.


ஆறாவது மாதம் :
ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தை யின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் கனவான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.
இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்ற வற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயராகும்.
சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த இறைச்சி, மீன், முட்டை, கோழிக் குஞ்சியின் இறைச்சி இவை களைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.

ஏழாவது மாதம் :
ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.
தோசை, பால் குறைவான மில்சேஷப்க் சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.


பத்தாவது மாதம் :
குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல்போலாக்கி காய்கறித்துண்டு களையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.

காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.

எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித உணவுகளைக் குழந்தைக்குக் காடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள்.அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணர்வினால் என்பதைத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடியும்.
முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.

உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப் படியான சொத்தைப் பல்லை உண்டாக்கும் பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.

உணவைத் திணிக்காதீர்கள் :
சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவு களையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேக மாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்பஉவது. குழந்தை திட உணவைப் புறக் கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப் பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறு படுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான ஊறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடு வதாலும் குழந்தை புறக்கணிக்கக் கூடும்.

குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயபடுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளைபுறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டிதன்மையும் பழக்கப்படத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கும் ஏற்ப கொடுங்கள். குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனா வான். புளிக்காத, ஃபிரிட்ஜில் வைக்காத தயில் சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீயா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.

நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறை யாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்க ளையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தை களுக்கு கொடுங்கள்.


சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லா பொருட்களையும் போட்டுக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடம் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும். இது குழந்தையை திறமையுள்ளவானகவும் மாற்றும். கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான பெரிய துண்டு ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவற்றை கொடுக்கலாம்.

அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக் கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகாரியமாப அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டம். அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டுகள் முதலியவைகள் ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங் கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங் கள் என்று சாப்பிடம் ஆசையைத் தூண்டி விடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரசச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தை களுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை, அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.

2 வயதுக்கு மேல்
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவைவிட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை விட சுட்ட வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.


கடைகளில் வாங்கும் உணவுகள், பாஸ்ட் புட் களை கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்கதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.

பள்ளி செல்லும் போது
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது, என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து டிபன்பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை பிரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவில் நீங்கள் குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய சத்துணவின்றி குழந்தைகள் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்


சரித்திரம்: வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது.




சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சாப்பிட்டு வந்தனர். சீன மொழியில் ஷான்-கூ-குவா என்று பெயர். முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர். கி.பி 1400-ல் சீனர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளனர். முதலில் முட்டை அளவு இருந்தது. 200 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் 6 லிருந்து 8 இஞ்ச் நீளமுள்ள பாகற்காயை சாகுபடி செய்தனர். இப்போதெல்லாம் ஒரு அடி நீளத்திலும் வளர்கிறது.

வகைகள்: பாகற்காய் பழ வகையைச் சார்ந்தது. வெள்ளரி குடும்பம். பிட்டர் கார்ட், பிட்டர் மெலன், பால்சம் பியர், பால்சம் ஆப்பிள் என்று பல வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் பாகற்காயை பிட்டர் கார்ட் (Bitter Gourd) என்கிறோம். பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.

இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.


 
எப்படி வாங்குவது?: பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

பாதுகாப்பது: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.

 
சமைப்பது: பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.
100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.


 
மருத்துவ குணங்கள்:

இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
 
இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
 
பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக்  கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
 
இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.
  • பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
  • பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
  • பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
  • பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
  • ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
  • இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
  • பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.
  • பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
  • பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
  • நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
  • பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.
  • மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
  • இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
  • பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.
  • சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
  • பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
  • அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.
  • பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
  • உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.
 


மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.


சமையல்: இறால் பிட்டர் கார்ட் ஃப்ரை தேவை: பாகற்காய் 2, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த இறால், 2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2 ஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் சர்க்கரை, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: பாகற்காயில் விதைகளை நீக்கவும். காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு தடவி அரை மணி நேரம் விடவும். பின்பு தண்ணீர் விட்டு கழுவவும். காயின் கசப்பு நீங்கிவிடும். தண்ணீரை வடித்து விடவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம். பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் பாகற்காய், மிளகாய்த்தூள், சர்க்கரை, காய்ந்த இறால், மஞ்சள் தூள் போட்டு காய் மிருதுவாகும்வரை வதக்கவும். தேவைப்படி உப்பு போட்டுக் கொள்ளவும். இறாலுக்கு பதில் மீன் பயன்படுத்தியும் செய்யலாம்.



பாகற்காயை சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சச் சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும். பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  சாறு எடுத்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்


உலகம் முழுவதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண்பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் ரத்த பாயும் வேகத்தை குறிக்கும்.


இது இரண்டு வகையிலான அளவில் கணக் கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும்போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு.

139/89 என்பது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுத்துவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவிட்ட நிலையை குறிக் கிறது. வயது ஏற ஏற ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன. இந்த பாதிப்பு ஏற்படும்போது சிஸ் டாலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப் படும். 60 வயது தாண்டிய 70 சதவீதத்தினருக்கு இது போன்ற ரத்த அழுத்தம்.

வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை. சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள் மற்றும் உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், பிறப்பிலேயே ரத்த குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.



உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இவ் வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

ரத்த அழுத்தத்தைச் சீராக்க நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு இவ்வகையான மருந்துகளையும் சிறிதளவில் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்கும் போது ரத்த குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும்.

எனவே இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மிக ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.



Wednesday, June 27, 2012

We want a TV Channel



Every caste have their own TV Channel. We also want a TV channel. Atleast for this all our people and most importantly our LEADERS should unite. People close to our leaders take this matter to them. 

We can take help of Thiru. Uma Shankar IAS, since he has experience in ELCOT. 








Our leaders please unite and form a channel for us.








Sunday, June 24, 2012

விக்ரம் - ஷங்கர் இணையும் ‘ஐ’


ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட்டானது. இப்படத்தையடுத்து இவர்களின் கூட்டணி மீண்டும் இணைகிறது. இவர்கள் இணையும் புதுப்படத்திற்கு ‘ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஐ’ என்றால் அழகு, அரசன், குரு, ஆச்சர்யம், பலவீனம் என பல அர்த்தங்களை கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். 

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இரண்டாவது முறையாக சந்தானம் விக்ரமுடன் இணைகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும், நடிகர் பிரபுவின் அண்ணனுமான ராம்குமாரும் நடிக்கின்றனர். முதல்முறையாக சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாகிறார் ராம்குமார். 

இப்படத்தின் இசையமைப்பை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். இவரது இசையில் ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சவுண்ட் எபெக்ட்ஸை ஹாலிவுட்டில் ஹாரிபார்ட்டர் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலிய நிறுவனமான ரைசிங் சன் பிக்சர்ஸ் மேற்கொள்ளவுள்ளது. 

மிகப் பிரம்மாண்டமான செலவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இப்பொழுதிலிருந்தே ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. வரும் ஜூலை 15-ம் தேதி முதல் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.




====================================================================


Ace director Shankar wielding a megaphone to Chiyaan Vikram is all set to rolling cameras from 15th of this July cast Samantha in the female lead is titled as “I”. It is slated as a political thriller AR Rahman will be composing the music tunes and background scores for the film.

Ascar V Ravichandran will be producing I under his Aascar Films banner. Story of I revolves around the politics, especially on the loopholes of elections. Writer duo Suba will pen the dialogues, PC Sreeram will crank the camera, Muthuraj will handle the art direction,

Meanwhile, the star has recently wrapped up the talkie portions of his upcoming action entertainer Thaandavam with Anushka, Lakshmi Rai and Amy Jackson and is gearing up for the audio launch .




கருப்பாயி என்கிற நூர்ஜஹான்














திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது. 

இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது. 


பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார். 


பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்து பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9) 


பணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது.


பொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார். 


மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.


மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.


நாவலின் கதை


காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.


தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.


அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.


நாவலின் மையச் செய்தி


மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.



தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.


நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.


மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.


ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).


தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை 
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).


இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.


நூர்ஜஹானின் கடிதத்தில் உருக்கமாக இடம்பெறும் இந்த அவலம், மதம் மாறாத அவள் சித்தி பன்னீரின் கூற்றில் கோபமாக கொப்பளிக்கிறது. பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தார்களைப் பார்த்து ‘பெத்துவச்ச புள்ளய காலக் காலத்துல கெட்டிக் குடுக்கத் துப்பில்லாம ஒங்களுக்கெல்லாம் தாடி, தொப்பி ஒரு கேடா, வெக்கமாயில்ல’ (பக்கம் 19) என்று பன்னீர், தொடங்கிவைத்ததை, அல்லாபிச்சை மேலும் தொடர்கிறார். அவரது கோபத்தின் இலக்காக ஜமாத்தின் தலைவர் அமைகிறார்.


‘‘யோவ் தலைவரே... உமக்குப் பொட்டப்புள்ள இல்ல. அதான் பொட்டப்புள்ள பெத்த எங்க கவலை ஓமக்கு இல்லாமப் போயிருச்சு. தாடிய நீட்டி விட்டிக்கிட்டு ஊர் ஊராய்ப் போயி பள்ளிக்கு நிதி சேர்க்கிறோமுன்னுட்டு நல்லா வயிறு முட்ட தின்னுட்டு வரத்தெரியுது. சமஞ்சு நிற்கிற பொம்பளபுள்ள விஷயமா எந்த ஜமாத்துலயாவது பேசியிருக்கீராவே.. துப்புந்துவருங் கெட்டு இந்த பதவில நீர் இருக்கிறதுக்கு நாண்டுகிட்டு நின்னு சாவலாம் வே... ஒண்ணா ரெண்டா அம்பது பிள்ளைகளுக்கு மேலே சமஞ்சு உக்காந்து வருசம் இருபது ஆகுதுவே (பக்கம் 19).



நாவல் விடுக்கும் செய்தி


கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.


1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார். 


இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.


பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.


-ஆ.சிவசுப்பிரமணியன்


கருப்பாயி என்கிற நூர்ஜஹான் | அன்வர் பாலசிங்கம் பக்: 102 | ரூ.100 | கலங்கைப் பதிப்பகம். திருநெல்வேலி | 9445801247


http://udumalai.com/?prd=Karuppayi%20Enkira%20%20Noorjahan&page=products&id=10393 

















DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget