Monday, July 30, 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தல் '‘காந்தி கணக்கு’'



32 அமைச்சர்கள் அரும் பணி புரிந்த புதுக்கோட்டை இடைத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட 70.81 லட்சம் ரூபாவில், ஒருவர் மட்டும் உரிய ஆவணங்களை அளித்து ரூ.3.45 லட்சத்தை மீட்டார். மீதி 67.36 லட்சம் ரூபா, எதற்காக புதுக்கோட்டை பக்கமாக நடமாடியது என்ற விளக்கத்தை யாரும் கொடுக்க தயாராக இல்லை.

புதுக்கோட்டை திருப்பணிக்காக களம் கண்ட 32 அமைச்சர்களில் எத்தனை பேர் தமது பெட்டியில் வெறும் வேட்டி-சட்டை எடுத்துச் சென்றார்கள், எத்தனை பேர் நோட்டுக் கட்டுகளை எடுத்துச் சென்றார்கள் என்ற புள்ளிவிபரம் ஏதும் கிடையாது.

அமைச்சர் பணமென்று எழுதியா இருக்கிறது?”

ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன், ஜெயிக்கிற தொகுதியில், ஜெயித்த கட்சியால் வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ1000 வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முதல் தினம் மற்றொரு ரூ1000 வழங்கப்பட்டது.

இந்திய ரூபா நோட்டு அச்சடிக்கும் இடம் புதுக்கோட்டையில் இல்லை, நாசிக் என்ற இடத்தில் உள்ளது. இதனால், நம்மவர்கள் கொடுத்த பணம் லோக்கலில் தயாரிக்கப்பட்டதல்ல. வெளியேயிருந்து புதுக்கோட்டை தொகுதிக்குள் வந்ததுதான். அதில், ரூ70.81 லட்சம், தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது. பணத்துடன் மொத்தம் 19 பேர் சிக்கினர்.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய கணக்கு காட்டப்பட்டால், திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், விழுப்புரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மட்டும் தன்னிடம் பறிமுதல் செய்த ரூ.3.45 லட்சத்துக்கான விவரத்துடன் வருமான வரித்துறையினரின் அனுமதி கடிதத்தை அளித்தார். தேர்தல் அதிகாரி முத்துமாரி, அவரிடம் ரூ.3.45 தொகையை ஒப்படைத்தார்.

மீதி 18 பேருக்கும், அதிகாரி முத்துமாரியைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
“67.36 லட்சம் ரூபா வீணாக போகிறதேஎன நமக்கு தெரிந்த அமைச்சர் ஒருவரிடம் அனுதாபம் தெரிவித்தபோது, கபகபவென சிரித்த அவர், “அட போய்யா..” என்று சொல்லிவிட்டு தமது விரல்களை எண்ணி கணக்கு பார்த்துவிட்டு சொன்னது:

“33 சத்துணவு பணியாளர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்தால் போச்சு



No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget