Thursday, April 26, 2012

திமுக – அன்று அண்ணாவால் எழுச்சி இன்று கலைஞரால் வீழ்ச்சி




அதிமுக கட்சியை திராவிட இயக்கத்தின் வடிவமாக பார்க்கவே முடியாதுகட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதனால், வேறு வழியின்றி, எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி அதுஎம்ஜிஆரின் சினிமாப்புகழால் வளர்க்கப்பட்ட கட்சி அது. அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்தே அதற்கென்று ஒரு தனிப்பட்ட கலாச்சாரமும், பண்பாடும் பேணி வளர்க்கப்பட்டனஅது என்னவென்றால், சுய சிந்தனை இல்லாமல், அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே.  

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த, படித்தவர்கள் கூட, எம்.ஜி.ஆரின் துதிபாடிகளாகவே எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டார்கள்எதிர்த்து குரல் கொடுப்பது என்ற எண்ணம் ஏற்பட்டால் கூட, அவர்கள் ராமாவரம் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு, எம்ஜிஆர் கையால் கும்மாங்குத்து வாங்குவார்கள்இதுதான் அதிமுகவின் பண்பாடு, கலாச்சாரம்ஒரே தலைவர், அவரன்றி ஒரு அணுவும் அசையாது என்ற கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான், நடிகை என்ற பின்புலத்தால், கூட்டத்தைக் கூட்டுவதற்காக, எம்ஜிஆரால் ஒரு பேச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா இன்று அதிமுகவுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் ஒருவர் கூட, கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை.

எம்ஜிஆருக்கப் பின், அதிமுகவுக்கு தலைமையேற்ற ஜெயலலிதாவின் தலைமயின் கீழும்,  அடிமைகளின் விசுவாசமும், அடிமை எண்ணமும் பன்மடங்கு மேலோங்கியிருக்கிறதே தவிர, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று ஒருவரைக் கூட அடையாளம் காட்ட முடியவில்லைஇந்த அடிமைகளின் எண்ணம் எந்த அளவுக்கு பாழ்பட்டு இருக்கிறதென்றால், ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவைக் கூட தலைவராக ஏற்றுக் கொள்வார்கள், ஆனால், நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இருக்கும் ஒருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையிலேயே அதிமுக இருக்கிறது.

அதிமுகவுக்கு மாறாக, திமுகவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறதுநீதிக்கட்சியில் தொடங்கி, தமிழகத்தில் ஒரு யுகப்புரட்சியையே ஏற்படுத்தியது திராவிட இயக்கம் என்றால் அது மிகையல்ல.   அன்று திராவிட இயக்கம் ஏற்படுத்திய புரட்சியே இன்று வரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வழி கோலியது.

1937ல் அப்போது சென்னை ராஜதானியை ஆண்ட காங்கிரஸ் கட்சி, ராஜாஜி உத்தரவின் பேரில் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கியதுஇதனை எதிர்த்து நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அறிஞர் அண்ணா, கி..பெ.விசுவநாதம், சாது சண்முகானந்த அடிகளார், ஈழத்து சிவானந்த அடிகளார், சாது அருணகிரிநாதர், மறைமலையடிகள் ஆகியோர் பங்கு பெற்றனர்பெரியாருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
நீதிக்கட்சி, வெள்ளையர்களின் துதிபாடிகளால் நிரப்பப்பட்டிருந்த நேரத்தில்தான் அண்ணா, சேலம் மாநாட்டில் புதிய தீர்மானங்களைக் கொண்டு வருகிறார்வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தரப்பட்ட சர், ராவ் பகதூர், திவான் பகதூர், ராவ் சாகேப் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும், கௌரவ மேஜிஸ்த்திரேட் பதவிகளை துறக்க வேண்டும், பெயருக்கு பின் உள்ள சாதிப் பட்டங்களை துறக்க வேண்டும், தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக் கட்சி) என்ற பெயரை மாற்றி இனி திராவிடர் கழகம் என்று அழைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அப்போதுதான் திராவிடர் கழகம் உருவாகிறது.

இந்த திராவிடர் கழகம், தமிழர் நலன், மொழிப்பாதுகாப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளில் பயணிக்கிறதுஆரம்பகாலத்தில் அண்ணாவோடு சரி சமமாக இருந்த தலைவர்கள் .அன்பழகன், வி.ஆர்.நெடுஞ்செழியன், தவமணிராசன், இளம்வழுதி, கே..மதியழகன், .பி.ஜனார்த்தனம் ஆகியோர்.
பின்னர் வந்து சேர்ந்தவர்களில் ஒருவர்தான் கருணாநிதிஅவரோடு திராவிடர் கழகத்தில் இணைந்தவர்கள் அரங்கண்ணல், அப்பாவு கோகுலகிருஷ்ணன், போன்வேறு போன்ற இளைஞர்கள்.   கருப்புச் சட்டை அணிவது திராவிடர் கழகத்தின் அடையாளம் என்று உருவாக்கப்பட்டது.

1946ல் இந்தி மீண்டும் கட்டாயமாக்கி காங்கிரஸ் அரசு உத்தரவிட்ட போது, மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. தொடர்ந்த இந்த இந்தித் திணிப்பு, தனி திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு வலு சேர்த்துக் கொண்டே வந்ததுஇதன் தொடர்ச்சியாக சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு 14 அக்டோபர் அன்று கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1949ம் ஆண்டு 72 வயதுப் பெரியார் 26 வயதுள்ள மணியம்மை என்ற இளம்பெண்ணை பதிவுத் திருமணம் செய்ததே திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்படுவதற்கு வித்தாக அமைந்ததுபெரியாரின் இந்தத் திருமணம், திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

காலங்காலமாக, பெண் விடுதலை குறித்து, பட்டி தொட்டியெங்கும் பேசி வந்த திராவிடர் கழகத்தினர், பெரியாரின் இந்தச் செய்கையைக் கண்டு, கூனிக் குறுகினர்.

பெரியாரின் இந்த முடிவைக் கைவிடுமாறு, திராவிடர் கழகத் தொண்டர்கள் மாநிலமெங்கும் தந்தி அனுப்பினர்கடிதம் எழுதினர்இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை இதழுக்கு பொறுப்பாக இருந்த ஈவெகி சம்பத் வெளியேறினார்அண்ணாவோடு கலந்து பேசிய பிறகு, பெரியாரின் முடிவை மாற்றக் கோருவதென்று முடிவு செய்யப்பட்டு, கும்பகோணம் கே.கே.நீலமேகம் தலைமையில் என்.வி.நடராஜன், குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு, கடலூர் குருசாமி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு, அப்போது ஏற்காட்டில் தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து அவர் முடிவை கைவிடுமாறு கோரினர்ஆனால், பெரியார் தன் முடிவைக் விடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்தத் தூதுக்குழுவினரும், கழக முன்னணித் தோழர்களும் அண்ணாவின் தலைமையில் சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் 3 ஜுலை 1949ல் கூடுகின்றனர்அவர்கள் கூடி, பெரியாருக்கு ஒரு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்தச் சேதியாலே ஏற்பட்ட விளைவு, கண்ணீ…. தூய்மையுள்ளம் கொண்ட ஆயிரமாயிரம் இயக்கத்தாழர்கள் கண்ணீர் சொரிந்த வண்ணம் உள்ளனர்.
இந்தக் கண்ணீரை அவர் எதிர்ப்பார்த்திருப்பாரா ? அல்லது மதிக்கப்போகிறாராஇது ஒரு புறமிருக்க எதற்கும் கலங்கா உள்ளம் படைத்த இளைஞர்கள் இந்தச் சேதி கேட்டு கண்ணீர் வடிப்பது போல வேறு எப்போதும் நடைபெற்றதில்லைஉலகச் சம்பவங்களிலேயே இதற்கு இணையானதாக வேறு ஒன்றைக் காட்டவும் முடியாது.

திருமணம் செய்வது சொந்த விஷயம்; வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வது கூட சொந்த விஷயம்தான்அதிலும் தலைவராய் உள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது, வயோதிகத்திலே செய்து கொண்டாலும் கூட கேட்டுத் திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ, கோபமடையவோ மட்டுமேதான் தோன்றுமேயன்றிக் கண்ணீர் கிணம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது பெரியாரின் திருமணச் செய்தி கேட்டு.

நாம் அவரை அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லைஇயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அரைத் தங்கள் குடும்பத் தலைவரென வாழ்க்கை வழிகாட்டியென ஏற்றுக் கொண்டு எந்த இயக்கத்தவரும் அதன் தலைவரிடமும் காட்டாத அளவு மரியதை உணர்ச்சியை, அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

நமது கண்களக்கு அவர் நமது மானத்தை மீட்டுத் தரும் மகானாக, நம்மை பன்னெடுங்க காலமாகக் கொடுமைப் படுத்தி வரும் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப் போர் புரியும் மாவீரராகக் காட்சி தந்து வந்திருக்கிறார்.

வாழ்க்கைப் பிரிச்சினையிலே அவர் மிகச் சிறப்பாகவும் மிகத் தெளிவாகவும், எடுத்துப் பேசி வந்த பகுதி திருமணத்தைப் பற்றியது. திருமண முறையிலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவியாக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும், அவர் ஆற்றியது போல வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

உரையுடனா நின்றதுஇல்லை ஊரே மாறிற்றுரிஷிகள் வகுத்து வைத்து விட்டுப்போன திட்டங்களே மாறினமகிழ்ந்தோம்பெருமை கொண்டோம். ஆணவம் கொண்டோம். பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்ததைக் கேட்டு கிழவர்கள் கலங்கினர்குமரிகள் குதூகலித்தனர்.   காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப்பருவத்திலே வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால் மானரோஷத்தில் அக்கறையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார், நமக்கெல்லாம் புது முறுக்கேற்றினார்.
பொருந்தாத் திருமணம் நாட்டுக்கு பெரியதொரு சாபக்கேடு என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து தங்கபஸ்பம் தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே பொருந்தாத் திருமணம் யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்து தேட வேண்டிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் எடுத்தது.

என் போன்ற வயதானவர்கள் கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாதுஅப்படியாவது ஒரு எண்ணம் வந்து தொலைந்தால், தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக ஒரு கிழத்தை பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே பச்சைக் கொடி போன்ற ஒரு பெண்ணை வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய பயதும், பக்குவமும் கொண்ட பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதா ? காரணம் ஆயிரம் காட்டட்டுமேஎந்த மானமுள்ளவன் அந்த மானமுள்ளவன் கல்யானத்தைச் சரியென்று சொல்லுவான்என்று அவர் பேசிய பேச்சை கேட்காத ஊரில்லை.
இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும் ?

அந்தோ ! எத்தனை பெரிய தாக்குதல் ! எத்துணை அவமானம் தரும் காரியம் ! இதற்கோ இவ்வளவு எழுச்சி பெற்றோம் ! இந்தப் பழியையும் ஏற்றுக்கொள்ளவோ இந்த அளவு வளர்ந்தோம் ! என்னே நம் நிலை ! என்னே நம் கதி ! எங்கே நமக்குப் புகலிடம் ! என்ன தான் நமக்கு எதிர்காலம் ! எதிரே பெரும் இருள் ! சுற்றிலும் கேலி பேசுவோர் ! இடையே நாம் ! நெஞ்சில் பெரும் வேதனை ! கண்களிலே நீர் ! கை கால்களிலே நடுக்கம் ! இதற்கோ இந்த வளர்ச்சி !

இதுதான் அண்ணாவின் அன்றைய மனநிலைஇதன் பிறகு உடனடியாக பெரியார் திருமண ஏற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், கைவிடவில்லையென்றால் பொதுக்கூட்டம் போட்டு கண்டிக்க வேண்டி வரும் என்பதையும் வெளிப்படையாகவே அறிவித்து தீர்மானம் போட்டார் அண்ணா.

அண்ணாவின் அறிக்கைக்குப் பிறகு பெரியார் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதது மட்டுமல்லதிராவிடர் கழகத்தின் வாரிசு என்ற மணியம்மையை அறிவிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவுகின்றன. இதை உண்மை என்று அறிவித்து பெரியார் அறிக்கையும் விடுகிறார்.

வெகுண்டெழுந்த அறிஞர் அண்ணா, “பெரியாரேஇப்படி ஓர் அநியாயமான கொள்கைக்கு முரணான, மக்கள் நகைக்கத்தக்க பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீரே.. இது சரியா என்று கேட்கிறோம்.

போடா போநான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன் இயக்கத்தையே மணியம்மையிடம் ஒப்படைக்கிறேன்அப்படி ஒப்படைப்பதற்காகவே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் பெரியார்.

கழகத்தில் அதிக காலம் பணியாற்றியவர்கள் உண்டு. திறமையானவர்கள் உண்டுசொத்தை, சுகத்தை இழந்தவர்கள் உண்டுகண்ணையும் கருத்தையும் இழந்தவர்கள் உண்டு, இவர்கள் யாவரும் வாரிசாக்க முடியவில்லைஇவர்களில் யாருக்கும் இயக்கத்தை நடத்திச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

எந்த முறையில்பெரியாரின் துணைவியாகும் முறையில். என்ன தகுதியால்பெரியார் அறிக்கையில் கூறியபடி, “நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும், உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கின்றதுமான மணியம்மை”.
திராவிடர் கழகத்துக்கு வாரிசு நியமிக்கும் முறை குறித்து அண்ணாவாரிசு முறை எதற்குயார் செய்யும் ஏற்பாடுஎந்தக் காலத்து முறைஐதராபாத் நிஜாமுக்கும்,ஆதீனகர்த்தாக்களுக்கும் ஏற்பட வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன்  ஏற்படுகிறதோ தெரியவில்லை.

ஒரு இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானாஅல்லது நடைமுறையிலே வெற்றி தரக்கூடியதுதானா ? திராவிடக் கழகம் அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்பட தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானாஇதற்காகத்தானாவெள்ளிக் குண்டுகளை வீசுங்கள்வேலை நடப்பதைப் பாருங்கள்என்று விடுதலை முழக்கமிட்டது ?

இதோ விரட்டப்படுகிறோம். நாம் கட்டிய கோட்டையிலிருந்து, நாம் பாடுபட்ட கழகத்திலிருந்து, தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். புதியவாரிசு”  தேடிக் கொண்டு, திக்கற்றவர்களாகி, திகைப்புண்டவர்களாகி, பாடுபட்டதின் பலனைப் பறிகொடுத்துவிட்டு, குடிபுகுந்த குமரி கோலோச்ச முற்படுவது கண்டு, குமுறி, குன்றி, கோவெனக் கதறிக் கொண்டு நமது வீட்டை விட்டு வெளியேறுகிறோம்.” என்று தனது மனக்குமுறலை வெளியிட்டார் அண்ணா.
இதையடுத்து அண்ணா தலைமையில், எண் 7, பவழக்காரத்தெரு, சென்னையில் அண்ணா தலைமயில் கூடிய கூட்டம்திராவிடர் கழகத் தலைவர் பெரியார் .வெ.ரா அவர்களின் திருமணத்திற்குப்  பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தை செயலாற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கின்ற நாட்டு நிலையில் இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளம், இலட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும் நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும், நாம், “திராவிடர் முன்னேற்றக் கழகம்என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதென இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

காலையில் பவழக்காரத் தெருவில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது.

அந்த விழாவிலே, கொட்டும் மழையில் பேசினார் அண்ணா.   “திராவிடர் கழகமாகட்டும்திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும்படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான்திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும்இரு பூங்காக்களும் தேவைஒன்றோடொன்று பகைக்ககத் தேவையில்லை, அவசியமும் இல்லை.   எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்

இதுதான் திமுகவின் தொடக்கம்திமுக தொடங்கிய சில நாட்களிலேயே திராவிட நாடு இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு 3000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறதுஇத்தொகையைக் கட்டாவிட்டால், பத்திரிக்கை நின்று விடும் என்ற நிலையில், மக்களிடம் பணம் வசூலித்து, 3000 ரூபாயைக் கட்டகிறார் அண்ணா.   இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு விதித்துள்ள 3000 ரூபாய்க் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்று உத்தரவிடப்படுகிறதுஅப்போது என்ன நடந்தது தெரியுமா ?   அந்த 3000 ரூபாயையும், வசூலிக்கப்பட்ட பொதுமக்களிடம் திருப்பி அளிக்கிறார் அண்ணா.

அண்ணா எழுதியஆரிய மாயைஎன்ற நூலுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தடை விதித்ததுஇதையடுத்து அண்ணா கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக அண்ணா விடுதலை செய்யப்ட்டார்அடுத்ததாக அண்ணா எழுதியஇலட்சிய வரலாறுஎன்ற புத்தகத்துக்கும் தடை விதிக்கப் பட்டது.   .வி.ஆசைத்தம்பி எழுதியகாந்தியாக சாந்தியடைஎன்ற புத்தகத்துக்கும் தடைபுலவர் செல்வராஜ் எழுதியகருஞ்சட்டை ஒழிய வேண்டுமா ? “ என்ற புத்தகத்துக்கும் தடை.

இதனைத் தொடர்ந்து, டால்மியாபுரம் ரயில்நிலையத்துக்கு கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு என்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட, பல்வேறு திமுகவினர் தண்டனையடைகிறார்கள்.

1957ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், முதன் முறையாக திமுக போட்டியிடுகிறது.  142 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது.

இதன் பிறகு கட்சி சந்தித்த மிகப் பெரிய பிரிவு ஈவெகி சம்பத் அவர்களின் பிரிவுஅண்ணாவோடு ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக, பிரிந்துதமிழ் தேசியக்கட்சிஎன்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

1962ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றதுஆனால் அறிஞர் அண்ணா தேர்தலில் தோல்வியடைந்தார். இது வரை, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகளின் தாக்கம் சரிவடைந்து, திராவிடக் கட்சி அந்த இடத்தைக் கைப்பற்றியது.

தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற திமுக, 1967ல் 138 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

திமுகவின் கொள்கைகள் சரியோ தவறோ, திமுக இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மைபெரியார் ஒரு வேளை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், திமுக என்ற இயக்கம் தோன்றுவதற்கு பெரிதான காரணம் இல்லாமல் போயிருக்கக் கூடும்.

மணியம்மையை திராவிடர் கழகத்தின் வாரிசு என்று பெரியார் அறிவித்தவுடன், அறிஞர் அண்ணா எப்படிக் கொதித்துப் போனார் என்பதை கட்டுரையின் தொடக்கத்திலே படித்திருப்பீர்கள்.   இப்படித் துவங்கப்பட்டதுதான் திமுக.

இப்படிப்பட்ட வரலாறு உள்ள திமுக, இன்று எத்தகைய வீழ்ச்சியை அடைந்திருக்கிறதுஎந்தக் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக வீறு கொண்டு  எழுந்ததோ, அதே காங்கிரஸ் கட்சியால், நெருக்கடி நிலையின் போது சொல்லொன்னாத் துயருக்கு ஆளாகியது திமுகதிமுக கரை வேட்டியோடு சாலையில் நடமாடியவர்களையெல்லாம், காவல்துறை கைது செய்தது.   சிறையில் அடைக்கப்பட்ட திமுக தலைவர்கள், கடும் சித்திரவதைக்கும் தாக்குதலுக்கும் உள்ளானார்கள்.

அந்த நெருக்கடி நிலையில் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சித் தலைவி இந்திராவின் காலில் சரணடைந்தார் கருணாநிதி.   வண்டி வண்டியான ஆதாரங்களுடன், எம்.ஜி.ஆரும், மற்ற சில அரசியல் கட்சித்தலைவர்களும், வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை தன்அரசியல் வாழ்வையே அழித்து விடும் என்று பயந்த கருணாநிதி இந்திராவிடம் சரணடைந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவடையும் வரை, கருணாநிதி நடத்திய எத்தனையோ தகிடுதத்தங்கள் அவருக்கு ஆட்சியை மீட்டுத் தரவில்லைஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989ல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, அப்போது வரை, திராவிட இயக்கத்தின் அடித்தளமான கொள்கைகளுக்கு முழுமையாக எதிரானவராக மாறிப்போய் விடவில்லை.

1990ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டதும், 1991ல் ராஜீவ் மறைவுக்குப் பிறகு வந்த தேர்தலில், திமுக வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. அப்போது அமலில் இருந்த தடா என்ற கொடிய சட்டத்தின் கீழ், திமுக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.   மேலும் ராஜீவ் கொலைக்கே திமுகதான் காரணம் என்ற பிரச்சாரமும் அவிழ்த்து விடப்பட்டது.   1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியிடம், முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின.

திமுக என்ற இயக்கம் முழுமையான அழிவை நோக்கிச் சென்றது 2006ல் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான்.   முழுப் பெரும்பான்மைக்கு சில எம்எல்ஏக்கள் குறைவாக இருந்த காரணத்தினால், சிறுபான்மை ஆட்சி நடத்தி வந்த கருணாநிதி, திராவிட இயக்கத்தின் வரலாற்றுக்கு நேர் எதிரான நடவடிகைகளில் இறங்கத் தொடங்கினார். 2006ல் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்திலெல்லாம், இப்போது அவர் வேண்டும், வேண்டும் என்று போரும் ஈழம் குறித்து பேசியிருக்கலாம். அப்போது இணக்கமாகவே இருந்த மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களிடம் சொல்லி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கலாம்.

2008ல் இலங்கையில் போர் தொடங்கியதுமே, தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறி கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பது, ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.
2006 தொடக்கத்திலேயே, கட்சிக்குள் இரு மகன்களின் ஆதிக்கம் வெளிப்படையாக விரிவடையத் தொடங்கியது.   கருணாநிதிக்கு அடுத்தபடியாக திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டுமே இருந்து வந்தார்இதற்குப் போட்டியாக, தென் மண்டலத்தில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட அழகிரி, தன் தம்பி ஸ்டாலினை நேரடியான எதிரியாகப் பார்த்தார்.
2007 முதலே, அழகிரி, ஸ்டாலினுக்கு இணையாக, கட்சியில் கனிமொழியையும் வளர்த்து விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் கருணாநிதி இறங்கினார்அந்த முயற்சியின் வெளிப்பாடுகளே, சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள்.

மாறன் சகோதரர்கள் தங்கள் பங்குக்கு கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை.   கட்சியில் மூன்றாக அணிகள் பிரிந்து, ஒரே குடும்பத்திற்குள் கட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி வெளிப்படையாக தெரியத் தொடங்கியது.

2011ல் ஆட்சி இருந்தவரை குடும்பத்தை ஒட்டி வைத்திருந்த பசை, ஆட்சி கைவிட்டுப் போனதும், விரிசல் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது.
இன்று அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் மோதல்களை ஊடகங்கள் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளனகருணாநிதிக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு அழகிரி அல்லது ஸ்டாலினிடமே வந்தடையும், இவர்கள் இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்ற நிலையே இன்று திமுகவில் நீடிக்கிறது.

அழகிரி, ஸ்டாலின், மற்றும், கனிமொழியை விட திறமையான பேச்சாளர்களும், நிர்வாகிகளும், திமுகவில் இருந்தாலும் இவர்களில் ஒருவர் கூட, அடுத்த கட்ட தலைவர்களாக கருதப்படுவது இல்லை என்பதே, திமுகவின் வீழ்ச்சி.

கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஒரு ஆகர்ஷிக்கப் பட்ட தலைவராக உருவான வைகோவை, தன் உயிரை பறிக்கத் திட்டமிடுகிறார் என்று குற்றம் சுமத்தி வெளியேற்றினார் கருணாநிதி. வைகோவுக்குப் பிறகு, திமுகவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களே அற்றுப்போய் விட்டார்கள்.

அறிஞர் அண்ணா தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் மதியழகன், சம்பத், சிபி.சிற்றரசு, ஏவிபி.ஆசைத்தம்பி, டிகே.சீனிவாசன், என்.வி.நடராஜன், காஞ்சி கலியாண சுந்தரம் என்று பல்வேறு தலைவர்கள் இருந்தனர்ஒருவர் இல்லாவிட்டாலும் அடுத்தவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் அளவுக்குத்தான் அன்று திமுக இருந்தது.

அழகிரியா, ஸ்டாலினா, கனிமொழியா என்ற மூன்று பெயர்களைத் தவிர்த்து திமுகவுக்கு அடுத்து தலைமையேற்க ஒரே ஒரு தலைவர் திமுகவில் உண்டா ?   திராவிட இயக்கத்தின் வேராக இருந்த திமுக, திராவிட இயக்கத்தின் எச்சமாக இருக்கும் அதிமுகவைப் போலவே வீழ்ச்சியடைந்துள்ளது இன்றுதிமுகவின் கொள்கைகள் சரியோ தவறோஅது தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்றுஆயிரக்கணக்கான தொண்டர்களின் உழைப்பிலும், உயிர்த்தியாகத்திலும் உருவான இயக்கம் திமுக.

ஒரு ரயில் நிலையத்துக்கு தமிழ்ப்பெயர் வைப்பதற்காக தமிழகமெங்கும் இயக்கம் நடத்தி, துப்பாக்சிச் சூட்டைச் சந்தித்து உயிர்த்தியாகம் செய்த இயக்கம் திமுக.   நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி தடியடி பட்ட இயக்கம் திமுகஇப்படிப்பட்ட ஒரு இயக்கம், மாநிலத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு லட்சத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகையில் வாளாயிருந்திருக்குமாஅறிஞர் அண்ணா அமைதி காத்திருப்பாரா ?

அந்த திமுகவின் இன்றைய நிலை வேதனையான வீழ்ச்சிதானே

==================================================================
 
"கருணாநிதியைப் பற்றி எழுதிச் சலித்து விட்டதுகருணாநிதி இன்று ஒரு நடை பிணம்.   அவர் எப்போதோ இறந்து விட்டார்ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் 2ஜி பணத்தை எண்ணிக்கொண்டிருந்த அன்றே கருணாநிதி இறந்து விட்டார்தமிழக மீனவர்களை பேராசைக்காரர்கள் என்று அழைத்த அன்றே இறந்துவிட்டார்.   2ஜி ஊழலுக்கான முழுப்பொறுப்பு, .ராசாதான், தன் மகள் கனிமொழி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று ராம் ஜெத்மலானி வாதிட்ட அன்றே இறந்து விட்டார்" - இப்படிக்கு சவுக்கு




DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget