நெல்லை: வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் பசுபதி பாண்டியன் கொலையாளிகளை தீர்த்துக்கட்ட அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்ஒர்க் அமைத்துள்ளனர். இதில் 80க்கும் அதிகமானோர் இடம்பெற்றுள்ளதாக நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாளையங்கோட்டை காரியநாயனார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (36). காங்கிரஸ் பிரமுகரான இவர், கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23ம்தேதி பாளை முருகன்குறிச்சி பகுதியில் ஒரு கும்பலால் ஆனந்த் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் ஆனந்த் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் ஜனவரி 10ம்தேதி அனுசரிக்கப்படுகிறது. பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களை தீர்த்து கட்ட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ‘எழுச்சி இயக்கம்‘ என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் ரூ.25 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். இதற்காக பட்டியல் தயாரித்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்ஒர்க் அமைத்துள்ளனர்.
இந்த நெட்ஒர்க்கில் 80க்கும் அதிகமானோர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக எழுச்சி இயக்க தலைவர், செயலாளர் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறோம். தற்போது இவர்களில் 4 பேர் சிக்கியுள்ளனர். எழுச்சி இயக்க தலைவராக இருப்பவர் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே கொலை செய்யப்பட்ட கீழப்பாட்டத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரின் உறவினர். இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. மேலும் சென்னை பைனான்சியர் கொலையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மானூரைச் சேர்ந்த கூலிப்படை தலைவன், இவருக்கு சிறையில் இருந்து செல்போன் மூலம் சதி திட்டம் திட்டி ஆலோசனை வழங்கி உள்ளார்.
அதன்படி கடந்த 23-ம் தேதி காங். பிரமுகர் ஆனந்தை இக்கும்பல் கொலை செய்தது. சமீபத்தில் மேலபாலாமடையில் ரவுடி விஜியை கொன்றவர்களுக்கு உதவி செய்யும்படி பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமுதாய தலைவர் ஒருவர் கூறியதின் பேரில் ஆனந்த் மறைமுக உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நெட்ஒர்க் கும்பல் அவர்கள் இருவரையும் வரும் ஜனவரி 10-ம்தேதிக்குள் தீர்த்துக் கட்ட முடிவு செய்து ஆனந்தை கொலை செய்துள்ளனர். ஆனந்த் கொலையில் கோர்ட்டில் சரண் அடைந்த கம்மாளன்குளம் நயினார், ராஜவல்லிபுரம் ராகுல் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.
========================================================================
திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட் டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது மகள் கற்பகத்திற்கு வீட்டின் முன்பு ஒருபெட்டி கடை வைத்துகொடுத்திருந்தார். இதனை கற்பகத்தின் கணவர் பாண்டியராஜன் நடத்தி வந்தார். வியாபாரம் சரியில்லா மல் போனதால் கடந்த ஒரு மாத மாக பெட்டிக்கடை பூட்டிக்கிடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4.30மணிக்கு திடீர் என பெட்டிக்கடை வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு ஓடிவந்த கற்பகத்தின் கணவர் பாண்டியராஜன்(25). தனது கடைக்குள் யாரோ குண்டு வைத்துவிட்டதாக கத்தினார். தகவல் அறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையி லான போலீசார் பாண்டியராஜனையும் அவரது மாமனார் சண்முகத்தையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
பாண்டியராஜன் அளித்த வாக்குமூலத்தில், ‘’திண்டுக்கல் நந்தவனபட்டியில் இருந்த தேவேந்திர குலவேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியனை கடந்த ஜனவரி 10ந்,தேதி தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ்பண்ணையாரின் ஆட்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்தவர்களையும், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை பழிக்குப்பழி கொலை செய்யவும் தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சிலர் காத்திருந்தனர்.
கடந்த ஜூன் 4ந் தேதி தாடிக்கொம்பு காவல் நிலை யத்தில் கையெழுத்துபோட்டுவிட்டு காரில் சென்ற விருதுநகரை சேர்ந்த பாட்சா என்ற மாடசாமி, நட்டு என்ற நடராஜன், சன்னாசி ஆகியோரை தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்டசெயலாளர் உள்பட 4 பேர் டூவீலரில் சென்று நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் அந்த மூன்றுபேரும் லேசான தீக்காயத்துடன் தப்பித்துக்கொண்டனர். இதனால் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிக்க காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு எனது டூவீலரை விலைக்கு வாங்க வந்தபசுபதி பாண்டியன் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் கரட்டழகன்பட்டியை சேர்ந்த நடராஜன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் மூலமாக பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளர்களான நெல்லையை சேர்ந்த ஜெயகணேஷ், அதிசயபாண்டி, ரவி ஆகியோருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தான் கடந்த மாதம் 8 ஜெலட்டின்குச்சிகளையும், ஒரு டிபன்பாக்ஸ் வெடிகுண்டையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு என்னிடம் கொடுத்து வைத்தனர். வெடிகுண்டை பெட்டிகடையிலும், ஜெலெட்டின்குச்சியை வீட்டின் பரண்மேல் மறைத்து வைத்திருந்தேன். பசுபதிபாண்டியனை கொலை செய்த கொலையாளிகள் திண்டுக்கல் வரும்போது கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் பெட்டிகடைக்குள் வைத்திருந்த டிபன்பாக்ஸ் குண்டுமட்டும் வெடித்து விட்டது’’ என கூறியிருந்தார். இதனையடுத்து பாண்டியராஜனையும், கரட்டழகன்பட்டி நடராஜனையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நெல்லையை சேர்ந்த ஜெயகணேஷ், அதிசயபாண்டி, ரவி ஆகியோரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் நேற்று தனிப்படை அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment