தேவேந்திர குல சமூகத்தவரால் முதன் முதலாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். “35 வருடங்களுக்கு முன் பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று சமூகத்தவரின் மத்தியில் விடுதலை விதையை விதைத்தவர்; எங்களுக்கெல்லாம் அண்ணன் ஜான் பாண்டியன் தான் ரோல் மாடல்...'' என்று தொல். திருமாவளவன் வெளிப்படையாக சொல்லும் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடி வருபவர்.
சாதி அடையாளத்தைத் தாண்டி அனைத்து சமூக மக்க ளையும் இணைத்து தமிழக மக் கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் ஜான் பாண்டியன், கடந்த 5ம் தேதி தனது கட்சியின் செயற்கு ழுவை சென்னையில் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலவரங்களுக்கு வித்திடுகின்ற சிலைகள் அமைக் கத் தேவையில்லை. அதற்காக சிறப்பு சட்டம் இயற்றவேண்டும்...'' என்ற ரீதியில் பேசியது நம் கவ னத்தை ஈர்த்தது.
தேவர் குரு பூஜை மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை யொட்டி சாதிக் கலவரம் வெடித்து தென் மாவட்டங்கள் பற்றியெறி யும் சூழல் தமிழகத்தில் நிலவி வரும் நிலையில் ஜான் பாண்டிய னின் செயற்குழு பேச்சு அவற் றுக்கு தீர்வு சொல்லும் ரீதியில் அமைந்ததால் அவரைத் தொடர்பு கொண்டு மக்கள் ரிப்போர்ட்டுக் காக பேட்டி கண்டோம்.
வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு புறப்பட் டுக் கொண்டிருந்த பிஸியிலும் நமது கேள்விகளை எதிர் கொள்ள சம்மதித்தார் ஜான் பாண்டியன்.
மக்கள் ரிப்போர்ட் : உங்கள் கட்சி யின் செயற்குழுவில் பரமக்குடி வன்முறைச் சம்பவங்களுக்கு தீர்வாக... (நாம் முடிக்கும் முன் கேள்வியை எதிர் கொண்ட ஜான் பாண்டியன்)
“தம்பி... அதை எப்படி சொன் னேன்னு கேட்டீங்கன்னா... தேவர் ஜெயந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாக்கள் ரெண்டையுமே அரசு மட்டும்தான் நடத்தனும். பொது மக்கள் அங்கே போகக் கூடாது. பொது மக்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலேயோ அந்தந்த கிராமங்களிலேயோ ரெண்டு தலைவர்களையும் மதிக்கிற வகையில நடத்த னும்.
ஒட்டுமொத்தமா ரெண்டு தரப்பும் ரெண்டு இடத்துக்கு திரண்டு போகக் கூடாது. அப்படி போறதாலத்தான் கலவரம் வருதுன்னு சொன்னேன். அப்போதுதான் இந் தப் பிரச்சினை சால்வ் ஆகும்னு சொன்னேன். அதனால தலைவர்களை மதிக்கிற வகையில இருக்கிற சிலைகள் போதும். இனிமேல் சிலைகள் வைக்க வேணாம்னு சொன்னேன்.
ம.ரி. : அதைத்தான் சிறப்புச் சட்டமாக கொண்டு வரனும்னு சொன்னீங்களா?
ஜான் பாண்டியன் : என்ன சிறப்புச் சட்டம் இயற்றனும்னு சொன்னேன்னா... இனிமேல் வர்ற காலங்கள்ல சிலை வைப்பதை தடுக்க வேண்டும். முழுமையாக தடுக்க வேண்டும். இருக்குற சிலைகளே போதும். இதற்கு அரசு ஒரு தீர்மானம் இயற்றி, இனிமேல் தமிழகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த சிலைகளும் வைக்கக் கூடாதுன்னு அறிவிக்க னும்.
ம.ரி. : இனிமேல் சிலைகள் வைக்கக் கூடாது என்பதற்கு என்ன காரணம்?
ஜான் பாண்டியன் : காரணம் என்னன்னா... இருக்கிற சிலைகளே நிறைய இருக்கு. வம்பு செய்வதற் காகவே ரோட்டில் போகிற எவனோ ஒருத்தன் கல்லைக் கொண்டு எறிஞ்சுட்டுப் போயிட றான். இதை வச்சி பிரச்சினை ஆகுது. இதனால நாலு கொலை கள் விழுது.
ம.ரி. : ஸார் ... இந்த காரணத் துனால சிலைகள் வேண்டாம் என்கிறீர்களா?
ஜான் பாண்டியன் : ஆமாம்! இனிமேல் சிலைகள் வைப்பதை தவிர்க்கனும்னு சொன்னேன். இருக்கிற சிலைகள் போதும்! இதுக்கே சண்டை போட்டுக் கொண்டிருக்காங்க.
ம.ரி. : கடந்த வருடம் தேவர் குரு பூஜையின்போது வன்முறை நிகழ்ந்தது. இந்த வருடமும் வன்முறை நிகழ்ந்திருக்கிறது. இந்த வன்முறைகள் ஏன் ஏற்படுகின்றன?
ஜான் பாண்டியன் : ஒரு கவர் மெண்ட் இருக்குன்னா அதற்கு ஒத்துழைப்பு தந்து மக்களுக்கு நன்மை செய்யனுங்கிறதைவிட அதை டேமேஜ் பண்ணனும்னு நினைக்கிறாங்க. இது எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி! நான் பொதுவான கருத்தைத்தான் சொல்றேன். இப்படி அரசியல் ரீதியான ஒரு சில சதிகளை வச்சுக் கூட வன்முறை நடக்கலாமில் லையா?
ஒவ்வொரு கிராமங்களும் திரண்டு போய் கொலை பண்ற தில்லை. அது தேவேந்திர குல சமு தாயமாக இருந்தாலும் சரி! தேவர் குல சமுதாயமாக இருந்தாலும் சரி! ஒரு சில விஷமிகள் இருந்துக் கிட்டுதான் பிரச்சினை பண்றாங் களே தவிர... கிராமங்கள்ல பிரச் சினை கிடையாது. இதை இந்த சமூக விரோதிகள் பர்ப்பஸா பண் றாங்கன்னு கூட சொல்லலாம்.
இப்படி பிரச்சினைகள் வரக் கூடாது என்பதற்காகத்தான் சிலை கள் வைப்பது தவிர்க்கப்படனும். இருக்குற சிலைகளே போதும்னு சொல்றேன். தலைவர்களை மதிக்க னும்னா அந்தந்த கிராமத்துலே இருந்தே விழாவைக் கொண்டாட லாமே. ஒட்டுமொத்தமா திரண்டு போகனுமான்னு கேட்குறேன்.
ம.ரி. : தலைவர்களுக்கு சிலைகளை வைப்பதுதான் அவர்களை மதிப்பதாக, பெருமைப்படுத்துவதாக ஆகுமா?
ஜான் பாண்டியன் : தலைவர்க ளைப் பெருமைப்படுத்த வேண் டும் என்ற எண்ணத்தில்தானே தலைவர்களின் சிலைகள், நினை வுச் சின்னங்கள் வைத்தோம். ஆனால் செத்த தலைவர்களுக்கு சிலையை வைத்து அரசியலாக்கி, உயிரோடு இருக்கும் மனிதர்களை கொன்று குவித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த உயிர் பலிகள் இனி நடக்கக் கூடாது.
தேவர் உயிராக இருந்தாலும் சரி, தேவேந்திரர் உயிராக இருந் தாலும் சரி... எந்த சமூகத்தினரின் உயிராக இருந்தாலும் சரி! உயிர் உயிர்தானே. விலை மதிக்க முடி யாத உயிரை இப்படி பலி வாங் கிக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் மோட்டிவேஷன் பண்ணி அரசி யல் செய்து கொண்டிருந்தால் இதன் நிலைப்பாடுதான் என்ன?
1957ல தியாகி இம்மானுவேல் கலவரத்துக்கு அப்புறம் இப்போது தான் அங்கே பெரிய கலவரம் உரு வாகிக்கிட்டிருக்கு. டெய்லி இங்க ஒண்ணு அங்க ஒண்ணுன்னு கொலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இதன் மூலம் சிலர் ஆதாயம் தேடப் பார்க்குறாங்க. ஒரு சில தலைவர்கள் மக்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் அடை யப் பார்க்குறாங்க. இது ரெண்டு தரப் புலயும் இருக்குற ஒரு சில தலைவர்களைச் சொல்றேன்.
ம.ரி. : காவல்துறையின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாததும் கலவரத்திற்கு காரணமில்லையா?
ஜான் பாண்டியன் : சமீபத்துல பரமக்குடியில நடந்த சம்பவத்தை பார்த்தீங்கன்னா... தேவேந்திர சமூ கம் வசிக்கக் கூடிய கிராமத்துக் குள்ளே ஒரு வண்டி போயிருக்கு. அந்த கிராமத்து வழியா போகக் கூடாதுன்னு போலீஸ் கட்டுப் பாடு விதிச்சிருக்கு. அதை மீறி போறாங்க.
அந்த கிராமத்துல இருக்குற வங்க, தங்களைத்தான் தாக்க வர்றாங்கன்னு நினைத்து சிலபேரு ஒண்ணு சேர்ந்து ஒரு கொலையை பண்ணிடறாங்க. நான் என்ன சொல்றேன்னா... இந்த சூழல்ல ஒருத்தனோ, அஞ்சு பேரோ, பத்து பேரோ சேர்ந்து கொலை பண் ணாங்கன்னே ஒரு உதாரணத் துக்கு வச்சுக்கோங்க... அதுக்காக 250 பேர் மேல கேûஸ போட்டு அடக்குமுறை செய்யுறது நியா யமா?
ஒரு கொலைக்காக இத்தனை பேர் மேல கேஸ் போடுறது தவ றில்லையா? கொலையை யார் செய்தாலும் தப்புதான். எவன் செஞ்சானோ அவனை கண்டுபி டிங்க; தண்டிங்க. அதை ஏத்துக்க றோம். ஆனால் அதை விட்டுட்டு கிராமத்து அப்பாவிகளை எல் லாம் பிடிக்கும்போது, "நாம சும்மா இருக்கும்போதே கேûஸ போடுறாங்களே அப்ப நாம ஏன் செய்யக் கூடாது'ங்கிற மனநி லைக்கு வந்துட்டா என்ன பண் ணுவீங்க?
ம.ரி. : அப்படியானால் காவல்துறையே குற்றவாளிகளை உருவாக்குகிறது என்று நினைக்கிறீங்களா?
ஜான் பாண்டியன் : உண்மை தான். இதுபோன்ற நடவடிக்கை களால குற்றவாளிகளை உருவாக் குறதை காவல்துறை தவிர்க்கணும். காவல்துறை உண்மையான குற்ற வாளிகளைப் பிடிக்கணும். ஒண் ணும் செய்யாமலே என் மீது பொய் வழக்கு போடலையா? நீதி பதியே எனக்கு தண்டனை கொடு க்க முடியாதுன்னு சொல்லியும் பொய் வழக்குன்னு தெரிஞ்சே பழி வாங்குறதுக்காக எனக்கு தண் டனை கொடுக்கலையா?
சட்டத்துல இடமில்லாத நிலை யில எனக்கு தண்டனை கொடுத் தாங்க. அப்படியிருக்கும்போது, அப்பாவிகள் மீது வழக்கு போடப் படும்போது அவர்கள் காவல்து றையினரால் தூண்டப்படுகிறார் கள். நாம ஒண்ணுமே செய்யாம நம்ம மேல அநியாயமா கேûஸ போடுறாங்க. அப்ப நாம ஏன் செய் யக் கூடாதுன்னு அவங்க செஞ்சா இதுக்கு போலீஸ்தானே கார ணம்? அப்ப இது வேண்டாமில்ல!
ம.ரி. : காவல்துறையினருக்குள் இருக்கும் சாதி உணர்வு வன்முறைகளுக்கு காரணமாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு. உண்மை அறியும் குழுக்களும் பல்வேறு சர்ந்தர்ப்பங்களில் இதை வெளிப்படுத்தியுள்ளன. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஜான் பாண்டியன் : இது நூறு சதவீதம் உண்மை. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. உதார ணத்திற்கு சொல்கிறேன். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திரு நெல்வேலி இங்கெல்லாம் இருக் குற ரிசர்வு போலீஸ் குடியிருப்பை போய்ப் பாருங்க. தேவர் சமூகத் தைச் சேர்ந்தவர்களோட பிளாக் தனியா இருக்கும். அங்க அவங்க மட்டும் தனியா இருப்பாங்க. அங்க மற்ற சாதிக்காரங்களுக்கு இடம் கொடுக்க மாட்டாங்க. நாடார் பிளாக் தனியா இருக்கும். அங்க வேற சாதிக்காரங்களுக்கு கொடுக்க மாட்டாங்க. தேவேந்திர குல மக்கள் இருக்கிற பிளாக்ல அந்த சமூக மக்கள் மட்டும்தான் இருப்பாங்க. வேற சாதிக்காரங்க இருக்க மாட்டாங்க.
இது தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக இருக்கக் கூடிய உண்மை நிலை. சட்டத்தைப் படித்து விட்டு, சத்தியப் பிரமா ணம் எடுத்து விட்டு வந்த அதிகாரி களே இப்படி (சாதி ரீதியாக) பிரித்து வைக்கப்பட்டிருந்தால் அப்ப கம்யூனல் மோடிவேஷனை யார் உருவாக்குறது?
ம.ரி. : அப்படியானால் கலவரம் அதிகரிக்க இந்த சாதி உணர்வு கொண்ட காவல்துறையினர் பெருமளவு காரணமாகிறார்களா?
ஜான் பாண்டியன் : உறுதி யாக! (மூன்று முறை சொல்கிறார்) கலவரம் உருவாக சாதி வெறி பிடித்த அதிகாரிகள்தான் காரணம். இதில் எந்த மாற்றமும் கிடை யாது. ஒரு தேவர் பக்கத்துல ஒரு தேவேந்திரனை உட்காரவச்சா அது என்ன தப்பா? அதிகாரிகள் ஏன் பிரித்து குடியிருப்புகளை கொடுக்கிறார்கள்?
அதே மாதிரி - டியூட்டிங்கிற பேர்ல தேவர்களை அடிக்கணு ம்னா தேவேந்திரர்களை அனுப் புறது, தேவேந்திரர்களை அடிக்க னும்னா தேவர்களை அனுப்பு றது... இது தப்பில்லையா? இப்படி தனித்தனியா போலீஸ் ஃபோர்ûஸ பிரிச்சு, இதுக்கு ஒரு அதிகாரி அதுக்கு ஒரு அதிகாரி!
இப்படி சப் டிவிஷன் பிரிக்கி றது காவல்துறை உயரதிகாரிகள் தானே? எந்த அதிகாரி நியூட்ரலா இருக்காங்க? பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்ததுக்கு சாதி வெறி பிடி த்த காவல்துறைதானே காரணம். பரமக்குடி சம்பவத்தின் சி.டி.யை நீங்க போட்டுப் பாருங்க. மஃப்டி யில இருக்குற ஒரு ஏட்டோ, எஸ்.ஐ.யோ அடிப்பான்பாருங்க... இவனெல்லாம் சாதி வெறி பிடித்த வன். டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுத்து இது மாதிரி அதிகாரி களை டிஸ்மிஸ் பண்ணணும்ங்கி றேன்.
ம.ரி. : இரண்டு தலைவர்க ளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கலவரம் வரலாம் என்கிற முன்னெச்சரிக்கையோடு காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்தானே செய்கிறது?
ஜான் பாண்டியன் : இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடுககள் செய்யப்பட்ட பின்பும் கலவரம் நடந்திருக்கிறது. பாம்பு விழுந் தான் கிராமம் உள்பட சில பகுதி கள் ரிஸ்ட்ரிக்டட் ஏரியான்னு போலீஸ் சொல்லுது. 20க்கும் மேற் பட்ட வாகனங்கள் மீறிப் போகும் போது போலீஸால தடுக்க முடி யல. ஊருக்குள்ளே கலவரம் பண் ணனும்ங்கிற நோக்கத்துல போற தால கலவரம் நடக்கிறது.
ம.ரி. : காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளதாகக் கருதுகிறீர்களா?
ஜான் பாண்டியன் : பலவீனம் என்பதைவிட, காவல்துறையின ரால் எல்லா இடங்களுக்கும் பாது காப்பு போட முடியாது என்றே வைத்துக் கொள்வோம். வம்பி ழுக்க வேண்டும் என்றே ஒரு குரூப் அலைகிறது. அந்தப் பக்கம் போக வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கும்போது இவர்கள் ஏன் அதை மீறி அங்கே போகனும்? அப்படியானால சட்டத்தை மீறிய வர்கள் மேலதானே நடவடிக்கை எடுக்கணும்? அந்த கிராம மக்கள் என்ன பண்ணாங்க? கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டவங்க மேல கேஸ் போட்டா அது தப்பில் லையா?
இதெல்லாம் நடக்கக் கூடாது என்றுதான் தலைவர்களை மதிக்க னும்னா அந்தந்த கிராமத்துல கொண்டாடுங்க. பூஜை பண் ணுங்க என்கிறேன். நம்ம சி.எம். தேவர் குரு பூஜைக்காக பசும் பொன்னுக்கு போவாங்க. இந்த முறை நந்தனத்துலேயே கொண் டாடலையா? இந்த மாதிரி அந் தந்த கிராமத்துல பண்ணட்டுமே. ஏன் எல்லோரும் படையெடுத்துப் போகணும்?
ம.ரி. : ஆக, இத்தனை பிரச்சினைகளும் சிலையை மையப்படுத்திதான் ஏற்படுகின்றன என்றால் சிலைகள் தேவைதானா? உங்கள் நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொல்லுங்கள்?
ஜான் பாண்டியன் : சிலைகள் என்பது தேவையில்லை என்று நானும், நீங்களும் சொன்னால் யார் ஏற்றுக் கொள்ளப் போகி றார்கள்? இதை வைத்து அரசியல் பண்ணுவாங்க. இருக்கின்ற சிலை கள் போதும். இனிமேல் சிலைகள் வேண்டாம். ஷார்ட்டா சொன் னால்... செத்தவருக்கு சிலை வைத்து இருக்கிறவர்களை கொல் கிறார்கள். அது வேண்டாம். ஏற் கெனவே வைத்த சிலைகளை எடு க்க முடியாது. எடுத்தால்... அதுவே கலவரமாக ஆகும். இதுவும் பொலிட்டிகல் இஷ்யூ ஆகும்.
ஒரு சிலையை திமுக தலைவர் திறந்திருப்பார்; ஒரு சிலையை அதிமுக தலைவர் திறந்திருப்பார். கம்யூனிஸ்ட் தலைவர் திறந்து வச்சிருப்பார். "நான் வச்ச சிலையை நீ எப்படி எடுக்கலாம்?'னு பாலி டிக்ஸ் பிரச்சினை வரும். அது வேண்டாம். அதனால் இருக்கின்ற சிலைகள் போதும். இனிமேல் எந் தக் காலத்திலும், எந்தக் காரணத் திற்காகவும் சிலைகள் வைக்கக் கூடாதுங்கிறதுதான் என்னோட அழுத்தமான கருத்து.
ம.ரி. : உங்கள் அரசியல் நடவடிக்கைகள் சமீப காலமாக குறைந்திருப்பதாக தெரிகிறதே... அரசியல் ஈடுபாடு குறைந்து விட்டதா?
ஜான் பாண்டியன் : அரசியல் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைப்பை பலப்படுத்தும் முயற்சிகளில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். பத்திரிகைகள் எதுவும் இந்தச் செய்திகளைப் போடுவதில்லை. அதுதான் உண்மை. சில தினங்க ளுக்கு முன் நாங்க நடத்துன செயற்குழுவை எந்த பத்திரிகை யில போட்டாங்க? சின்னதா பிட் செய்தி மாதிரி போடுறாங்க. எங் கள் கட்சி செய்திகளைப் போடக் கூடாதுங்கிறதுல ஒரு சில பத்திரி கைகள் தெளிவாக இருக்கு.
ஆக, என்னுடைய அரசியல் முழு மூச்சுடன் நடந்து கொண்டி ருக்கிறது. தமிழக மக்கள் முன் னேற்றக் கழகம் தொய்வடையா மல் சென்று கொண்டிருக்கிறது.
ம.ரி. : தென் மாவட்டங்களில் இருக்குற அளவிற்கு வட மாவட்டங்களில் உங்கள் கட்சி வளரவில்லையே? உங்கள் அரசியலை வட மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவில்லையா?
ஜான் பாண்டியன் : அந்த முயற்சியில்தான் இப்போது சென்னை, விழுப்புரம், கடலூர் என்று ஒவ்வொரு மாவட்டமாக போய்க் கொண்டிருக்கிறோம். இது வட மாவட்டங்களிலும் இறங்க வேண்டும் என்கிற எண் ணத்தில்தானே!
ம.ரி. : தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சாதி அடையாளத்தை தாண்டிய கட்சியாக்கும் முயற்சியா இது?
ஜான் பாண்டியன் : ஆமாம். எங்கள் கட்சியில் செட்டியார், கோனார், நாடார், முஸ்லிம் என்று அனைத்து சமூக மக்களையும் பொறுப்பாளர்களாகப் போட்டு முறையாக செய்து கொண்டிருக்கி றோம்.
அதே சமயம், தென் மாவட்டங் கள்ல இருக்குற தேவர்களும், நாங் களும் 30 வருஷத்துக்கு முன்னாடி அடிச்சிக்கிட்டு கிடந்தோம். இப்ப நாங்க அண்ணன் - தம்பியாகத் தானே பழகிக்கிட்டிருக்கோம். அவங்க விழாக்களுக்கு நான் போகிறேன். எங்க விழாக்களுக்கு அவங்க வர்றாங்க. இப்ப வரைக் கும் எங்களுக்குள்ள எந்த பிணக் கும் இல்லையே
சாதி உணர்வுகள் பின்னுக்ககு தள்ளப்பட்டு இரண்டு சமூ கத்திற்கும் மத்தியில் சகோதர உணர்வுகள் மேலோங்க வேண் டும். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகோதர உணர்வுகளை நோக்கி இரு சமூகமும் பயணிக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளும்!