Friday, May 18, 2012

மாம்பழத்தின் மகிமை





சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்  இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை


மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.  மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது. மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது. விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.




விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்  விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்


குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன anti-oxidant எனப்படும் பொருட்கள்.  அனைத்து பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளில் இவை அதிகம் .


உணவை அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்தவோ வறுக்கவோ பொரிக்கவோ செய்யும்போது அதிலுள்ள anti-oxidant அழிந்து free radical உற்பத்தியாகின்றது. உடலின் பல நோயகளுக்கு (புற்றுநோய்,மாரடைப்பு ,இருதய வியாதி ,இரத்தக்குழாய் குறைபாடு ,நரம்பு மண்டலக் கோளாறு ) இந்த கலகக்காரணிகளே காரணம் (கலகக்காரணி என்றே சும்மா மொழிபெயர்த்துள்ளேன்)




மேலே சொன்ன நன்மைகள் மாம்பழத்தில் மட்டுமே கிடைக்கும் ; புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கைச்சாற்றில் அல்ல 





மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு  வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.




 முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.


இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா..

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்' என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது.


சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.


மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சம அளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!


நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!


பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருது-வாக்கும்.


மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்!


புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.


புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.


மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா? நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன், வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்' மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.


 






No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget