தஞ்சையில் ராஜராஜசோழன் சதய விழா நடக்கிறது. இதில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்க, தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது, அவர் மாலையிடக்கூடாது என்று 20க்கும் மேற்பட்ட ஒரு தரப்பினர் சூழ்ந்து நின்று தடுத்தனர். அப்போது, போலீஸர் அவர்களை மறித்து அழைத்துச் சென்றனர்.
இதனை கண்டித்து அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் ஜான் பாண்டியன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றார்.