செய்த நாள் : Nov 06
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசாவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.சந்திரன், அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.வி.முத்துராக்கு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
* காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி, தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அறப்போரை தமிழக அரசு நடத்த முன்வர வேண்டும்.
* தமிழக தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லை ரெயில்வே கோட்டத்தை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
* பட்டியல் சாதியில் இடம் பெற்றுள்ள பள்ளர், குடும்பன் காலாடி, பன்னாடி, வாதிரியாளர், தேவேந்திரகுலத்தார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றை பெயரால் அறிவிக்க வேண்டும்.மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.